உங்கள் குழந்தை உணவை மென்று சாப்பிடுவதில்லையா? என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கப்பதற்காக அம்மாக்கள் அவர்களுக்கு ஏற்ற உணவுகளை ஏற்ற வகையில் தயாரித்து கொடுப்பதுண்டு. ஆனாலும் சில குழந்தைகள் உணவை (baby food tips) விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள்.ஆரம்ப கால கட்டத்தில் குழந்தை உணவை வாயில் வைத்து மெல்ல ஆரம்பிக்கும். உணவை வாயில் அங்கும் இங்கும் உருட்டிக் கொண்டு இருக்குமே தவிர உணவை விழுங்காது. இதனால் குழந்தை உணவை சாப்பிடவில்லையே என பெற்றோர்கள் வருத்தப்படுவதுண்டு.
இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். குழந்தைக்கு உணவின் மீதான நாட்டம் ஏற்படும் போது அவர்களாகவே தங்கள் வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவார்கள்…சில நேரங்களில் குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும் போது உணவை வாயில் வைத்த உடனே அப்படியே அதனை விழுங்கி விடும். அதனை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம்.
எந்த வயதில் குழந்தைகள் உணவை மெல்ல ஆரம்பிக்கிறார்கள்?
குழந்தை மென்று சாப்பிடும் பழக்கம் வரும்வரை உணவை விழுங்கவே செய்வார்கள். உணவின் சுவை அறியும் வரை ரசித்து சாப்பிடவும் செய்யமாட்டார்கள். ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தை உணவை தானாக சாப்பிடுவதை பழக்க வேண்டும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டாலே நாளடைவில் குழந்தை அழகாக தனியாக சாப்பிட தொடங்கும்
குழந்தை நாளாடைவில் எல்லோரும் சாப்பிட உட்காரும் போதே தானாக ஓடி வந்து உட்கார்ந்து கொள்ளும். அதன் பிறகு குழந்தைக்கு உணவை ஊட்டும் போதும் உணவை துப்பாமல் மென்று சாப்பிட தொடங்கும். பசி எடுத்தாலும் குழந்தை கையில் வைத்திருக்கும் பொருள்களை மென்று அசைபோட்டபடி செய்தால் அதற்கு பசி எடுக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
வளரும் புதிய திறன்களைப் போலவே, மெல்லுவதும் உங்கள் குழந்தை பெற்ற மற்ற அனுபவங்கள் மற்றும் திறன்கள் போலவே சொல்லலாம்
- 6-9 மாதங்களில் மெல்ல ஆரம்பிக்கலாம். இந்த காலகட்டம் கடினமான உணவு (தூய்மையான, கட்டியான உணவுகள்) அறிமுகத்துடன் தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நேரமாகும்.
- உங்கள் குழந்தை எல்லாவற்றையும் வாயில் வைப்பது போல் உணர்கிறீர்களா? நன்று. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவளுக்கு வெவ்வேறு அமைப்புகளையும் உணவு வகைகளையும் கொடுக்கவும், அதனால் அவள் தாடைகள், நாக்கு மற்றும் கன்னங்களை திறம்பட பயன்படுத்த முடியும்.
- கடினமான உணவை தாமதமாக அறிமுகப்படுத்துவது உங்கள் குறுநடை போடும் குழந்தைக்கு மெல்லுவதில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 10 மாதங்களுக்குள் உங்கள் குழந்தை மெல்லுவதை ஊக்குவிக்க பிசைந்த உணவுகளை குறைந்து கொடுக்க வேண்டும்
குழந்தைகள் மென்று சாப்பிட உதவும் குறிப்புகள்
பொதுவாக குழந்தைக்கு சோறூட்டும்போது தாய் தன் கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு, குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு முகம் பார்த்து பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். குழந்தையின் கண்ணோடு கண் ஒட்டியபடி உணர்வுப்பூர்வமாக சோறூட்ட வேண்டும்.
6 மாதத்தில்
பொதுவாக குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து நாம் திட உணவை கொடுக்க ஆரம்பித்து இருப்போம். ஆனால் அந்த உணவு வகைகள் எல்லாமே மசித்த பழங்கள், மசித்த காய்கறிகள், கஞ்சி வகைகள், கூழ் வகைகள் என்ற வடிவில் தான் இருக்கும்.
2 வயது
2 வயது ஆனவுடன் தாய் குழந்தைக்கு ஊட்டக் கூடாது. குழந்தையை தன் கைகளினால் சாப்பிட வைக்க வேண்டும். ஆரம்பத்தில் ஸ்பூனில் சாப்பிட எந்தக் குழந்தையும் பழகாது. அதனால் கைகளால் சாப்பிடச் சொல்லலாம். நகங்களை வெட்டி, இரு கைகளை சுத்தப்படுத்தி, குழந்தையை தானாக சாப்பிட வையுங்கள். 2 கைகளில் சாப்பிட்டாலும் தடுக்காதீர்கள்.
குழந்தைக்கு எப்படி உணவளிக்க வேண்டும்?
குழந்தை விரும்பி வாயில் உணவை வாங்கினால் மட்டுமே ஊட்ட வேண்டும். வாயில் திணிப்பதோ, கட்டாயப்படுத்தவோ கூடாது. அப்படி மீறிச் செய்தாலும் ஒரு பருக்கை சோற்றைக் கூட கூடுதலாகவோ, குறைவாகவோ குழந்தை சாப்பிடாது. குழந்தை போதும் போதாது என்பதை சமிக்ஞைகள், உடல்மொழி மூலம் வெளிப்படுத்திவிடும்.
குழந்தைக்கு சரியான இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தைக்கு உண்ணும் உணவு திகட்டாமல் இருக்க வேண்டும்.
