• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உணவு மற்றும் ஊட்டச்சத்து

என் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்க்க நான் எவ்வாறு உதவினேன்?

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 31, 2019

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

இன்றைக்கு எல்லா பெற்றோர்களும் சந்திக்கிற சவாலான விஷயம் தங்கள் குழந்தைகளை சாப்பிட வைப்பதும் அதன் ஆரோக்கியத்தை உணர வைப்பதும் தான். எனது குழந்தைக்கு திட உணவை முதன் முதலில் கொடுக்கும் போது என் மகளுக்கு எப்படி சீரான உணவுப்பழக்கத்தை கொண்டு வருவது போன்ற பல கேள்விகள் எல்லா அம்மாக்களையும் போலவே எனக்கும் இருந்தது. நான் எப்போதுமே இயற்கையான மற்றும் பதப்படுத்தப்படாத உணவு வகைகளையே அதிகமாக விரும்புபவள். ஆதலால் என் மகளுக்கும் அதே பழக்கத்தை ஆரம்பத்திலேயே கொடுக்க வேண்டும் என்று திட்டமிட தொடங்கினேன். அதனால் என் மகளுக்கு வாங்கும் உணவுப்பொருட்கள் அனைத்தையுமே ஆரோக்கியமானதாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கினேன்.

என் மகளுக்கு இப்போது 3.5 வயதாகின்றது. அவள் பழங்கள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவாள். பேக்கெட் உணவுகளை விட அவளுக்கு இயற்கையான உணவின் மீது விருப்பம் அதிகம் உண்டு. அவளுக்கு பிடித்த உணவை என்னிடம் கேட்டு செய்து தர சொல்லி சாப்பிடுவாள். அவளாக சாப்பிட தொடங்கும் போதே அவளுக்குள் உருவாக்கிய ஆரோக்கியமான உணவுப்பழக்கம் தான் இதற்கு முக்கிய காரணம்.

அவள் திட உணவை சாப்பிட ஆரம்பிக்கும் பொழுது

என் குழந்தைக்கு திட உணவு கொடுக்கும் போதே பழங்கள், காய்கறிகள் வீட்டில் தயாரிக்கக்கூடிய பலகாரங்கள் ஆகியவற்றை கொடுத்துப் பழக்கப் படுத்தினேன். பிஸ்கட் சாக்லேட் சிப்ஸ் போன்ற பண்டங்களை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டேன். இது அவ்வளவு சுலபம் கிடையாது. அவளின் கண்ணிலிருந்து சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை அவ்வளவு எளிதில் மறைத்து வைக்க முடியாது. ஒரு நாளில் ஏதாவது முறையில் அவள் கையில் இந்த ஸ்நாக்ஸ் கிடைத்துவிடும். இதனால் அவளின் வளர்ச்சிக்கு தேவையான ஆரோக்கியம் கிடைப்பதில் தடை ஏற்பட்டது. அதனால் அவளுக்கு பழங்கள் காய்கறி சாலட், ராகி லட்டு, கடலை உருண்டை, முறுக்கு போன்ற ஆரோக்கிய பண்டங்களை அறிமுகப்படுத்தி நல்ல உணவுப்பழக்கத்தை கற்றுக் கொடுக்க விரும்பினேண்.

A.ஆரம்ப கால வெற்றிகளுக்காக நான் செய்த சிறப்பான மாற்றங்கள்

 • என் மகள் பசியின் போது சர்க்கரை நிறைந்த பிஸ்கட்ஸ், குக்கீஸ் மற்றும் சோடா போன்ற ஆரோக்கியமற்ற உணவினை தேர்வு செய்யாமல் இருக்க வைப்பதே என்னுடைய மிகப்பெரிய சவால். இதை சமாளிக்க நான் அவளுக்கு பழங்கள், சிறிது மசாலா கலந்த காய்கறி சாலட், பன்னீர் மற்றும் வீட்டில் விதவிதமாக தயாரித்த சட்னி ஆகியவற்றை செய்து கொடுத்தேன்.

 • அவள் குடிக்கும் பாலில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி ஆகியவற்றை கலந்து கொடுத்தேன்

 • மகள் சாப்பாட்டின் போது நிறைய தண்ணீர் குடிப்பாள். இதனால் பசியின்மை இருந்தது. ஒரு குடும்பமாக நாங்கள் உணவுக்கு பின் 10-15 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம்

 • ஒரு குடும்பமாக தினமும் குறைந்தது இரண்டு தடவை சேர்ந்து  சாப்பிட முடிவு செய்தோம். எனவே, காலை உணவும் இரவு உணவும் வேடிக்கையான குடும்ப நேரமாக மாறியது. முன்பு என் மகள் தனது உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று நினைப்பவள்., ஆனால் அம்மா மற்றும் அப்பா இருவரும் மெதுவாக சாப்பிடுவதைக் கண்டதும் அவளும் இந்த பழக்கத்திற்கு மாறத் தொடங்கினாள். இதன் காரணமாக அவள் பல்வேறு உணவுகளை சுவைத்து சாப்பிட்டாள். இது அவளது பசியை மேம்படுத்தவும் உதவியது. இந்த வேளையில் ஆரோக்கியமான உணவுகளை அறிமுகபடுத்தினேன். பழங்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட லட்டூஸ், கடலை மிட்டாய் ஆகியவற்றைக் கொண்டு ஸ்நாக்ஸாக மாற்றினேன்.

