• உள்நுழை
 • |
 • பதிவு
கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

ரம்ஜான் 2022 – 4 கிளாஸிக் உணவு வகைகளோடு கொண்டாடுங்கள்

Bharathi
கர்ப்பகாலம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 01, 2022

 2022 4

ரம்ஜான் மாதம் ஏப்ரல் 3ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை உள்ளது. 2022ல் ரம்ஜான் கொண்டாட்டம் மே 2ம் தேதியான திங்கள் அல்லது மே 3ம் தேதியான செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சந்திர பிறை தெரிவதை வைத்துத் தான் எந்த நாள் ரமலான் என அறிவிக்கப்படும்.

ரமலான் மாதத்தின் முக்கியத்துவம்

இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி அவா்களின் மீது இறைவன் அல்லாஹ் அவா்களால் புனித குரான் இறக்கி வைக்கப்பட்டது என்று பழைய இஸ்லாமிய புராணங்கள் தொிவிக்கின்றன. ஆகவே இந்த மாதத்தில் இஸ்லாமியா்கள் அல்லாஹ் அவா்களிடம் பக்தி கொண்டு, நோன்பையும், தொழுகைகளையும் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும்.

இந்த 30 நாட்களும் அதிகாலை 4.15 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் நோன்பிருந்து மாலையில், தொழுகையை முடித்து கொண்டு உணவை எடுத்துக் கொடுத்துக் கொள்வர்கள்.இந்த ரமலான் மாதத்தில் உணவைத் தவிர்த்திருப்பது நோன்பின் அடிப்படை என்றாலும் அதுதவிர தவறான நடத்தைகள், பொய், பொறாமை உட்பட அனைத்து தீய குணங்களையும் விட்டு விலகியிருக்க வேண்டும். இல்லையென்றால், நோன்பு இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும், இறைவனுக்காக இரவுத் தொழுகையில் ஈடுபடுவது, குர்ஆன் ஓதுவது முதலானவற்றின் வழியாக ஆன்ம பலம் பெற வேண்டும். ஆண்டுதோறும் தனது சொத்தில் 2.5% தொகையைக் கணக்கிட்டு இம்மாதத்தில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இஸ்லாமின் இன்னொரு கட்டாயக் கடமையான இதை ’ஸகாத்’ எனச் சொல்வார்கள்.

ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசையைத் தொடர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை வரக்கூடிய நாளில் புனித ரமலானாக கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ரம்ஜான் பண்டிகை கிலாஸிக் உணவு வகைகள்

மாம்பழ ஷாஹி துக்கடா

தேவையான பொருட்கள்

 • 2 பிரட் துண்டுகள்
 •  1 டீஸ்பூன் சர்க்கரை
 • 1/2 கப் மாம்பழ ப்யூரி
 • உலர் பழங்கள்

செய்முறை

ரொட்டித் துண்டுகளை எடுத்து, பின்னர் அவற்றை மிருதுவாக வறுக்கவும். ஆறவிடவும்.3.பொரித்த பிரட் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து மேலே இருந்து மாம்பழக்கலவையை ஊற்றவும்.4.அது முடிந்ததும் டிரை ஃப்ரூட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

உடைத்த கோதுமை பாயாசம்

தேவையான பொருட்கள்

 • கெஹுன் கி கீர்
 • 150 உடைந்த கோதுமை
 • 50 நெய்
 • 50 திராட்சை
 • 2 ஸ்பூன் ஏலக்காய் தூள் 50 கிவெல்லம் 100 கிராம் முந்திரி பருப்பு
 • 500 மிலி பால்

செய்முறை

 • தடிமனான அடியில் ஒட்டாத பாத்திரத்தில் நெய்யை சூடாக்கவும்; உடைத்த கோதுமை சேர்த்து கசியும் மற்றும் மணம் வரும் வரை வதக்கவும்.
 • திராட்சையும் சேர்த்து அதிக வெப்பத்தில் வதக்கவும். பச்சை ஏலக்காய் தூள் மற்றும் முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும்.
 • வெல்லம் சேர்த்து நன்கு கலந்து ஒரு நிமிடம் சமைக்கவும். தொடர்ந்து ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து, தொடர்ந்து கிளறி 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
 • வெப்பத்தைக் குறைத்து, பால் சேர்த்து, படிப்படியாக நன்றாகக் கலக்கும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். சூடாக பரிமாறவும்.

நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்:

 • பச்சரிசி/சீரக சம்பா அரிசி - 1/2 கப்
 • பாசிப்பருப்பு - 1/8 கப்
 • வெங்காயம் - 1 (நறுக்கியது)
 • * தக்காளி - 1 (நறுக்கியது)
 • கேரட் - 1/4 கப் (நறுக்கியது)
 • * புதினா - 1/4 கப்
 • * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
 • * கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 • * தண்ணீர் - 3 கப்
 • * கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்
 • * நீர்ப்போன்ற தேங்காய் பால் - 1/2 கப்
 • * உப்பு - சுவைக்கேற்ப

மசாலா பொடி...

 • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
 • கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

 • எண்ணெய் - 2 டீஸ்பூன்
 • பட்டை - 1 இன்ச்
 • கிராம்பு - 2
 • ஏலக்காய் - 1
 • பச்சை மிளகாய் - 1

செய்முறை:

 1. முதலில் 1/2 கப் பச்சரிசி மற்றும் 1/8 கப் பாசிப்பருப்பை எடுத்து நீரில் நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்துவிட்டு, 10 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
 2. பின்னர் மிக்சர் ஜாரில் அந்த அரிசி மற்றும் பாசிப்பருப்பை கொரகொரவென்று அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 3. பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
 4. பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
 5. பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின் கேரட், புதினா சேர்த்து, அதோடு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
 6.  அடுத்து அதில் அரைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கிளறி, 3 கப் நீரை ஊற்றி கிளற வேண்டும்.
 7. பின்னர் அதில் 1/2 கப் நீர்போன்ற தேங்காய் பாலை சேர்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
 8.  விசில் போனதும் குக்கரை திறந்து, மசித்து விடுங்கள். கெட்டியாக இருந்தால், சிறிது நீர் சேர்த்து கலந்து மசித்துவிடுங்கள்.
 9. அடுத்து அதில் 1/2 கப் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவினால், ரம்ஜான் நோன்பு கஞ்சி தயார்.

ஷீர் குருமா - இது இல்லாமல் நோன்பு முடியாது.

தேவையான பொருட்கள் :

 • பால் - 1 லிட்டர், சேமியா - 1 கப்
 • நெய் - 2 ஸ்பூன்
 • முந்திரி , பாதாம் , பிஸ்தா, பேரிச்சை - தேவையான அளவு
 • ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை, சர்க்கரை - 1/2 கப்,
 • குங்குமப் பூ - 1/4 ஸ்பூன்

செய்முறை

நெய்யை நன்கு காய வைத்து நட்ஸுகளை வதக்கிக் தனியாக வைத்துவிடுங்கள். இதேபோல் சேமியாவையும் நன்கு உடைத்து நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். அதேசமயம் பாத்திரத்தில் பாலை நன்குக் காய்ச்சவும். நன்குக் காய்ந்ததும் வறுத்த சேமியாவை போட்டு கிளறவும். சர்க்கரை சேர்க்கவும். வெந்ததும் அணைத்துவிடவும்.பின் வறுத்து வைத்துள்ள நட்ஸ், ரோஸ் வாட்டர் , ஏலக்காய் பொடி மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். சுவையான ஷீர் குர்மா தயார்

அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}