• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

டெல்டா ப்ளஸ் வைரஸ் - பாதிப்பு எப்படி இருக்கும்? என்னென்ன பாதுகாப்பு குறிப்புகள் ?

Radha Shri
7 முதல் 11 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 30, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கொரோனாவின் இரண்டாம் அலையிலிருந்து இப்போது தான் சிறு நிம்மதி  பெருமூச்சு எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மூன்றாம் அலை பற்றிய செய்திகள் அதிவேகமாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் டெல்டா வைரஸ், டெல்டா ப்ளஸ் என்ற புதிய வைரஸின் பாதிப்பு அதிகமாக இருக்குமா? குழந்தைகளை பாதிக்குமா? கர்ப்பிணிகளை பாதிக்குமா? என பல கேள்விகள் வர தொடங்கிவிட்டது. கடந்த மூன்று நாளாக எங்கு பார்த்தாலும் டெல்டா ப்ளஸ் வைரஸ் தான். அதனால் தான் இந்த வைரஸின் பாதிக்கும் தன்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

டெல்டா  மற்றும் டெல்டா ப்ளஸ் வைரஸ் என்றால் என்ன?

கொரோனாவின் முதல் அலையில் வந்த வைரஸும், இரண்டாவது அலையில் வந்த வைரஸும் ஒரே வைரஸ் தான். ஆனால் முதலில் பரவிய வைரஸை விட இரண்டாம் அலையில் வந்த கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடியது. ஆனால் இந்த இரண்டுக்குமே இறப்பு விகிதம் ஒரெ மாதிரியாக தான் இருந்தது. குறிப்பாக சொல்லனும்னா ஒரு சில இடங்களில இறப்பு விகிதம் இரண்டாவது  அலையில் குறைவாக தான் இருந்தது. அடுத்ததாக டெல்டா வைரஸ்.

டெல்டா வைரஸ் என்பது இரண்டாவது அலையில் வந்த கொரோனா வைரஸின் மரபணு உருமாறி டெல்டா வைரஸ் uருவாகியுள்ளது. இப்போது இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது புதுவகை வைரஸ் கிடையாது. ஆரம்பத்தில் மத்திய பிரதேஷ், கேரளா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் வரத் தொடங்கியதை அடுத்து இப்போது தமிழகத்திலும் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டுபிடிக்க தொடங்கிவிட்டனர்.

டெல்டா வைரஸை விட டெல்டா ப்ளஸ் இன்னும் வேகமாக பரவக்கூடியது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகின்றனர். இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியையும் தாண்டி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. நாடுமுழுவதும் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் தீவிரத்தை துல்லியமாக சொல்ல முடியாது. அதனால் பதட்டம் அடைய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். டெல்டா வைரஸ் குறித்த அறிவியல் பூர்வமான தகவல்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கின்றது. புதிய வகை தொற்று வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை இப்போதே கூற முடியாது. இது போலவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிக்காதா என்பதற்கும் எந்த தரவுகளும் இல்லை. இன்னும் சில காலம் காத்திருந்தால் மட்டுமே அறிய முடியும்.

ஜெனிவா - உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களிடம், 'டெல்டா' வைரஸ் வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக கூறுகிறது.

மேலும், இதுவரை பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்களில், டெல்டா வைரஸ் தான் வேகமாக பரவும் சக்தி உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பரவிய உருமாறிய கொரோனா வைரஸ்களில், டெல்டா வைரஸ் தான் வேகமாக பரவும் சக்தி உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பற்றி சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினாலே இந்த பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்க கொள்ள முடியும் என்று கூறியுள்ளது.

எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?

தளர்வுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் அலட்சியமாக இருந்தால் நிச்சயமாக டெல்டா ப்ளஸ் பரவுவதும் அதிகமாக தான் இருக்கும். இப்போது டெல்டா ப்ளஸ் இதன் பிறகு என்ன வைரஸ் வரப்போகிறதோ என்று யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனாவை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது என நிபுணர்கள் அனைவரும் ஒன்றாக கூறுகின்றனர்.

கொரோனா மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது, ஆனால் அதை தாமதப்படுத்துவதும், அதன் தாக்கத்தை குறைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.

