• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு டெங்கு அறிகுறிகள் - கொசுக்களை விரட்டும் செடிகள்

Radha Shri
கர்ப்பகாலம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Oct 05, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

மழைக்காலம் வந்தாலே பெற்றோர் நாம் நம் பிள்ளைகளின் நலனை எண்ணி அஞ்சுவது மழைக்கால நோய்களின் பாதிப்பினால் தான். குறிப்பாக, கொசுக்கள் மூலம் வரும் டெங்கு காய்ச்சல். டெங்கு காய்ச்சல் ஒரு உயிர்கொல்லி இல்லை என்றாலும் இதன் பாதிப்பு நம்மை பயப்பட வைக்கும். தமிழகத்தில் பல பகுதிகளில்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகை அதிமாகி கொண்டே போகிறது.  கவலை வேண்டாம், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த இந்த நோய் குறித்த விழிப்புணர்வு நம்மிடம் ஏற்பட்டாலே இந்த நோயிலிருந்து நம் குழந்தைகளை பாதுகாக்கலாம்.

இந்தப் பதிவில் கொசுக்களை விரட்டும் செடிகளை பற்றி குறிப்பிட்டுள்ளேன். தவறாமல் இந்த தடுப்பு முறையை பின்பற்றுங்கள். 

டெங்கு என்றால் என்ன?

‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது டெங்கு காய்ச்சல். இந்தக் கிருமிகளில் மொத்தம் நான்கு வகை. ஏதேனும் ஒரு வகை நம்மைத் தாக்கினாலும் டெங்கு காய்ச்சல் வந்துவிடும். இப்போது பரவும் டெங்கு காய்ச்சல் 1வது, 3வது வகையைச் சேர்ந்தது. இது தண்ணீர், காற்று, இருமல், தும்மல் போன்றவற்றால் பரவுவதில்லை. கொசுவால் மட்டுமே பரவுகிறது. பொதுவாக, கொசுக்கள் சாக்கடை, அசுத்தமான நீர்நிலைகள், நீண்டகாலம் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் வாழ்வது வழக்கம். ஆனால், டெங்கு கொசுக்களோ சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே வளரக்கூடியவை.

அறிகுறிகள்  

கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே. நோயின் ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண் வலி, வாந்தி, களைப்பு, இருமல் ஆகிய மிதமான அறிகுறிகள் மட்டுமே காணப்படும். நான்காம் நாளில் காய்ச்சல் கடுமையாகும். மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டது போல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. அடுத்து உடலில் அரிப்பு இருப்பதோடு, சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களை பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன்விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.

Dengue Shock Syndrome

பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சி நிலை (Dengue Shock Syndrome) உருவாகும். இவர்கள்தான் ஆபத்து மிகுந்தவர்கள். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். காய்ச்சல் விட்டு விட்டு வந்தால் உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்த நோயைத் தொடக்கத்திலேயே சரியாகக் கணிப்பது கொஞ்சம் சிரமம்தான். இதற்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிரிழப்பு ஏற்படுவதுண்டு. 

பயம் வேண்டாம், முன்னெச்சரிக்கை அவசியம்

  • டெங்கு ஓர் உயிர்க்கொல்லி அல்ல. நூறில் 96 பேருக்கு நோய் சரியாகிவிடும். 4 பேருக்கு மட்டுமே ஆபத்து நெருங்கும். சரியான நேரத்தில், சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் எந்த ஆபத்தும் ஏற்படாது.
  • டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் குறைக்கவும் உடல் வலியைப் போக்கவும் மட்டுமே மருந்துகள் தரப்படும். வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம் உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல், பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். 
    இந்தச் சிகிச்சையில் பெரும்பாலோருக்கு நோய் கட்டுப்பட்டுவிடும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை ஏற்படும். இதற்கு உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டும்.
  • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, காய்ச்சலை குறைக்க, நிலவேம்பு குடிநீர் கஷாயமும், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பப்பாளி இலை சாறும் வழங்கப்படும். இவற்றுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு, மலைவேம்பு சாறும் சிறந்த மருந்து ஆகும். இந்த மருந்தை ஒரு நாளைக்கு, நான்கு முறை அளித்தால், மூன்று நாட்களில், “டெங்கு’ குணமாகும்.
  • கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டைச்சுற்றி சாக்கடை மட்டுமல்ல, சாதாரண தண்ணீர்கூட தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்.

