• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல்

ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு மன உளச்சல்? கல்வி ஆலோசகரின் கையாளும் ஆலோசனைகள்

Parentune Support
7 முதல் 11 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 15, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

சமீபத்தில் திருப்பூர் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆன்லைன் வகுப்புகளால் மன உளச்சல் வருவதாகவும் உடனே பாதுக்காப்பான முறையில் பள்ளியை திறக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார். அதுவும் ஒரு சார்ட்டில் எழுதி கையில் ஏந்தி நின்றுகொண்டு தன்னுடைய நிலையை உணர்த்துகிறார். இதை பார்க்கும் போது, இப்போது ஆன்லைன் வழிக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களின் நிலையையும் இவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த பதிவில் ஆன்லைன் வகுப்பில் கற்கும் மாணவர்களின் மன நலப் பிரச்சனைகள் மற்றும் அதனை எப்படி பெற்றோர் மற்றும் பள்ளி கையாள வேண்டும் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இது தொடர்பாக உளவியல் நிபுணர் கையாளும் வழிகளை விளக்கமாக கூறுகிறார்

மாணவன் மனுவில் குறிப்பிட்டது என்ன?

கொரோனாவால் கடந்தாண்டு முதல் எங்களால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அதனால் ஆன்லைனில் மட்டுமே பாடங்களை படிக்கின்றோம். இதனால் எங்கள் போன்ற பிள்ளைகளுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றது. ரொம்ப நேரம் மொபைலில் பாடங்களை நடத்துவதை பார்ப்பதால் கண் பிரச்சனைகள் வருகின்றது, தலைவலி, கழுத்து வலி போன்ற உடல் நல பிரச்சனைகள் வருகின்றது. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மன உளச்சல் ஏற்படுகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்பான முறையில் பள்ளியை திறக்கவும் என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தழிழ்நாடு அறிவியல் இயக்கம் மாணவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள ஒரு ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வில் மாணவர்களின் கல்விமுறை, பொது அறிவு, ஆன்லைன் வகுப்பில் பாடங்களை பின்பற்ற எதிர்கொள்ளுன் சவால்கள் மற்றும் பிரச்சனைகள், மாணவர்களின் மனநிலை, உடல் நல பிரச்சனைகள், கல்வி கற்பதில் உள்ள சிக்கல் என பல விஷயங்களை உள்ளடக்கியது. நான்கு நாள் நடந்த இந்த ஆய்வில் பல்வேறு தரப்பில் உள்ள பெற்றோர்கள், மாணவர்கள் தங்களது கருத்துக்களை கூறி இருக்கிறார்கள்.

பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது என்றும், உடல்/மன நல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறி இருக்கிறார்கள். அதனால் ஜூலை 15  ஆம் தேதி இன்று இந்த ஆய்வை அரசிடம் கொடுக்கப்போவதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எவ்வாறு கையாளலாம் என்பதை விளக்குகிறார் கல்வி ஆலோசகர் மற்றும் Managing Director of Kriyative Learning solution international Pvt, ltd ஜெயப்ரியா தேவி

அந்த மாணவனின் கோரிக்கையை நான் மதிக்கிறேன். ஆனால் இப்போது இருக்கும் இந்த சூழலில் பள்ளிகளை திறப்பது என்பது பாதுகாப்பானதாக இருக்காது. அதற்கு பதில் ஆன்லைன் வழிக் கல்விமுறையில் சில மாறுதல்களை கொண்டுவருவதன் மூலம் மாணவர்களின் மன உளச்சலை குறைக்கலாம். என்னென்ன வழிகளில் செய்யலாம் என்பதை கூறுகிறேன்.

ஆன்லைன் வகுப்புகளில் எப்படி பாட நடத்த வேண்டும் என்ற வழிகாடுதல்கள் மற்ற நாடுகளில் முறையாக பின்பற்றப்படுகிறது. ஆனால் இங்கு ஆன்லைன் வகுப்பில் எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்கான முறையான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதும் மாணவர்களின் மன உளச்சலுக்கு முக்கிய காரணம்.