குழந்தைக்கு பிடித்த உணவுகளை அதிகமாக செய்து கொடுக்க வேண்டும்.
எல்லா நேரமும் அவர்களாக உணவை உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்தாமல், அவர்கள் விரும்பாத உணவை நீங்களாக கதை சொல்லியே சாப்பிட பழக்குங்கள். அதன் சுவை அறிந்துவிட்டால் பிறகு குழந்தைகள் உங்களை எதிர்பார்க்க மாட்டார்கள்.
உணவு பற்றி குழந்தைகள் எப்படி புரிந்து கொள்கிறார்கள்?
குழந்தை தானாக சாப்பிட துவங்கும் முன் அவர்கள் கையில் உணவை வைத்து உருட்டியும் அங்கும் இங்கும் திருப்பியும் ஆராய்ச்சி செய்வார்கள். அவ்வாறு அவர்கள் செய்வதற்கு அனுமதியுங்கள். ஏனெனில் குழந்தைக்கு உணவு குறித்த புரிதல் ஏற்பட்ட பிறகு அவர்களாகவே உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட பழகுவார்கள்.
குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் வெள்ளிக் கிண்ணத்தில் உணவு அளிப்பதால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுகின்றது. சூடாக உணவை வைத்து தரும் போது, வெள்ளியின் எதிர்ப்பு பாக்டீரியல் பண்புகள் அதிகமாகி உணவில் கலக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகின்றது.
உணவு அமைப்புக்கும் மெல்லுவதற்கும் இடையே தொடர்பு உள்ளதா?
புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் போது, அது மெதுவாக செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், குழந்தைகள் பொதுவாக வாய்மூடி பேசுகிறார்கள், ஏனென்றால் அதைக் கையாளும் முதிர்ச்சி அவர்களுக்கு இன்னும் இல்லை.
உதாரணம்
எனது குறுநடை(1-3 வயது) போடும் குழந்தைக்கு நான் எப்படி சப்பாத்தியை மெல்ல ஊக்குவிப்பது?
சப்பாத்தி அடிக்கடி உணவாகிறது - குறுநடை போடும் குழந்தை மெல்ல விரும்பவில்லை. சப்பாத்தி ஒரு உலர் உணவு மற்றும் அரிசியை விட மெல்லுவதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.
எனவே, அரிசி மற்றும் கஞ்சி போன்ற உணவுகளுடன் தொடங்குங்கள், உங்கள் குழந்தை முதலில் கரண்டியால் சாப்பிடலாம், அது எளிதாக இருக்கும்.
இந்த உணவுகளை சாப்பிட ஆரம்பித்தவுடன், நீங்கள் சப்பாத்திகளை ரோல் வடிவில் அல்லது சிறிய கடியாக வழங்கலாம்
நீங்கள் எப்போதும் சப்பாத்தியை சிறிது குழம்பு / பருப்பு / தயிரில் தோய்த்து பிசைந்து கொடுக்க வேண்டும். இது சப்பாத்தியை மெல்லுவதை எளிதாக்க உதவும்
நட்சத்திரம், இதயம், முக்கோணம் போன்ற வித்தியாசமான வடிவ சப்பாத்திகளை எப்போதும் பார்வைக்கு சுவாரஸ்யமாக மாற்றலாம். இதேபோல், கீரையுடன் பச்சையாகவும், கேரட்டுடன் ஆரஞ்சு நிறமாகவும் அல்லது பீட்ரூட்டை சிவப்பு நிறமாகவும் செய்யலாம்
உங்கள் குழந்தைக்குக்கு சுவாரஸ்யமாகவும், சுவையாகவும் இருக்கும்!
குழந்தையிடம் வளர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுப்பழக்கம்
- குழந்தையை சம்மணமிட்டு உட்காரவைத்து சாப்பிட பழக்குங்கள். அனைவரும் சாப்பிடும் போது குழந்தைக்கு அனைத்து சுவையான உணவுகளையும் பழக்க வேண்டும். கலரான உணவுகள் குழந்தைக்கு எப்பொதும் பிடிக்கும். அதனால் சத்து நிறைந்த உணவுகளை எப்போதும் கொடுத்து பழக வேண்டும்.
- தினம் ஒரு காய்கறியை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தட்டில் அலங்காரமாக வைக்க வேண்டும். கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைத்து வைக்கலாம். சுண்டல் வகைகளை நன்றாக குழைய வேகவைத்து வைக்கலாம்.
- குழந்தை தனியாக சாப்பிட தொடங்கினாலும் தனியாக விடாமல் குழந்தையின் அருகில் அமர்ந்து உட்கார பழகுங்கள். குழந்தை உணவை எடுத்துவைக்கும் ஒவ்வொரு கவளத்தையும் சரியான முறையில் வாயில் வைக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
- குழந்தை தனியாக சாப்பிடும் போது வேகவேகமாக சாப்பிட நேரிடலாம். சாப்பிடும் போது சில குழந்தைகளுக்கு உணவு தொண்டையில் சிக்கிக் கொள்ளும் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் உடன் இருப்பது நல்லது.
- குழந்தைகள் இந்த நேரத்தில் சாப்பிட்டே ஆக வேண்டும் என கட்டாய படுத்தாதீர்கள். குழந்தை பசியாக இருக்கும் போது உணவை கொடுத்து பழக்குங்கள். குழந்தை கைகளால் உணவை சாப்பிட்டாலும் இடையில் தாய்ப்பாலையும் கண்டிப்பாக கொடுங்கள்.
குழந்தைகள் தானாக சாப்பிடும் போது அதனை மற்றவர்களுக்கும் கொடுத்து சாப்பிட பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம் குழந்தைக்கு மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை வளரும். ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்து சாப்பிடுவதன் அவசியம் குறித்தும் கற்றுக் கொடுங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...