செடி வளர்ப்போம். கொசுக்களை விரட்டுவோம்

அடுக்கு மாடி குடியிருப்பாக இருக்கட்டும், குடிசை வீடாக இருக்காட்டும் எல்லா வீடுகளிலும் இந்த கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இந்த கொசுக்களை விரட்டுவதற்கு நாமும் என்னென்ன வித்தையெல்லாம் செய்கிறோம். பேட் வைத்து விரட்டுகிறோம், கொசு பத்தி வைக்கிறோம், குட் நைட் வைக்கிறோம், ஆனாலும்  நமை விட்டு வைப்பதில்லை இந்த கொசுக்கள். அழகுக்காக, சமையலுக்காக, மருந்துக்காக செடிகள் வளர்க்கிறோம். அப்படியே இந்த கொசுக்களை விரட்டவும் செடிகள்  வளர்ப்போம். கொசுக்களை விரட்டி நம் இரவுத் தூக்கத்தை இனிமையாக்கும் சில செடிகள் இதோ...

புதினா (Mint) 

நமக்கு தெரிந்த வரைக்கும் டீ தயாரிக்கவும், சளி, ஜூரம் ஆகிய பிரச்னைகளுக்கு  பயன்படுகிறது புதினா. ஆனால் இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்து விடும். இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவத்தை தெளித்தால் கொசுவை விரட்டி விடலாம். வீட்டிலுள்ள தொட்டியில், அறைக்குள் வைத்து மிக எளிதாக இதை வளர்க்கலாம். மண்ணில் ஒருமுறை பயிரிட்டால் தானாக, வேகமாக வளரும்.

பூண்டு (Garlic) 

அதிகமாக பூண்டு சாப்பிடுபவர்களை கொசுக்கள் கடிப்பதில்லை என்கிறார்கள். பூண்டு எண்ணெயையும் தண்ணீரையும் 1க்கு 5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் கொசு நுழையும் இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.

யூகிலிப்டஸ் (Eucalyptus) 

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் மூலிகை. படுவேகமாக வளரக்கூடியது. ஆனால் இதை வீட்டில் வளர்ப்பது சாத்தியமில்லை. அதே சமயம் இதன் இலைகளை எளிதாக சேகரிக்கலாம். அவற்றைக் காய வைத்து தீ மூட்டினால் அந்த வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

சிட்ரோநெல்லா (Citronella – Lemongrass) 

சிட்ரோநெல்லா எண்ணெய் மிகப் பிரபலமான ஓர் இயற்கை பூச்சி விரட்டி. இதன் சிறப்பு பல ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்திருக்கிறது. வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிட்ரோநெல்லாவைப் பயன்படுத்தி, சென்ட்டு தயாரிக்கின்றன.

மாரிகோல்ட் (Marigold) 

மஞ்சள் வண்ண பூக்களைக் கொண்ட  இந்த செடியை கிராமப்புறங்களில் ‘துலுக்கச் சாமந்தி’ என்று குறிப்பிடுவார்கள். சிராய்ப்பு, காயங்கள், தோல் வியாதிகள், தீக்காயம், சொறி, சிரங்கு, மூல நோய் போன்றவற்றுக்கு இதை அரைத்துப் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கல், குடல் புண்கள், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் நல்ல மருந்து. தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட மாரிகோல்ட் உதவுகிறது. இது ஒரு சிறந்த கொசுவிரட்டி. சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் வேகமாய் வளரும். இதன் வாசனை பிரச்னை இல்லை என்றால், கொசுக்கள் உற்பத்தியாகும் பாத்ரூம், சமையலறையிலும் மாரிகோல்ட்டை வைத்து வளர்க்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் எடுத்துப் போய் வெயிலில் காட்டினால் போதும். நன்றாக வளரும், கொசுக்களை விரட்டும்.

ரோஸ்மேரி (Rosemary) 

நன்கு வெப்பம் உள்ள, வறண்ட தட்ப வெப்பநிலையில் வளரக்கூடியது. இயல்பாகவே கொசுவை விரட்டும் ஆற்றல் கொண்டது. நான்கு சொட்டு ரோஸ்மேரி எண்ணெயையும், கால் கிண்ணம் ஆலிவ் எண்ணெயையும் கலந்து அந்தக் கலவையை உடலில் தேய்த்தால் கொசு நெருங்காது. இந்தக் கலவையை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிதாக வளரக்கூடிய இயற்கைச் செடி.

இந்தப் பதிவு உங்களுக்கு திருப்தி அளித்தால் மற்றவர்களோடு பகிருங்கள். உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை நாங்கள் கேட்டு இன்னும் பல பதிவுகளை உங்களுக்கு வழங்க தயாராக உள்ளோம். தவறாமல் உங்கள் கருத்துக்களை கமெண்டில் எழுதுங்கள். 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}