 • ஒரு பெற்றோராக குழந்தைகளின் உணவு வேலையில் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. வற்புறுத்தி சாப்பிட வைப்பது மற்றும்  மொபைல் போனில் வீடியோ காண்பித்து சாப்பிட வைப்பது ஆரோக்கியமான உணவுப்பழத்திற்கு எதிரானதாக நான் எண்ணுகிறேன்.

 • நான் எப்போதும் அவளை சாப்பிட வைக்க அவள் பின் சுற்றிக் கொண்டே இருப்பேன். என் நண்பர்களின் அறிவுரைப்படி முதலில் நான் இதை நிறுத்தினேண். அவளுக்கு பசி எடுத்து என்னிடம் சாப்பாடு கேட்கும் வரை நான் காத்திருந்தேன். இது அம்மாக்களாகிய நாம் செய்ய வேண்டிய முக்கியமான பழக்க மாற்றமாகும்.

 • ஒரு குழுவாக உணவைத் தயாரிப்பது என்பது நான் சமீபத்தில் செய்ய தொடங்கிய ஒன்று, அதுவும் இப்போது நன்றாக வேலை செய்கிறது. அவள் சமீபத்தில் சாண்ட்விச் தயாரித்தாள், அதைவிட முக்கியம் அதை நன்கு விரும்பி சாப்பிட்டாள்.

B.விரைவாக தயாரிக்க மற்றும் ஆரோக்கியமான உணவு தேர்வுகள்

குழந்தைகளுக்கான உணவு வகைகளை தேடும்  போது சந்தையில் பல நிறுவனங்கள் நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் என் குழந்தைக்கு சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முழு பொறுப்பும் அக்கறையும் ஒரு அம்மாவிற்கே அதிகமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். என் மகளுக்கு 3 வயதாகும் போது கிடைக்கக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நான் சரியான ஒன்றை மதிப்பீடு செய்யவே எண்ணினேன் அதுவும் அவளுடைய அன்றாட உணவு ஆரோக்கியமான மற்றும் சத்தானதாக, பதப்படுத்தப்படாத மற்றும் செயற்கை நறுமணம் இல்லாதததாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நான் CEREGROW –வை தேர்ந்தெடுத்தேன் ஏனென்றால்

 • இது டாட்லர் என்று அழைக்கப்படும் குறுநடை போடும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தானிய உணவு. இது அவர்களின் தினசரி உணவு தேவையை பூர்த்தி செய்கின்றது.

 • இது பதப்படுத்தப்படாத மற்றும் செயற்கை நறுமணம் சேர்க்காதது.

 • Ceregrow உணவு குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் உதவும் சீரான உணவு. ஏனென்றால் இதில் தானிய வகைகள், 17 வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

 • இது சுவையாகவும் குழந்தைகள் விரும்பியும் சாப்பிடும் வகையில் உள்ளது. எனது மகள் இந்த சுவைக்காக உணவு நேரத்தை எதிர்பார்த்திருப்பாள்.

 • சந்தையில் கிடைக்கும் எல்லாவற்றையும் அலசியதில் என் மகளுக்கு இதுவே ஆரோக்கியமான தேர்வாக நான் எண்ணினேன்.மற்றும் எந்த நேரத்திலும் அவளின் பசியை போக்கும் ஆரோக்கியமான உணவு இது.

இது அவ்வளவு எளிதல்ல என்பதையும் நான் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த நாட்களில் நான் பொறுமை இழந்திருக்கிறேன். எனக்கும் என் மகளுக்கும் சில கடினமான தருணங்கள் இருந்திருக்கிறது. இந்த விஷயத்தில் பொறுமையாக இருப்பது என்பது நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். மேலும் ஒரு குடும்பமாக சிறந்த மாற்றங்களைச் செய்வது, ஆரோக்கியமானதை தேர்ந்தெடுப்பது, விரைவான உணவுகளைத் தயாரிப்பது போன்ற விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் விரும்பிய மாற்றங்களை சீக்கிரமே காண்பீர்கள்.

Disclaimer-  This Blog is supported by Nestle Ceregrow. A child needs more nutrition than an adult. Each bowl of Ceregrow contains the goodness of grains, milk & fruits and makes up for the lack of sufficient nutrition.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 6
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Jan 10, 2020

Thankyou! This is helpful

 • Reply
 • அறிக்கை

| Feb 28, 2020

en kulanthaiku 3 age aguthu ethuvume nalla sapita matinka enna panna madam

 • Reply
 • அறிக்கை

| Feb 28, 2020

en kulanthaiku 3 age aguthu ethuvume nalla sapita matinka enna panna madam

 • Reply
 • அறிக்கை

| Feb 28, 2020

en kulanthaiku 3 age aguthu ethuvume nalla sapita matinka enna panna madam

 • Reply
 • அறிக்கை

| Feb 28, 2020

en kulanthaiku 3 age aguthu ethuvume nalla sapita matinka enna panna madam

 • Reply | 1 Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}