குழந்தைகள் பாதுகாப்பு

 • குழந்தைகள் அதிகமாக வெளியாட்களிடம் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் கோவிட் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் தொற்று இல்லாததை உறுதி செய்ய முடியும்.
 • 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு மாஸ்க் அணிய பரிந்திரைக்கப்படவில்லை என்பதால் குழந்தையை பராமரிப்பவர்கள் அல்லது உணவூட்டுவது, நெருக்கமாக இருப்பவர்கள், பராமரிப்பாளர்கள் முழு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மாஸ்க் அணுவது, கை சுத்தம், சுகாதாரம் பேணுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும்.
 • பாலூட்டும் தாய்மார்கள் பாதிக்கப்பட்டால் இரண்டு முகக்கவசம் மற்றும் முகம் மறைக்கும் படியான ஷீல்டு அணிந்து, கைகளைக் கழுவி, தனது சுற்றுப்புறங்களைத் தவறாமல் சுத்தம் செய்து பாலூட்ட வேண்டும். தாய்ப்பாலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆண்டிபாடிகள் உள்ளது. இது குழந்தைக்கு மிகவும் நல்லது.
 • பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி பாதுகாப்பது என கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
 • 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெரியர்கள் பின்பற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றலாம்.
 • குழந்தைகளுக்கான தடுப்பூசி தற்போது சோதனையில் உள்ளதால்  பெற்றோர் மற்றும் வீட்டில் இருக்கும் மற்ற பெரியவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதன் மூலம் பெரியவர்கள் மூலமாக குழந்தைக்கு பரவுவதை தடுக்க முடியும். ஏனென்றால் இரண்டாம் அலையில் பெரும்பாலும் பெரியவர்கள் மூலமாகவே குழந்தைகளுக்கு பரவியது என்பதை மறுக்க முடியாது.
 • கோவேக்சின்  தடுப்பூசியை 2 – 18 வயதுள்ள இந்தியக் குழந்தைகளுக்குச் செலுத்திப் பரிசோதினை தொடங்கிய நிலையில் பெற்றோரும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தயக்கம் காட்டக்கூடாது.

பெரியவர்கள் பாதுகாப்பு

 • தளர்வுகள் தளர்த்தப்பட்டாலும் அவசியம் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
 • முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது, சானிடைஸர் பயன்படுத்துவது என்று எப்போதும் செய்யக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுவது.
 • வெளியிடங்களுக்கு செல்லும் போது இரண்டு மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என சோர்வாகாமல், தவறாமல் கடைப்பிடிப்பது.
 • முக்கியமாக பதட்டம், பயம் போன்றவற்றை கையாள உதவும் பயிற்சிகளை மேற்கொள்வது. கொரோனாவை விட மிக பெரிய கொடிய நோய் இந்த பயம் தான். நாம் பயத்தை வென்றால் தான் விழிப்புணர்வோடும், எச்சரிக்கையுடனும் இருக்க முடியும். அடிக்கடி கொரோனா அலைகளின் செய்தியை பார்த்து பதட்டம் அடையாமல். உண்மையான தேவையான தகவல்கள் மற்றும் செய்திகளை மட்டும் தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது.
 • குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பழக்கத்தை, வாழ்க்கைமுறையை கடைப்பிடிக்க தவறாதீர்கள்.
 • தடுப்பூசி போட்டுக் கொள்வது.
 • குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு பாஸிட்டிவ்வான விஷயங்களை பகிர்ந்து கொள்வது, மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என எண்ணுவதன் மூலம் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பயம் இல்லாமல் இருக்கும்.

யோசித்துப் பாருங்கள் முதல் அலை வரும் போது நாம் எப்படி இருந்தோம். இப்போது இரண்டாம் அலையையும் கடந்து கொண்டிருக்கிறோம். நிச்சயமாக இனி வரக்கூடிய அலைகளையும் நிச்சயமாக கடப்போம். பாதுகாப்பு நடவடிக்கைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுமுறை, வாழ்க்கைமுறை, தடுப்பூசி, பாசிட்டிவ்வான எண்ணங்கள் என எத்தனையோ நல்ல விஷயங்கள் நம்மை காத்துக் கொள்ள இருக்கின்றது.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}