• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

உங்கள் குழந்தையிடம் 'No' என்ற சொல்லை அடிக்கடி கூறுகிறீர்களா ?

Parentune Support
0 முதல் 1 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 06, 2021

 No

உங்கள் சிந்தனைக்கான உணவு இங்கே! இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள் - எத்தனை முறை ஆம் என்று சொல்வதற்கு பதிலாக உங்கள் பிள்ளையிடம் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள்?

ஆமாம் ... ஆம் என்பது ஒரு சொல் மட்டுமல்ல அது ஒரு உணர்வு. அதை சொல்லும் நபரிடமும் அதை பெறும் நபரிடமும் இது பாஸ்டிவ்வான உணர்வை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு பதிலை ஆம் என்று பெரும்பாலான நேரங்களில் கேட்கும் போது அது உங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. உங்கள் பிள்ளைகளுக்கு அந்த பாஸ்டிவ்வான மற்றும் மகிழ்ச்சியான உணர்வை உருவாக்குவதை கற்பனை செய்து பாருங்கள், அது அவர்களுடன் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

புதிதாக குழந்தை பிறந்து வளரும்போது வேண்டாம் அல்லது ‘இல்லை’ என்பது பெற்றோரின் விருப்பமான வார்த்தையாக மாறும். பெரும்பாலான பெற்றோர்கள் இதை நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். "ஏய், அதை தொடாதே"; "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்"; "தயவுசெய்து இதை செய்ய வேண்டாம்"; "இல்லை அங்கு செல்ல வேண்டாம்"; " இவ்வளவு வேகமாக நடக்க வேண்டாம்"; " அதை வாயில் வைக்க வேண்டாம்"; " நீ குனிய வேண்டாம்"; " நீ சாயக்கூடாது"; " அங்கு நீ செல்ல வேண்டாம்"; " அதை சாப்பிட கூடாது"; "இடத்தை குப்பையாக்க வேண்டாம்"; " நீ ஓட வேண்டாம்", " நீ வெளியே போகக்கூடாது"; " விளையாடக்கூடாது";        " குதிக்க வேண்டாம்" வேண்டாம்  !!! இல்லை!!! வேண்டாம் !!! இது பெற்றோரின் சொற்களஞ்சியத்தின் ஒரு பகுதியாகவும் குழந்தையுடைய சூழலின் ஒரு பகுதியாகவும் மாறுகிறது.

இப்போது, ​​நீங்கள் செய்ய விரும்பும் எல்லாவற்றிற்கும் தொடர்ந்து வேண்டாம் என்று சொல்லப்படுவதை கற்பனை செய்து பாருங்கள்… உங்கள் முதலாளியால், உங்கள் நண்பரால் , உங்கள் பெற்றோரால்... எப்போதும் 'இல்லை'... என்று கேட்பது எரிச்சலூட்டும் .. இல்லையா? பிறகு, குழந்தைக்கு ஏன் நாம் அப்படி செய்ய வேண்டும்? வாழ்க்கையில் உறுதியளிப்பதில் இருந்து அவர்களை ஏன் திசைதிருப்ப வேண்டும்?

வேண்டாம் என்று சொல்வதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

இல்லை என்ற வார்த்தையை நீங்கள் எந்த அளவிற்கு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு குழந்தையின் சுயமரியாதை குறைகிறது. அவர்கள் தன்னை பற்றியும் அவர்களது செயல்களைப் பற்றியும் நம்பிக்கையற்றவராக இருப்பர். ஒவ்வொரு முறையும் நீங்கள் வேண்டாம் என்று சொல்லும்போது, ​​உங்கள் குழந்தையின் சூழலைக் கற்றுக்கொள்வதற்கும் ஆராய்வதற்ககான உற்சாகத்தையும் குறைக்கிறீர்கள். காலப்போக்கில், நிராகரிக்கப்படும் பயத்தால் உங்கள் குழந்தை எந்த முயற்சியையும் எடுக்காமல் இருப்பார்கள். மேலும், சில நேரங்களில், குழந்தை தயக்கமாகவே இருப்பார்கள்.

'இல்லை' சொல்லும் பெற்றோர்கள் சுயமரியாதை குறைந்த குழந்தைகளை உருவாக்குகிறார்கள்.

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் குறை கூறியது, நான் சொல்லும் அனைத்திற்கும் என் மகள் இல்லை என்று கூறுகிறாள், அது யாரையாவது வாழ்த்துவதற்க்கோ அல்லது அவளுடைய பொம்மைகளை அறையிலிருந்து எடுப்பதற்கு கூறினாலும் இல்லை என்ற பதில்தான்.
காரணம் எளிது: அவள் குழந்தையாக இருக்கும் போது எல்லாவற்றிற்கும் இல்லை என்று சொல்ல தொடங்கியவர் நீங்கள் தான், ஏன் அவர்களை குறை கூறுகிறீர்கள்?
நான் கற்பித்த பள்ளியில், ஒரு ஆசிரியர் ‘இல்லை’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியதால்  தனது மாணவர்களை நோக்கி இந்த வார்த்தையை கூறும்போது அவர்கள் அதற்கு உணர்ச்சியின்றி ஆகிவிடுவதை என்பதை நான் கவனித்தேன். இது அவர்களுக்கு இனி எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்காது.

நான் எப்படி வெற்றி  பெற்றோராக மாற  முடியும்?

