கரோனாவை வெல்ல இன்று ஒளியால் ஒன்றிணைவோம் - பாதுகாப்பு டிப்ஸ்

இன்று இரவு 9 நிமிடங்கள் நாம் ஏற்றும் தீபம் அல்லது உருவாக்கும் ஒளி இந்த உலகை புத்துணார்ச்சி அடைய செய்யும் என்று நம்பிக்கை கொள்வோம். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்கள் அனைவரும் ஏற்கனவே நம்முடைய ஒற்றுமையை காட்டிக் கொண்டு வருகிறோம். அதற்கு சாட்சியாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என கரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்க களத்தில் போராடி வரும் அனைவருக்கும் இந்தியா மக்கள் தங்கள் நன்றியை மணி அடித்தும், கை தட்டியும் வெளிப்படுத்தினோம். அதே போல் இந்த ஊரடங்கில் அடுத்து நம் வீடுகளில் இன்று விளக்கேற்றி கரோனா என்னும் இருளை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஏற்றும் இந்த தீபம் விரட்டும் என்பதை இன்று நிரூபிக்க போகின்றோம்.
நெருப்பிற்கு இயல்பாகவே ஒரு சக்தி உண்டு. நெருப்புடன் நம் வாழ்க்கை முழுவதும் தொடர்பு இருந்து கொண்டு தான் இருக்கின்றது. தீபம் ஏற்றுவது என்பது நம் வாழ்வியலோடு ஒன்றியது. தீபாவளி, கார்த்திகை தீபம் என நம்முடைய கலாச்சாரத்தில் தீபத்தை கொண்டாடும் வழக்கம் உள்ளவர்கள் நாம். அதே போல் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பு அந்த காரியம் வெற்றி பெற விளக்கேற்றி வணங்குவதும் நம்முடைய வாழ்வியலோடு இணைந்தது. இந்த வகையில் ஒரு ஆரோக்கியமான சூழலை, வைரஸில்லா நாட்டை உருவாக்க ஒளி மூலம் ஒன்றிணைந்து வெற்றி பெற இதை நாம் அனைவரும் செய்ய வேண்டும்.
நம் பிள்ளைகளுக்கு ஒளியின் முக்கியத்துவத்தையும் அதன் ஆற்றலையும் புரிய வைக்க பெற்றோர் நமக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அதுமட்டுமில்லாமல் ஒற்றுமையின் பலத்தையும் கூடவே சொல்லலாம். பிள்ளைகளையும் இந்த நிகழ்வில் அவசியம் பங்கெடுக்க வைக்கலாம். ஆனால் நெருப்பு பற்றிய விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் சிறந்தது.
குறிப்பு: பெரியவர்களும், குழந்தைகளும் கைகளில் சானிடைஸரை தடவிவிட்டு நெருப்பின் அருகே செல்லாதீர்கள். மிகவும் ஆபத்தானது. மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். மேலும் சில குறிப்புகள் இக்கே
ஒளியேற்றும் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்
- இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்து தீபம், டார்ச், செல்போன் லைட்டை வீட்டுக்குள் ஒளிர விட வேண்டும். டார்ச், மொபைலை விட தீபம் அல்லது கேண்டில் ஏற்றினால் இன்னும் சிறப்பானது
- சானிடைஸ்ரை நெருப்பின் அருகே கொண்டு செல்லாதீர்கள். சானிடைஸரை கைகளில் தேய்த்துவிட்டு விளக்கு ஏற்றாதீர்கள். சானிடைஸரில் ஆல்கஹால் கலந்திருப்பதால் நெருப்பு பற்றிவிடும்.
- அருகில் எப்போதும் ஒரு பக்கெட் வாலியில் தண்னீர் வைத்துக் கொள்ளுங்கள்.
- குழந்தைகள் இருந்தால் நெருப்பின் அருகே பாதுகாப்போடு பார்த்துக் கொள்ளுங்கள்.
- இதை ஒரு கடமையாக செய்யாமல் முழுமனதோடும், கரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடனும் செய்யுங்கள்.
- வீட்டின் வாசலில், பால்கனியில் விளக்கேற்றி வைக்கலாம்.
- கடந்த முறை கரோனா களப்பணியாளர்களுக்கு நன்றி கூறும் போது சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை. அதனால் இந்த முறை கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிப்போம். உடலால் விலகி இருந்து மனதால் ஒன்றிணைவோம்.
- இதை எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும் பார்க்காமல் நம் வாழ்வுக்கும் நெருப்பிற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து பார்த்தாலே இதன் சக்தியை புரிந்து கொள்ள முடியும்.
கரோனா என்னும் இருளை ஒளியின் சக்தியோடும், ஒற்றுமையின் பலத்தோடும், சமூக விலகலை கடைப்பிடித்தும் வெல்வோம்.. வாழ்க பாரதம், வளர்க இந்தியா
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...