டெல்டாக்ரான் Deltacron Variant : பாதிப்பு எப்படி இருக்கும்?

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Feb 15, 2022

'டெல்டாக்ரான்' என்ற பெயர் தற்போது வலைதளங்களில் அதிகமாக தேடப்படும் ஒன்றாக உள்ளது. 'டெல்டா' மற்றும் 'ஓமிக்ரான்' ஆகியவற்றின் கலவை தான் டெல்டாக்ரான். டெல்டா மாறுபாட்டிற்குப் பிறகு, ஓமிக்ரான் மாறுபாடு, இப்போது மற்றொரு மாறுபாடும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டாக்ரான் மாறுபாடு பற்றி நிபுணர்கள் கூறப்படும் தவல்களை இங்கே பார்க்கலாம்:
டெல்டாக்ரான் Deltacron Variant மாறுபாடு என்றால் என்ன?
சைப்ரஸில் உள்ள விஞ்ஞானி லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் என்ற வைராலஜிஸ்ட் சைப்ரஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது ஆராய்ச்சிக் குழு டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளின் கூறுகளைக் கொண்ட பல SARS-CoV-2 மரபணுக்களை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தார். இங்கிலாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் DeltaCrone என்ற புதிய மாறுபாட்டைக் கண்காணித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள சுகாதார அதிகாரிகள் கோவிட்-19 இன் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளுடன் கண்டறியப்பட்ட ஒரு நோயாளியை UK சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஆரம்பத்தில், இது ஆய்வக பிழை என்று கருதப்பட்டது. ஆனால் அது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் ஹெல்த் ப்ரொடெக்ஷன் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் புதுப்பிப்பின்படி, டெல்டா எக்ஸ் ஓமிக்ரான் ரீகாம்பினன்ட் ஒரு அறிகுறியாக சேர்க்கப்பட்டுள்ளது.
டெல்டாக்ரான் மாறுபாட்டில் தீவிரம் எப்படி இருக்கும் ?
UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் கண்காணிப்பு அறிக்கையின்படி, இது பிரிட்டனில் தோன்றியதா என்பது தெளிவாக தெரியவில்லை என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
- புதிதாக உருவான இந்த புதிய வகை டெல்டாக்ரோன் வைரஸ் தொற்றின் தீவிரம் கடுமையாக இருக்குமா என்பது சுகாதார அதிகாரிகளுக்கு தெரியாது.
- தடுப்பூசியின் செயல்திறனை இந்த மாறுபாடு பாதிக்குமா என்பதும் தெரியவில்லை.
- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால், இப்போதைக்கு இதைப் பற்றி அதிகமாக கவலைபப்ட தேவையில்லை.
- இருப்பினும் இதன் அறிகுறிகளில் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா என்பது வரும் நாட்களில் தெளிவாக தெரிய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
கொரோனாவின் புதிய மாறுபாடான டெல்டாக்ரான் பற்றி WHO என்ன சொல்கிறது
சமீபத்தில் கொரோனாவின் புதிய மாறுபாடு பற்றி WHO இன் கோவிட் 19 தொழில்நுட்ப முன்னணி மரியா வான் கெர்கோவ் கருத்துப்படி, தற்போதுள்ள மாறுபாடுகளை விட லேசானதாகவும் aல்லது கடுமையானதாகவும் இருக்கும். மேலும் அவை நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை எதிர்த்து போராடுவதில் தோல்வியும் அடைய முடியும்.
கொரோனாவின் புதிய மாறுபாடுகள் ஏன் உருவாகின்றது?
காலப்போக்கில் வைரஸ்கள் மக்களிடையே பரவும்போது அவை மாறுவதும் பரிணாம வளர்ச்சியடைவதும் இயல்பானது. இந்த மாற்றங்கள் அசல் வைரஸிலிருந்து கணிசமாக வேறுபட்டால், அவை "மாறுபாடுகள்" என்று அழைக்கப்படுகின்றன. மாறுபாடுகளை அடையாளம் காண, விஞ்ஞானிகள் வைரஸ்களின் மரபணுப் பொருளை (வரிசைப்படுத்துதல் என அழைக்கப்படும்) வரைபடமாக்கி, பின்னர் அவை மாறிவிட்டதா என்பதைப் பார்க்க அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை தேடுகின்றனர்.
SARS-CoV-2 வைரஸ், COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ், உலகளவில் பரவி வருவதால், உலகம் முழுவதும் பல நாடுகளில் மாறுபாடுகள் தோன்றி அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் புதிய வகை மாறுபாடுகள் தடுப்பூசியுடன் போராடி வெல்லுமா, தோற்குமா என்பதை ஆரம்பத்தில் கணிக்க முடியாது. ஆனால் தடுப்பூசி மூலம் உடலில் அதன் தீவிரத்தை குறைக்கலாம்.
புதிய மாறுபாடுகள் உருவாகுவதை எப்படி நிறுத்துவது?
எல்லா வைரஸ்களையும் போலவே, கோவிட்-19 ஐ உண்டாக்கும் SARS-COV-2 வைரஸானது, அது பரவும் வரை தொடர்ந்து உருவாகும். வைரஸ் எவ்வளவு அதிகமாகப் பரவுகிறதோ, அந்த அளவு வைரஸ் மாறுவதற்கான அழுத்தம் அதிகமாக இருக்கும். எனவே, அதிக மாறுபாடுகள் தோன்றுவதை தடுப்பதற்கான சிறந்த வழி, வைரஸ் பரவுவதை தடுப்பதாகும்.
COVID-19 மாற்பாடுகளில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க:
- மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளியை வைத்திருங்கள்
- உங்கள் வாய் மற்றும் மூக்கில் நன்கு பொருத்தப்பட்ட முகக்கவசத்தை அணியுங்கள்
- ஜன்னல்களை திறந்து காற்றோட்டத்துடன் இருக்கவும்
- இருமல் அல்லது தும்மல் வரும் போது உங்கள் முழங்கையை பயன்படுத்துங்கள்
- உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்
- அவசியமின்றி அதிக நெரிசலுள்ள கூட்டங்களில் கலந்து கொள்ளாதீர்கள்
- தவறாமல் தடுப்பூசி போடுங்கள்
உங்கள் கருத்துகளும், பகிர்தலும் எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்.