எல்லாவற்றிற்கும் ஆம் என்று சொல்வது உண்மையில் சாத்தியமா? நான் அப்படி செய்தால் குழந்தையை கெடுத்து விடமாட்டேனா? என் குழந்தையின் மூக்கு ஒழுகிக் கொண்டிருக்கும் போது, ஐஸ்கிரீம் கேட்டால் நான் ஆம் என்று சொல்ல வேண்டுமா? ஆம் பெற்றோராக மாற நான் உங்களை கேட்டுக்கொள்கையில், உங்கள் குழந்தையின் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்ற நான் உங்களை வற்புறுத்தவில்லை. இது அவரவர் சொந்த அனுபவங்களை பொறுத்தது.. உங்கள் பிள்ளையை நெருப்பு அல்லது கத்தியால் விளையாட அனுமதிக்க நான் சொல்லவில்லை. எதிர்மறை மற்றும் வருத்தமான உணர்ச்சிகளை உருவாக்காமல், இல்லை என்று நேராக சொல்லாமல் திசைத்திருப்புவதே உங்கள் தந்திரம்.

‘இல்லை’ என்று சொல்வதற்கு மாற்றாக என்ன சொல்லலாம்?

கவனத்தை திசை திருப்புதல்:   உங்கள் பிள்ளை மேசையை இடிக்கிறார் அல்லது அதை சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றால், அதை செய்ய வேண்டாம் என்று அவரிடம் தொடர்ந்து சொல்வதற்கு பதிலாக, அவனது கவனத்தை வேறு எதிலாவது திசை திருப்பவும். அவர்களை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அல்லது அவருடன் விளையாடுவதற்கு சில பொம்மைகளை கொடுக்கவும். அல்லது சில பொறுப்புகளை ஒப்படைக்கவும்.

குழந்தையை அனுபவிக்க அனுமதிக்கவும்:  உங்கள் குறுநடை போடும் குழந்தை ஒரு கரண்டி அல்லது கத்தியை வைத்து விளையாட வலியுறுத்தினால், அது ஏற்படுத்தக்கூடிய சேதங்களை அனுபவிக்க அவரை அனுமதிக்கவும். ஆனால் கண்டிப்பாக உங்கள் மேற்பார்வையின் கீழ் அவர்களுக்கு விளக்குங்கள் நீங்கள் ஏன் அவர்களை அதை வைத்து விளையாட விரும்பவில்லை என்று.

விருப்பத்தை ஒத்திவைக்கவும்:  இந்த நுட்பம் வளர்ந்து வரும்  குழந்தைகளிடம் வேலை செய்யும். குழந்தைகள் பொதுவாக நேரத்தை அதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் எந்த சூழ்நிலையிலும் தவறான வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். அவர்கள் ஆசையை கவனத்துடன் கேட்டு அதை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கவும்.

எந்த விருப்பமும் நியாயமற்றது அல்ல:  உங்கள் விருப்பம் முக்கியமற்றது மற்றும் அர்த்தமற்றது என்று கருதப்பட்டால் என்ன. குழந்தைக்கு அவர்கள் விரும்புவதைப் பற்றி பெற்றோருக்கு எந்த கவலையும் இல்லை என்று நம்ப வைப்பது ஏன்? அவர்கள் விரும்புவதை கேளுங்கள், அதைப் பற்றி விவாதிக்கவும். நீங்கள் அவர்கள் விரும்புவதை அடைய முடியாது என்று சொல்வதற்க்கு பதிலாக, அவர்களுடைய திட்டங்கள் என்ன என்று கேளுங்கள். அங்கிருந்து நீங்கள் ஒரு கதையை உருவாக்கி உங்கள் குழந்தையுடன் ஆரோக்கியமான உரையாடல் செய்யலாம்.

கோபம் / தவறான நடத்தையை கையாளுதல்

பெற்றோர்களும் ஆசிரியர்களும் தவிர்க்க வேண்டிய ஒரு விஷயம், குழந்தையை பொது இடத்தில் அவமானப்படுத்துவது. நான் தனிப்பட்ட முறையில் பேசத் தொடங்கியதிலிருந்து எனது மாணவர்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கவனித்தேன். நான் அவர்களை வகுப்பறையிலிருந்து வெளியே அழைத்து செல்வேன் அல்லது அவர்களுடன் தனியாக ஒரு கணம் இருப்பேன். முழு வகுப்பினருக்கும் முன்னால் எதுவும் சொல்வதற்கு பதிலாக தனியாக அழைத்து விளக்கமளிப்பேன். எனவே, உங்கள் பிள்ளை அடக்க முடியாத கோபத்தை எறிந்தால், உங்கள் குழந்தையை ஒரு மூலையிலோ அல்லது வேறொரு அறையிலோ அழைத்து சென்று அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி பேசுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களை இறுக்கமாக கட்டிப்பிடித்து, அவர்கள் நடத்தை ஏன் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று சொல்லுங்கள். நீங்கள் இல்லை என்று சொல்ல வேண்டியிருந்தால், அதை செய்யுங்கள், ஆனால் உங்கள் பிள்ளைக்கு அதன் காரணத்தை விளக்குங்கள். பகுத்தறிவு அவசியம். எல்லாவற்றையும் சரி நன்றாக, நிச்சயமாக எல்லா வகையிலும், நிச்சயமாக, முற்றிலும், உண்மையில், அடிக்கடி ஒப்புக்கொண்டது போன்ற சொற்களைப் பயன்படுத்துங்கள்.

நினைவில் கொள்ளுங்கள் ஆக்கப்பூர்வமான பெற்றோர் வளர்க்கும் குழந்தைகள் ஆக்கப்பூர்வமாக வளர்கிறார்கள்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}