• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி - யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் ?

Bharathi
1 முதல் 3 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 08, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

உலகின் பல்வேறு நாடுகளும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த துவங்கி உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளித்த அல்லது பரிசீலிக்கும் நாடுகளின் பட்டியல்:

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் 12 – 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர், பயோ என்டெக் தடுப்பூசிகள் போட அனுமதி தரப்பட்டு, பல இடங்களில் தரப்பட்டும் வருகின்றனர். அமெரிக்காவில், இவற்றோடு மாடர்னா தடுப்பூசியும் குழந்தைகளுக்கு தரப்படுகிறது. அங்கு, டீனேஜருக்கு மட்டுமன்றி, 16 வயதுக்குட்பட்ட டீனேஜர் அனைவருக்கும் தரப்படவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசியும், குழந்தைகளுக்கான தங்கள் தடுப்பூசி ஆய்வுகளை தொடங்கியுள்ளன. அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசி ஆய்வு, 6 முதல் 17 வயது வரையிலான அனைவருக்கும் மத்தியில் செய்யப்பட்டு வருகிறது. இங்கு, இந்த தடுப்பூசி ஏற்கெனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தரப்பட்டு வருகின்றது.

ஐரோப்பிய யூனியன் நாடுகள்:

இத்தாலி Pfizer-BioNTech தடுப்பூசியை 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு செலுத்த மே 31 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

ஜூன் 7 முதல் 12-16 வயதுடைய குழந்தைகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது, அதே சமயம் போலந்து 12-15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளது.

ஜூன் மாதத்திற்குள் பிரான்ஸ் 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியை போட தொடங்க உள்ளது. 12-15 வயதுடைய சிறுவர் சிறுமிகள் பள்ளி ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசி ஷார்ட்டை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மட்டுமல்ல, இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கான சோதனைகளும் தற்போது  நடந்து வருகின்றன.

குழந்தைகளுக்கான சிகிச்சை பெரியவர்களுக்கான சிகிச்சையிலிருந்து எப்படி  வேறுபட்டது?

அறிகுறிகள் அற்ற எந்தக் குழந்தைக்கும் எந்த மருந்தையும் நாங்கள் பரிந்துரைப்பதில்லை. லேசான தொற்றின் போது, காய்ச்சல் மற்றும் பிற லேசான அறிகுறிகளை சரிசெய்ய எளிய பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கவும். இதேபோல், வயிற்றுப்போக்கிற்கு உப்பு சர்க்கரைக் கரைசல் மற்றும் அதிகமான நீராகாரம் கொடுக்கப்பட வேண்டும். மிதமான தொற்று முதல் கடுமையான தொற்று வரை, சிகிச்சையானது பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் சமமானதாகும்.

மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் எண்ணிக்கை அதிகரித்தல், கடுமையான இருமல், ஹைபோக்ஸியா, தொடர்ந்து காய்ச்சல், அல்லது தோலில் சொறி ஏற்படுதல், அதிக தூக்கம் போன்ற அசாதாரண அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

குழந்தைகளிடையே நெடுங்கால கோவிட்-19 தொற்றும் உள்ளன. நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து 3 முதல் 6 மாதங்கள் கழித்து கூட சில குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் புதிதாக ஏற்படுகின்றன. கடுமையான கோவிட் தொற்றிலிருந்து மீண்ட குழந்தைகளின் பின்தொடர் சிகிச்சைக்கு பெற்றோர்கள் தங்கள் மருத்துவருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.

நிபுணர்கள் கருத்து என்ன?

"தடுப்பூசி வேலை செய்கிறது" என்கிறார் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையின், குழந்தை தொற்று நோய்களுக்கான நிபுணர் நிக்கோல் ரிட்ஸ். "ஆனால் 12 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு நாங்கள் செய்ததைப் போலவே, வயது குறையும்போது நாம் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாழ்வின் முதல் ஆண்டில் நாம் பல தடுப்பூசிகளைப் போடுவது போலவே, இதுவும் முதலாண்டில் போடப்படும் தடுப்பூசியாக இருக்கக்கூடும். வயது குறைய குறைய இது பாதுகாப்பான தடுப்பூசி தான் என்பதைக் காட்டும் அதிக அளவு தரவு உங்களுக்குத் தேவை. அது( தரவை சேகரிப்பது) மிகவும் கடினமாக இருக்கும் ஏனென்றால் ஒரு ஐந்து வயது குழந்தையால் தெளிவாக எதையும் சொல்லமுடியாது. 'என் இதயத்தில் ஒரு விசித்திரமான உணர்வு இருக்கிறது, இன்று நான் மகிழ்ச்சியாக உணரவில்லை' என்று உங்களிடஃம் ஒரு 16 வயது இளைஞன் சொல்வது போல 5 வயதுக்குழந்தை சொல்லாது," என்கிறார் அவர்.

பாசெல் பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையின் நிக்கோல் ரிட்ஸும் எழுப்புகிறார்.

" அவர்களை தற்காத்துக் கொள்ள இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவீர்களா அல்லது சமுதாயத்தைப் பாதுகாக்க அவர்களுக்கு தடுப்பூசி போடுவீர்களா?" என்று PITS (குழந்தை அழற்சி மல்டிசிஸ்டம் சிண்ட்ரோம்) பாதித்த 20 முதல் 30 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு சிகிச்சையளித்த, குழந்தை தொற்று நோய் நிபுணரான ரிட்ஸ் வினவுகிறார். இது அரிதான மற்றும் கடுமையான நோயாகும். கோவிட் 19 இருக்கும் அல்லது இருந்த குழந்தைகளில் 0.5% க்கும் குறைவானவர்களில் இது ஏற்படுகிறது.

பெரும்பாலான குழந்தைகளில் இந்த நோய் தீங்கற்றதாக இருந்தாலும், அவர்களில் சிறிய பிரிவினரை இது கடுமையாக தாக்குகிறது. உடல் பருமன், நீரிழிவு அல்லது நுரையீரல் நோய்கள் போன்ற ஆபத்து காரணிகள் உள்ளவர்கள் தடுப்பூசி மூலம் நேரடியாக பயனடைவார்கள் என்று ரிட்ஸ் விளக்குகிறார். ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் ஒரே நன்மை அவர்களின் தாத்தா பாட்டியைப் பாதுகாப்பதுதான் என்றால், அந்த த்தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும் டெல்டா திரிபின் பரவலானது, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற சில ஆராய்ச்சியாளர்களை தூண்டியுள்ளது.

"டெல்டா திரிபு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, [மருத்துவ] பரிசோதனைகள் முடிந்து தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று அறிவிக்கப்பட்டதும், 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு உடனே தடுப்பூசி போடுவது அவசியம்," என்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மருத்துவர் மோனிகா காந்தி, ஒரு மின்னஞ்சல் மூலம் பிபிசியிடம் கூறினார்.

அதன் அதிக பரவும் தன்மையை பார்க்கும்போது , வீட்டிலுள்ளவர்கள் குறிப்பாக வயதானவர்களைப் பாதுகாக்க இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை நான் ஆதரிக்கிறேன்,"என்கிறார் அவர்.

குழந்தைகள் சமூகத்திற்கு வெளியே வாழும் இனங்கள் அல்ல. அவர்கள் சமுதாயத்தின் ஒரு பகுதி. பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர்களின் தாத்தா பாட்டி, அல்லது அவர்களின் அண்டை வீட்டார் நோய்வாய்ப்பாட்டாலும், அது அவர்களை பாதிக்கும். ஆகவே குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் முக்கியமான ஒன்று.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}