• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல் பொழுதுபோக்குகள்

குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் மற்றும் விளையாட்டுகள் ஆலோசனைகள்

Canisha Kapoor
3 முதல் 7 வயது

Canisha Kapoor ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 09, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

பெற்றோர்களாக நாம் அனைவரும் நம் குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் அல்லவா?  அதில் ஒரு முக்கியமான ஆசை உங்கள் குழந்தைக்கு ஒரு தனிப்பட்ட விருப்பம் அல்லது ஆசை இருக்கவேண்டும் என்பது. ஆனால், பெரும்பாலும், ஒரு குழந்தைக்கு தனித்துவமான பொழுதுபோக்குகளுக்கான யோசனைகளைத் தேர்வு செய்வது, பொழுதுபோக்கு வகுப்பில் மீதமுள்ள இடத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது, அது சாத்தியம் ஆனால் சற்று கடினமானது.

அக்கம் பக்கத்தில் பல வகையான வகுப்புகள் இருந்தாலும், சில சமயங்களில் உங்கள் குழந்தைக்கு சரியான பொழுதுபோக்கைத் தேர்வு செய்வது கடினம். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்துவமான ஆளுமை, நலன்கள், திறமைகள் உள்ளன. எனினும், உங்கள் பிள்ளைகள் மிகவும் நேசித்து அனுபவிப்பதை ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது. பொழுதுபோக்கு என்பது வளர்ந்து வரும் குழந்தைகளில் மொத்த வளர்ச்சியையும் வெளிப்பாடுகளையும் அதிகரிக்க உதவுகிறது. அந்த காரணத்திற்காக, நாங்கள் ஒவ்வொரு வகையான குழந்தைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு வகைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்!

படைப்பாற்றல் உருவாக்க கலை மற்றும் கைவினை பொழுதுபோக்குகள்

உங்கள் குழந்தைகள் கலை மற்றும் கைவினை பொருட்களை நேசிப்பவர்கள் என்றால் இந்த பட்டியலை கவனியுங்கள். கைவினை என்பது உங்கள் குழந்தையின் ஆக்கப்பூர்வ அறிவை அதிகரிக்க ஒரு சிறந்த வழி.

 1. ஓவியம் - விரல் ஓவியம், குளியல் தொட்டியில் ஓவியம், தண்ணீர் ஓவியம்
 2. களிமண் சிற்பங்கள்
 3. கத்திரிக்கோல் காகிதக்  கலைகள்
 4. புள்ளிகளை சேர்த்து ஓவியம் உருவாக்கும் கலை
 5. காகிதக் கைவினை - இதில் அழகான அட்டைகளை(கார்ட்ஸ்) உருவாக்கலாம் மற்றும் சுவரோவியங்கள் தயாரிக்கலாம்
 6. ஸ்டிக்கர்கள் - ஸ்டிக்கர் புத்தகங்கள் நேரத்தை ஆக்கிரமிக்கவும் குழந்தைகளை ஈடுபாட்டுடன் வைத்திருக்கவும் உதவும்.
 7. புகைப்படம் எடுத்தல்
 8. ஸ்கிராப்புக்கிங் - பிள்ளைகள் தங்கள் புகைப்படங்களுடன் ஒரு கதையைப் உருவாக்க விரும்புவார்கள். இதில் அவர்கள் வேடிக்கை காகிதம் மற்றும் ஸ்டிக்கர்கள் பயன்படுத்தி அழகு சேர்க்கமுடியும்.

குழந்தைகள் வீட்டிற்கு வெளியே செய்யக்கூடிய பொழுதுபோக்குகள்:

வெளிப்புற நடவடிக்கைகள், கை கால்களை நீட்டி அழுத்தம் குறைக்க மற்றும் வைட்டமின் சி பெற உதவுகிறது. வெளியில் விளையாடுவது மேலும் ADHD (Attention-deficit hyperactivity disorder) குறைக்க மற்றும் கண்பார்வை மேம்படுத்த உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இதையெல்லாம் விட வெளிப்புற விளையாட்டு என்பது மிகவும் வேடிக்கையான ஒன்று.

