கோவிட் வார் ரூம் 24/7 – பெட், ஆக்ஸிஜன், தீவிர சிகிச்சைக்கு இங்கே அணுகலாம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது May 18, 2021

தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. சென்ற வருடம் யாருகெல்லாம் பாதிப்பு இல்லை என்று நினைத்தோமோ அதாவது குழந்தைகள், கர்ப்பிணிகள் அன அவர்களுக்கெல்லாம் இந்த வருடம் பாதிப்பு அதிகமாகி கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் போல தமிழகத்திலும் இரண்டாவது அலையின் தாக்கத்தினால் தினந்தோறும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. பெட், ஆக்ஸிஜன், சிகிச்சை என ஒவ்வொரு மருத்துவமனை வாசலிலும் நீண்ட வரிசையில் உயிரை கையில் பிடித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழலில் நமக்கு பேரூதவியாக இருக்கும் ஒரு புதிய முயற்சி தான் கோவிட் வார் ரூம். இந்த வார் ரூம் மூலம் நாம் என்னென்ன சேவைகளை பெற முடியும் என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
தமிழக அரசின் கோவிட் வார் ரூம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள புதிய மூயற்சி தான் கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையம் (UCC) எனப்படும் வார் ரூம் ( war room). சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தேசிய நலவாழ்வுக் குழும அலுவலகத்தில் இந்த 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது. 65 மருத்துவர்கள், 4 தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட குழுவினர் கணினி மூலம் கொரோனாவை எதிர்கொள்ள உதவ தொடங்கியுள்ளனர். 24 மணிநேரமும் இந்த குழு செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன சேவைகள் இங்கே பெற முடியும்?
தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு, படுக்கையின் எண்ணிக்கை, தீவிர சிகிச்சை, ரெம்டெசிவர் மருந்து எங்கு கிடைக்கும் மற்றும் கொரோவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் பற்றிய விவரங்களை என பலவிதமான சேவைகளை இந்த கட்டளை மையம் உதவும் வகையில் அமைக்கப்பட்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் ஒருங்கிணைத்து ஆன்லைன் மற்றும் தொலைப்பேசி வழியாக மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியில் செயல்படுகிறார்கள். இந்த சேவை மாநிலம் முழுவதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், இணை நோயான, நுரையீரல், இதய நோய், குறைவான பாதிப்பு உள்ளவர்கள் என பிரித்து இந்த கட்டளை மையங்கள் வழியாக மருத்துவமனைகள், படுக்கை இருப்புகளை ஒதுக்கப்படுவதால், தேவையை நன்கு அறிய முடிகிறது. மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு முன் கூட்டியே திட்டமிட்டு உதவுகிறார்கள்
அணுகுவதற்கான உதவி எண்கள்
108 மற்றும் 104 அவசர தொலைபேசி எண் வழியே வரும் அழைப்புகள், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்யூட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உடன் கேட்கப்படும் மருத்துவ உதவிகளை இந்தக் குழு தரம் பிரித்து தேவையான உதவிகளை அளித்து வருகிறது. எந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருக்கிறது, எந்தெந்த மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதிகள் இருக்கிறது என்பதை இந்த குழு மூலமாகவே நோயாளிகளோ அல்லது அவர்களது உறவினர்களோ தெரிந்து கொள்ள முடியும்.
104 எண் - கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தினை மக்கள் தொடர்பு கொள்ளலாம். அரசு மருத்துவமனை படுக்கை, ஆ- க்சிஜன் படுக்கை , ரெம்படிசிவர் மருந்து எங்கு கிடைக்கும் போன்றவற்றுக்கான உதவியைப் பெறலாம்.
108 எண் - தனியார் மருத்துவமனை படுக்கை, எங்கு எவ்வளவு இடம் உள்ளது ஆம்புலன்ஸ் எங்கு உள்ளது என்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
1077 எண் - மற்ற ஊர்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த இணையத்தளத்திலும் நீங்கள் பதிவு செய்யலாம்
https://ucc.uhcitp.in/publicbedrequest
கொரோனா தொற்றை எதிர்த்து உலகமே போராடி கொண்டிருக்கிறது. ஆரம்ப அறிகுறிகள் அறிவதன் மூலம் இந்த நோயின் தீவிர தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். வருமுன் காப்போம், அப்படியே வந்தாலும் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த கொரோனாவை எதிர்கொள்வோம்.
மேலும் கொரோனா பற்றிய தகவல்கள், ஆலோசனைகளுக்கு Parentune Tamil இணையதளம் மற்றும் APP மூலம் காணலாம். https://www.parentune.com/community/corona-virus-support/34
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}