• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் கல்வி மற்றும் கற்றல்

1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்

Kala Sriram
1 முதல் 3 வயது

Kala Sriram ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 05, 2021

1 2
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

1 வயதிலிருந்து 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளை கவனித்தீர்களானால் ஒரு உண்மை புரியும் . ஒரே வயது குழந்தைகள் ஆனாலும் அவர்களின் செயல்பாடுகள் மாறுபடும். பிறந்த குழந்தையாக இருந்ததிலிருந்ததை விட இந்த நிலையில் அவர்களின் உடலின் வளர்ச்சி அதிவேகமாக செயல்படுகிறது. 8 மாதத்திலேயே  சில குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கலாம், சில குழந்தைகளோ 18 மாதங்களில் நடக்க துவங்கியதும் உண்டு.

குழந்தையின் வளர்ச்சியில் ஒவ்வொரு மைல்கல்லை அடைவது பொதுப்படையாக சொல்லப்பட்டிருப்பதை பார்த்து தன் குழந்தைக்கு அந்த வளர்ச்சி இன்னும் வரவில்லையே என்று வருத்தப்படாதீர்கள்.  அவர்களின் வளர்ச்சி வித்தியாசப்படும் என்பதை பெற்றோர்கள் ஞாபகத்தில் வைத்திருக்கும் அதே வேளையில் மைல்கற்கள் எந்தெந்த ஸ்டேஜ்களில் அடைய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் அடைந்திருக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். 1-3 developing stage என்றே சொல்கிறார்கள்.

1-3 வயதின் வளர்ச்சி மைற்கற்கள்

18 மாதக்குழந்தை யாருடைய உதவியும் இல்லாமல் நிற்க கற்றிருக்கும்.

 • கீழே இருக்கும் பொம்மையை குனிந்து கீழே விழாமல் தானே எடுத்துக்கொள்ளும்.
 • கம்பிகளை பிடித்துக்கொண்டு படிக்கட்டுகளிலிருந்து இறங்க முயற்ச்சிக்கலாம்.
 • குதித்து விளையாட துவங்கும் குழந்தை நாம் சொல்வதை திரும்ப சொல்லலாம் சில குழந்தைகள் நாம் சொல்லும் தொனியை மட்டும் பிரதிபலிக்கலாம்.
 • தங்களுக்கு பிடித்தமான பாடலை கேட்டு மகிழ்ந்து கைதட்டி நடனமாடுவது போல செய்யலாம்.
 • இரண்டு கைகளாலும் கெட்டியாக பால் கோப்பையை பிடித்து கொள்வது, தன் கைகளால் எடுத்து தானே சாப்பிடுவது ஆகியவையும் நிகழும் பருவம். சில குழந்தைகள் ஸ்பூனை உபயோகிக்க பழகுவார்கள்,

2 வயது குழந்தைக்கு வளர்ச்சி மைல்கற்கள்

இரண்டு வயதாகும் பொழுது வார்த்தைகளை இணைத்து பேச ஆரம்பிப்பார்கள். சில குழந்தைகளுக்கு ஒரு வார்த்தைக்கும் மறுவார்த்தைக்கும் இடையில் இடைவெளி இருக்கும். இது தவறல்ல. இன்னும் வார்த்தைகளை கோர்க்க அவர்கள் கற்கவில்லை என்று அர்த்தம். அடிக்கடி பேச்சு கொடுக்க அவர்கள் நிறைய வார்த்தைகளை தெரிந்து கொள்வார்கள்.

 • மாடிப்படி ஏறி இறங்குவார்கள். தானாக நடப்பது, ஓடுவது ஆகியவைகளை விருப்பமாக செய்வார்கள்.
 • டாய்லெட் ட்ரையினிங் பழக்கமாகியிருக்கும். பகல் நேரங்களில்  ஈரமாக்கிகொள்வது குறைந்திருக்கும்.
 • இந்த பருவத்தில் உடல் எடையை விட வளர்ச்சியை விட உயரம் கூடுதலாக இருக்கும்.
 • எலும்புகள் வலுவாகத்துவங்கும். ஊட்டசத்து நிறைந்த உணவு அவசியம். உடல்நல குறைபாடு, சரியான உணவு உட்கொள்ளாமல் இருப்பது ஆகியவை வளர்சியை பாதிக்கும்.