 1. இயற்கையை ரசித்துக்கொண்டு ஒரு குறுநடை
 2. ரயில் பயணங்கள்
 3. உயிரியல் பூங்கா
 4. விளையாட்டு மைதானம்
 5. பைக் ரைடிங்
 6. கடற்கரை / மணல் கட்டிடம் மற்றும் நாடகம்

மனம் திறக்க மற்றும் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்:

சில பொழுதுபோக்குகள் உண்மையில் உங்கள் குழந்தையின் சிந்தனை திறனை மேம்படுத்த செய்யும். இத்தகைய பொழுதுபோக்கின் சில உதாரணங்கள் இங்கே:

 1. புதிர்கள்
 2. வடிவம் மாற்றும் வண்ணம் கண்டுபிடித்தல்
 3. வாசித்தல்
 4. பல மொழிகளை கற்றல்
 5. அபாகஸ் பயிற்சி

குழந்தைகள் எளிதாக சேகரிப்பதற்கு வசதியான தொகுப்புகள்:

குழந்தைகள் சேகரிப்பதன் மூலம் பல கலைகளை கற்று கொள்ள முடியும். பொருட்களை ஒரு குழுவாக சேகரிக்கும் பொது குழந்தைகள் அதில் உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் பற்றி அறிய முடியும் மற்றும் எண்ணும் திறன் வலுப்படுத்தும். உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட வகை பொருள்களை சேகரிக்க இயற்கையாகவே விரும்பலாம். அதில் சில:

 1. பாறைகள்
 2. இலைகள்
 3. பொம்மைகள்
 4. அட்டைகள்
 5. கடல்சங்குகள்
 6. நாணயங்கள்
 7. தபால் தலைகள்

குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி:

செயல்திறன் கலை என்பது உங்கள் பபடைப்புத்திறனும் மற்ற  திறனை வெளிப்படுத்தவும் ஒரு சிறந்த வழி.

 1. ஆட்டம்(டான்ஸ்) - பாலேட், டாப், மற்றும் ஜாஸ் ஆகியவை
 2. பாடல் மாற்றும் இசை கருவிகள்
 3. நடிப்பு திறமை
 4. கதை நேரம் மாற்றும் கதை கூற பழகுதல்
 5. கருவிகள் - டிரம்ஸ், மணிகள், விசைப்பலகை(keyboard) போன்றவை
 6. பழைய பொருட்களில் பொம்மைகள் மற்றும் கலைப்பொருட்கள் செய்தல்
 7. மேஜிக் பயிற்சி

குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கான சிறந்த விளையாட்டு:

குழந்தைகள் ஒரு செயலில் ஈடுபடுவதற்கும் அதில் ஒருங்கிணைப்பதற்கும் கற்பிப்பது மட்டுமே சிறந்த வழி. யாருக்கு தெரியும், நீங்கள் ஒருவேளை எதிர்கால ஒலிம்பிக்ஸ் வீரரை உயர்த்திக் கொண்டிருக்கலாம்.

 1. ஜிம்னாஸ்டிக்ஸ்
 2. கால்பந்து
 3. மினி கோல்ப்
 4. கூடைப்பந்து
 5. நீந்தும் பயிற்சி

பெற்றோர்களுக்காக:

பொழுதுபோக்குகள் ஒரு குழந்தையின்  ஒட்டுமொத்த வளர்ச்சியின் தாக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. பணியில் கவனம், நல்ல நகரும் திறன்கள், பகிர்தல், கற்பனை நாடகம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றிற்கு கவனம் செலுத்துவது, பொழுதுபோக்கிலிருந்து கற்றுக் கொள்ளும் சில பாடங்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொழுதுபோக்குகளில், குழந்தைகளுக்கு சில நேரங்களில் சலிப்பு ஏற்படுவது சகஜம். அவர்கள் ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருப்பது மற்றும் மிக அதிகமாக எலெக்ட்ரோனிக்ஸில் நேரம் செலவழிப்பதை விட பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றை கருத்தில்கொள்ள வேண்டும்.

சில திறமைசாலியான குழந்தைகள் தங்கள் பொழுதுபோக்கை அவர்களின் பிற்கால வளர்ச்சிக்கான முதல் படியாக மாற்றிக் கொள்கிறார்கள். விளையாட்டு, நடிப்பு அல்லது இசையைப் போலவே, ஒரு நல்ல திறமைமிக்க பொழுதுபோக்கும் உங்கள் குழந்தைகளை வாழ்க்கையில் பெரிய உயரத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையின் சந்தோசத்தை விட உங்களுக்கு பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியது. எனவே, அவர்கள் விருப்பப்படும் பொழுதுபோக்குகளை கற்றுக்கொடுத்து அவர்களின் முன்னேற்றத்தையும் சந்தோஷத்தையும் கண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Oct 31, 2020

Wonderful blog!!! உங்கள் குழந்தைக்கு பலவிதமான வாய்ப்புகளை வழங்குவது முக்கியம், இதனால் நமக்கு தெரியாத அவர்களுக்குள் மறைக்கப்பட்ட எந்த திறமையும் வெளிப்பட்டு விடும். குழந்தைகளுக்கு தன்னை புகழ்வது encourage பண்ணுவது ரொம்ப பிடிக்கும். Only parents can help their child to identify their talents by giving opportunities .

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}