ஆன்லைன் வகுப்புகளை பார்க்கும் கண்ணோட்டம் ஆசிரியர்களிடம் மாற வேண்டும். அதாவது சாதரணமாக வகுப்பெடுப்பதற்கும் ஆன்லைனின் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்லைன் வகுப்பில் கற்பிக்கும் போது என்னென்ன பின்பற்ற வேண்டும்

 • உதாரணத்திற்கு 45 நிமிடம் வகுப்பு என்றால் குழந்தைகளால் 45 நிமிடமும் உட்கார்ந்து ஆன்லைனில் வகுப்பை கவனிக்க முடியாது. 10 நிமிடம் வகுப்பிற்கு தயாராவது, 10 நிமிடம் சந்தேகங்கள் கேட்பது அதற்கு பிறகு பாடங்களை நடத்த தொடங்கினால் குழந்தைகளுக்கும் ரிலாக்ஸாக இருக்கும். பாடத்தையும் கவனிக்க முடியும்.
 • ஆசிரியர்கள் கையாள வேண்டிய முக்கியமான விஷயம் குழந்தைகளின் நடத்தையை கையாள்வது. சிலபஸை முடிக்க வேண்டும் என்பதற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை விட மாணவர்களை புரிந்து கொள்வதில் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.
 • எல்லா மாணவர்களும் ஒரே மனநிலையில் வகுப்பில் உட்காருவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் இருந்து தான் கற்கிறார்கள். ஒவ்வொரு மாணவருக்குக் தனித் தனி கவனம் செலுத்த முடியாது என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால்  மாணவர்களின் நிலை பற்றி அறிவது அவசியம்.

 • ஆசிரியர்கள் பெற்றோருடன் இதை ஆலோசிக்க வேண்டும். Feedback form மாதிரி பெற்றோரிடம் கொடுத்து அவங்களோட கருத்துகளை தெரியப்படுத்தலாம். தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைனில் அல்லது குறிப்பிட்ட பாடத்தில் உள்ள சிக்கலை பற்றி ஆசிரியரிடம் கலந்துரையாடலாம். இதன் மூலம் குழந்தைகளுக்கு கற்றலில் உள்ள சிக்கலை கையாள முடியும்.
 • மேலும் ஆன்லைன் வகுப்பு தொடங்கும் முன் மாணவர்களுக்கு கண்ணுக்கு, கைகளுக்கு பயிற்சி கொடுப்பது, சின்ன சின்ன உடற்பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் மற்றும் கை வலி, உடல் வலி போன்ற பிரச்சனைகள் வராது. 10 அல்லது 15 நிமிடம் யோகா செய்ய வைப்பது மூலம் மன உளச்சல் வராமல் தடுக்க முடியும். குழந்தைகளின் கவனிக்கும் திறனும் அதிகரிக்கும். அதனால் வகுப்புத் தொடங்கும் முன் ஒரு வாழ்த்துப்பாடல் (Prayer song),உடற்பயிற்சி என இதற்கு பிறகு பாடங்களை நடத்தினால் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

 • மாணவர்களுக்கு அதிக மன உளச்சல் வர முக்கிய காரணங்களுள் வீட்டுப்பாடம் மற்றும் நோட்ஸ் எழுதுவது ஒன்று. அப்போ தான் ஆன்லைனில் வகுப்பை முடித்திருப்பாங்க உடனே அடுத்து நோட்ஸ், ஹோம் வொர்க், மீண்டும் மொபைல் அல்லது லேப்டாப், டேப் என்றால் குழந்தைகளுக்கு மன சோர்வு ஏற்படத்தான் செய்யும்.
 • நோட்ஸ் மற்றும் வீட்டுப்பாடம் நிறைய எழுத வைப்பதை குறைக்கவும். குழந்தைகள் எப்போதும் மொபைல் பார்த்து படிப்பதை தவிர்க்க உதவும். மற்றும் குழந்தைகளின் உட்கார்ந்து கொண்டே ஸ்கிரீன் பார்ப்பதை தவிர்க்க முடியும். மொபைல் பார்க்காமல் செய்யும் ஆக்டிவிட்டி மற்றும் நோட்ஸ் ஆகியவற்றை சமமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்.

பெற்றோருக்கான குறிப்புகள்

ஏற்கனவே பெற்றோர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் நிகழும் நிச்சயமற்ற தன்மையால் சோர்வாக இருக்கிறார்கள். மேலும் வீட்டிலிருந்து வேலை, குழந்தைகள் முழு நேரமும் வீட்டில் இருக்கிறார்கள் இப்படி ஏகப்பட்ட பொறுப்புகளை கையாள வேண்டிய நிலை உள்ளது.

