• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

கரோனா அப்டேட் - மாநிலங்களுக்கான உதவி மையங்கள்

Radha Shri
கர்ப்பகாலம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 26, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

இந்தியாவில் 600க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்தைப் பொருத்தவரை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கான உதவி மைய எண்கள் கீழ் உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது, கரோனா வைரஸ் சம்பந்தமாக  இந்த மையங்களுக்கு  தொடர்பு கொண்டு உதவியை நாடலாம்.

மாநிலங்களுக்கான உதவி மைய எண்கள்

Name of the State

Helpline Numbers

Central

01123978046

Andhra Pradesh

0866-2410978

Arunachal Pradesh

9436055743

Assam

6913347770

Bihar

104

Chhattisgarh

077122-35091

Goa

104

Gujarat

104

Haryana

8558893911

Himachal Pradesh

104

Jharkhand

104

Karnataka

104

Kerala

0471-2552056

Madhya Pradesh

0755-2527177

Maharashtra

020-26127394

Manipur

3852411668

Meghalaya

108

Mizoram

102

Nagaland

7005539653

Odisha

9439994859

Punjab

104

Rajasthan

0141-2225624

Sikkim

104

Tamil Nadu

044-29510500

Telangana

104

Tripura

0381-2315879

Uttrakhand

104

Uttar Pradesh

18001805145

West Bengal

3323412600

Andaman and Nicobar Islands

03192-232102

Chandigarh

9779558282

Dadra and Nagar Haveli and Daman & Diu

104

Delhi

011-22307145

Jammu

1912520982

Kashmir

1942440283

Ladakh

1982256462

Lakshadweep

104

Puducherry

104

நாவல் கரோனா வைரஸ் (COVID-19) என்றால் என்ன?

கடுமையான சுவாச நோய்க்குறி இருக்கும். கரோனா வைரஸ் (WHO: SARS-COV) என்பது இந்த  வைரஸுக்கு வழங்கப்பட்ட பெயர், இது சீனாவை தொடர்ந்து  உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை பாதித்தது மற்றும் 2003 ஆம் ஆண்டில் 700 க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். புதுமையான செயல்பாடுகளை கொண்ட வைரஸால் அதிகமாக   நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனால்  சுகாதார வல்லுநர்களுக்கு  தொற்று பரவாமல் தடுக்க சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது..

புதிய நோய்த்தொற்றின் அறிகுறிகள் SARS வைரஸைப் போன்ற ஒரு வடிவத்தையும் காட்டுகின்றன. இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவக்கூடிய திறன் உள்ளதா என்பதிலும் எதிர்மறை கருத்துக்கள் விஞ்ஞானிகளிடம் நிலவுகிறது. nCoV / Covid-19 வௌவால்கள்  அல்லது பிற காட்டு விலங்குகளிலிருந்து தோன்றியதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இறைச்சியைத் தவிர்ப்பதும் உதவியாக இருக்கும்.

SARS-Coronavirus 2003 என்றால் என்ன?

SARS நோய்த்தொற்று காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிக்கு காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் நடுக்கம் போன்றவை இருக்கும். இருப்பினும், இந்த அறிகுறிகளின் இருப்பு SARS நோய்த்தொற்றின் அறிகுறியாக இல்லை. கரோனா வைரஸின் குடும்பம் பொதுவாக விலங்குகளை பாதிக்கிறது மற்றும் அவற்றில் சில மனிதர்களைப் பாதிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன; SARS மற்றும் MERS (மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி). இந்த வைரஸ் குடும்பத்தின் தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி விலங்குகளுடன் பாதுகாப்பான தொடர்பைப்  பேணுவதாகும். ஏதேனும் விலங்குகளைத் தொட்டால் உங்கள் முகத்தையும் வாயையும் தொடும் முன் கைகளை நன்கு கழுவுங்கள் .

கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பாதுகாப்பாக இருக்க நீங்கள் முதலில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் நோய் மற்றும் வதந்தி இரண்டிற்கும் பலியாகாமல் இருக்க வேண்டும். இந்த வகையான நோய்த்தொற்றுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து  விலகி இருப்பதாகும் . எடுத்துக்காட்டாக, பொது இடங்களில், போக்குவரத்தில் பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

பிற முன்னெச்சரிக்கைகள் பின்வருமாறு:

 • வீட்டை சுத்தமாக வைப்பதை உறுதிசெய்யவும்.  நீங்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் எதையும் கழுவி  சுத்தம் செய்து பயன்படுத்துவது சிறந்தது.
 • அடிக்கடி  சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை தவறாமல் கழுவுதல் வேண்டும்
 • காய்ச்சல், இருமல், தும்மல், சளி  போன்ற அறிகுறிகளைக் காட்டும் நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்
 • குழந்தைகளுக்கு சுத்தமான துண்டுகள் மற்றும் துடைப்பான்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • குழந்தைகள் வெளியில் அதிகமாக விளையாட அனுப்பாமல் வீட்டிலேயே அவர்களை ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுப்படுத்துங்கள்.
 • கூட்டமாக சேர்ந்து இருக்கும் தருணங்களை  தவிர்க்கவும்.
 • விரைவான பயன்பாட்டிற்கு சானிடைசரை  உபயோகப்படுத்துங்கள்.
 • மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் பயன்படுத்த வேண்டாம்
 • உடலில் நீச்சத்து மற்றும் ஊட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுங்கள்.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்
 • கடல் உணவு மற்றும் அசைவத்தைத் குறைத்துக் கொள்ளலாம்

கரோனா பரிசோதனை ஆய்வகங்கள்

 1. கிங் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் - சென்னை 
 2. மருத்துவ கல்லூரி மருத்துவமனை – தேனி
 3. அரசு மருத்துவமனை - கோவை
 4. வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகம், திருநெல்வேலி மருத்துவ கல்லூரி
 5. பெருந்துறை மருத்துவமனை - ஈரோடு மாவட்டம்
 6. மற்றும் திருவாரூர், சேலம் ஆகிய ஊர்களிலும் பரிசோதனை ஆய்வகங்கள் அமைந்துள்ளன.

நாவல் கரோனா வைரஸ் சிகிச்சை முன்னெச்சரிக்கைகள்

 கரோனா வைரஸுக்கு (கோவிட் 2019) என்ன சிகிச்சை? NCoV என்பது முற்றிலும் புதிய வைரஸ் மற்றும் இன்னும் ஆய்வின் கீழ் உள்ளது. NCoV க்கு  தடுப்பூசி கண்டுபிடிக்க வில்லை  என்றாலும், தனிப்பட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவரை அணுகுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. முடிந்தவரை இதன் அறிகுறிகள் தெரிந்தால் உடனே சிகிச்சை மேற்கொண்டு குணப்படுத்துவதன் மூலம் நீங்கள் நலம் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கலாம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}