3 வயது குழந்தைக்கான வளர்ச்சி மைல்கற்கள்

மூன்று வயதை நெருங்கும் பொழுது தானே தன் உடையை போட்டுக்கொள்ள ஆரம்பித்திருக்கும்.

 • குழந்தை கேள்வியின் நாயகனாக இருக்கும். என்னவென்று யோசிக்கிறீர்களா!! :)) அவர்களின் மூளைவளர்ச்சி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களை அதிகம் கேள்விகளை கேட்க வைக்கும். பொறுமையாக அவர்களுக்கு புரியும் விதத்தில் பதில் சொல்ல வேண்டும். தவறான செய்திகளை தந்து விடக்கூடாது. காரணம் இது கடற்பஞ்சு போல் தனக்கு தரப்படும் தகவல்களை உறிஞ்சி சேமித்துக்கொள்ளும் பருவம்.
 • வார்த்தைகளுக்கே தடுமாறிக்கொண்டிருந்த குழந்தை வாக்கியங்களை உருவாக்கி சரளமாக பேசும்.
 • கதை கேட்டு வளரும் குழந்தைகள் தானாகவே கற்பனை செய்து பேசுவார்கள். இது அவர்களின் கற்பனா சக்தியின் வளர்ச்சியை காட்டும்.

 

குழந்தைகளின் வாழ்வில் மைல்கற்கள் ரொம்ப முக்கியமானவை. பெற்றோராக நம் பங்கு என்ன? அவர்கள் கற்க வேண்டிய விஷயங்களை குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காமல், அவர்கள் விரும்பும் வகையில் கற்பிக்க வேண்டும். குழந்தையிடம் உணவை உண்ணக்கொடுத்தால் அது கீழே சிந்தி அந்த இடத்தை துடைப்பது ஒரு கஷ்டமென நினைத்து நாமே ஊட்டிக்கொண்டிருந்தால் தானே உண்ணும் சுகத்தை அந்த குழந்தை அடையாது. பழகும் வரை பக்கத்தில் இருத்தி உண்ண பழக்கிவிட்டால் பிறகு அந்த மைல்கல்லை குழந்தை அடைந்துவிடும். இது படிக்க எளிது. நடைமுறை படுத்தும் பொழுது எத்தனை நாட்களாகும் என்பது ஒவ்வொரு குழந்தையின் தனித்துவத்தை பொறுத்தது.

அந்த அளவு பொறுமையாக  நாமிருக்க  குழந்தைகள் தங்களின் மைல்கல்லை தொட, அந்த ஆனந்தத்தை நாமும் அனுபவிப்பதும் தானே வாழ்க்கை…

 

 • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Feb 11, 2019

Yen ponnu Ku 16 months achu inum avaluku teeth varalai. athuku Enna pandrathu

 • Reply
 • அறிக்கை

| Oct 29, 2020

Very interesting topic .thanku for sharing. என் குழ்தை ஒவ்வோர் milesstone அடையும்போது அவ்வளவு ஆர்வமாக இருக்கும். முதல் படி எடுப்பது, முதல் முறையாக சிரிப்பது, “பை பை” அசைப்பது போன்ற திறன்களை வளர்ச்சி மைல்கற்கள் என்று சொல்லலாம். குழந்தைகள் விளையாடுவது, கற்றுக்கொள்வது, பேசுவது, செயல்படுவது மற்றும் ஊர்ந்து செல்வது, நடப்பது போன்றவை எல்லாம் குழந்தைகள் மைல்கற்களை அடைகிறார்கள் என்பதை உறுதி செய்ய கொள்ளலாம்.

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}