 • வீட்டில் பெற்றோர் கால அட்டவணை போட்டுக் கொள்ள வேண்டும். அதாவது குழந்தைகளுக்கான ஸ்கிரீன் டைம் டைம் டேபிள் (Screen time time table), பெற்றோருக்கான ஸ்கிரீன் டைம் டைம் டேபிள், குழந்தைகளோடு தரமான நேரம், குடும்ப நேரம், சாப்பாடு நேரம், விளையாட்டு நேரம் என உள்ளடக்கிய கால அட்டவணை போட்டுக் கொண்டால் சூழ்நிலையை கையாள உதவியாக இருக்கும்.
 • இந்த கால அட்டவணை மூலம் குடும்பத்தில் ஒரு நடைமுறை வழக்கத்தை பின்பற்ற முடியும். நடைமுறை வழக்கத்தை பின்பற்ற தொடங்கினாலே பாதி பிரச்சனைளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

 

 • அதே போல் பெற்றொருக்கான ஸ்கிரீன் டைம் நிர்வகுப்பது மூலம் குழந்தைகள் தங்களுடைய ஸ்கிரீன் டைமை குறைத்துக் கொள்வார்கள். குழந்தைகளோடு ஒரு சின்ன நடைப்பயணம், ஏதாவது கிராஃப்ட் செய்வது, சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என தினமும் 25 நிமிடம் இப்படி செலவு செய்தால் பெற்றோரும் குழந்தைகளுக்கும் இனிமையாக இருக்கும்.
 • குழந்தைகள் வெளியே சென்று விளையாடததால் அதுவே அவர்களின் மன உளச்சலை அதிகரிக்கும். இதுவரை அவர்கள் மியூசிக், டான்ஸ் கிளாஸ் ஏதாவது போயிருந்தால், வீட்டில் கொஞ்ச நேரம் அதற்காக நேரம் ஒதுக்க சொல்லலாம். எல்லா குழந்தைகளுக்கும் சிறிது நேரம்  மியூசிக், டான்ஸ், கிராஃப்ட், ட்ராயிங் போன்ற செயல்களில் ஈடுபடுத்தினால் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள்.

வீட்டுப்பாடம் செய்ய வைக்க எளிய வழிகள்

பெற்றோருக்கும் இருக்கும் பெரிய சவால்களில் ஒன்று குழந்தையை வீட்டுப்பாடம் மற்றும் நோட்ஸ் எழுத வைப்பது.

 • ஏற்கனவே சொன்னது போல் கால அட்டவணையில் வீட்டுப் பாடத்திற்கான நேரத்தையும் தினமும் 1 முதல் 2 மணி நேரம் என்று குறித்துக் கொள்ளுங்கள்.
 • இந்த 2 மணி நேரம் முழுவதும் குழந்தைகளை தொடர்ச்சியாக உட்கார வைத்தால் அவர்களால் எழுதவோ, படிக்கவோ முடியாது. ½ மணி நேரத்திற்கு ஒரு சின்ன இடைவேளை எடுத்துக் கொண்டு மீண்டும் செய்ய சொல்லலாம். குழந்தைகளும் சோர்வாக மாட்டார்கள். பெற்றோரும் சிரமப்படாமல் எழுத வைக்க முடியும்.
 • பிள்ளைகளை வீடியோ கால் மூலம் இரண்டு மூன்று சக நண்பர்கள் அல்லது மாணவர்களுடன் கலந்து படிக்க எழுத வைக்கலாம். எல்லோரும் சேர்ந்து கலந்து பேசி செய்வதால் ஆர்வத்துடன் செய்வார்கள், அதே நேரத்தில் நண்பர்களுடன் பேசுவதால் மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

ஆன்லைன் வழிக் கல்வி கற்பது என்பது எல்லோருமே ஒரு புதிய அனுபவம். குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சில மாறுதல்களை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கொண்டு வருவதன் மூலம் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளச்சலின்றி பாடங்கள் படிக்க முடியும். இந்த நேரத்தில் பெற்றோரும் பிள்ளைகளிடம் தங்களுடைய எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்வது நல்லது. கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ அதே போல் அவர்களின் உடல்/ மன ஆரோக்கியம் மிக மிக முக்கியம்.

ஆரோக்கியமான உடல்/மன நிலை இருந்தால் தான் குழந்தைகள் கற்க தயாராக இருப்பார்கள். மேலே குறிப்பிட்ட அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றிப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் குழந்தையிடம் மாற்றத்தை காணலாம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}