COVID காலத்தில் பின்பற்ற வேண்டிய 5 உணவுப்பழக்கங்கள் – உலக சுகாதார நிறுவனம்

All age groups

Parentune Support

5.3M பார்வை

5 years ago

COVID காலத்தில் பின்பற்ற வேண்டிய 5 உணவுப்பழக்கங்கள் – உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம் COVID காலத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எந்த மாதிரியான உணவுப்பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று பரிந்திரை செய்திருக்கிறார்கள். சீரான மற்றும் ஆரோக்கியமான 5 உணவுப்பழக்கம் மூலம் பல நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.  என்னென்ன உணவுப்பழக்கங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement - Continue Reading Below

பிறந்த குழந்தைகள் மற்றும் 1-5 வயது குழந்தைகள்

  • பிறந்தது முதல் 6 மாத வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவளிக்கவும்
  •  6 மாத வயதில், தேவையை பூர்த்தி செய்யும் பலவிதமான திட உணவுகளை சத்தான உணவுகளை அறிமுகப்படுத்துங்கள். குழந்தைகள் 2 வயது வரை உணவுகளோடு தாய்ப்பாலும் தொடர்ந்து கொடுக்கலாம்.
  • குழந்தைகளுக்கான உணவுகளில் உப்பு அல்லது சர்க்கரைகளை சேர்க்க வேண்டாம்.

ஏன் இதை செய்ய வேண்டும் ?

  • 6 மாதம் வரை குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் கிடைக்கின்றது.
  • பொதுவாக குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்றுப்போக்கு, பருவ கால நோய்கள், சுவாச ஒய் நோய்த்தொற்றுகள் மற்றும் காது நோய்த்தொற்றுகள், எடை குறைவு/ பருமன், நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம் போன்றவற்றிலிருந்து எதிர்கொள்ளும் ஆற்றல் இயல்பாகவே தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இருக்கின்றது.

விதவிதமான மற்றும் சத்துள்ள உணவு வகைகள்

விதவிதமான உணவுகளின் கலவையை சாப்பிடுங்கள் உதாரணத்திற்கு கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் அரிசி; அல்லது மாவுச்சத்து கிழங்குகள் அல்லது வேர்கள், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் பயறு மற்றும் பீன்ஸ்), காய்கறிகள், பழங்கள் ஆகிவயை. அசைவ உணவுகள் (எ.கா. இறைச்சி, முட்டை மற்றும் பால்.

ஏன் இதை செய்ய வேண்டும் ?

இந்த மாதிரி பதப்படுத்தப்படாத ஆரோக்கியமான உணவுகள் மூலம் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அன்றாடம் கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்கின்றது. சர்க்கரைகள், கொழுப்புகள் அதிகம் உள்ள உணவு உப்பு ஆகியவை இது ஆரோக்கியமற்ற எடை அதிகரிப்பு மற்ரும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இதை தவிர்க்க வேண்டும். தொற்றா நோய்கள். ஆரோக்கியமான உணவு. சீரான உணவுப்பழக்கம் பதின் வயது பிள்ளைகள் மற்றும் குழந்தைகளுக்கு அவசியம். வயதானவர்களுக்கு இது ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்பை தருகின்றது.

Advertisement - Continue Reading Below

காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக உண்ணுங்கள்

  • பல்வேறு வகையான காய்கறிகளையும் பழங்களையும் சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிகளுக்கு சர்க்கரைகள், கொழுப்புகள் அல்லது உப்பு அதிகம் உள்ள உணவுகளை விட காய்கறிகளையும் பழங்களையும் தேர்வு செய்யவும்,
  • காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக சமைப்பதைத் தவிர்க்கவும்இது முக்கியமான வைட்டமின்களை இழக்க செய்கின்றது.

ஏன் இதை செய்ய வேண்டும் ?

காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இந்த வகை உணவுகள் மூலம் உடல் பருமன் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது, இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கின்றது

கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களை மிதமான அளவில் சாப்பிடுங்கள்

  • அன்சாச்சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். தாவர எண்ணெய் வகைகள் (ஆலிவ், சோயா, சன் ஃப்ளவர் அல்லது சோள எண்ணெய்)
  • மாமிச உணவில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல்நலத்துக்கு நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. (முட்டை, இறைச்சி, வெண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய்)
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை குறைந்த அளவு மட்டுமே சாப்பிடுங்கள். இவை கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் கொண்டவை.
  • பால் மற்றும் பால் பொருட்களில் குறைந்த கொழுப்பு அல்லது குறைக்கப்பட்ட கொழுப்பு உள்ளவையை தேர்வுசெய்க.
  • பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்க்கவும்

ஏன் இதை செய்ய வேண்டும் ?

கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் அதிகமுள்ள உணவில் சாச்சுரேட்டட் வகையான கொழுப்பு இருக்கலாம். சில இறைச்சி மற்றும் பால் பொருட்களில் இயற்கையாகவே கொழுப்பு அதிகம் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதய நோய் மற்றும் பக்கவாதம் நோய்களை உண்டாக்கும்.

உப்பு மற்றும் சர்க்கரை குறைவாக பயன்படுத்துங்கள்

  • உணவுகளை தயாரிக்கும் போது, உப்பு மற்றும் உயர் சோடியம் காண்டிமென்ட்கள் (எ.கா. சோயா சாஸ் மற்றும் மீன் சாஸ்) அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்
  • உப்பு மற்றும் சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவுகளை (எ.கா. தின்பண்டங்கள்) தவிர்க்கவும்.
  • செயற்கை குளிர்பானம் அல்லது சோடா மற்றும் பிற பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள். இதில் சர்க்கரை அதிகம் (எ.கா. பழச்சாறுகள், சிரப், மணமூட்டி பால் வகைகள் மற்றும் யோகர்ட்)
  • இனிப்பு சிற்றுண்டிகளுக்கு (குக்கீகள், கேக்குகள் மற்றும் சாக்லேட்) பதிலாக பழங்களைத் தேர்வு செய்யவும்

ஏன் இதை செய்ய வேண்டும் ?

உணவு முறையில் சோடியம் (உப்பு உட்பட) அதிகம் சேர்ப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதேபோல், சர்க்கரைகள் அதிகம் உள்ளவர்கள் எடை அதிகரிப்பு அல்லது பருமன் மற்றும் பல் சிதைவு போன்றவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உணவின் சர்க்கரைகளின் அளவைக் குறைப்பதன் மூலம் இதயம் மற்றும் பக்கவாதம். வரும் ஆபத்தையும் குறைக்கலாம்

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...