• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான அத்தியாவசியமான தடுப்பூசிகள்

Ankita Gupta
1 முதல் 3 வயது

Ankita Gupta ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 23, 2021

1 3
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

தடுப்பூசிகள் போடுவதற்கான தேவை என்னவெனில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்வதற்காகும். பொதுவாக நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆனது எவ்வித நோய் பாதிப்பின் போதும் துரிதமாக, அதை எதிர்த்து திறம்பட செயல்புரிய ஆரம்பிக்கும். நாமும் மருத்துவரைச் சந்தித்து, வெளிப்புறத்தில் இருந்து மருந்துகள் உட்கொண்டு நோயை எதிர்க்கிறோம். இவ்வாறு உள்ள போது தடுப்பூசிகள் எதற்கு? அதன் அவசியம் என்ன? என்பனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பொருளடக்க அட்டவணை

 • தடுப்பூசியின் அவசியம் என்ன?

 • தடுப்பூசியின் உட்பொருள்கள் என்ன?

 • தடுப்பூசி எவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது?

 • தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்ன?

 • தடுப்பூசிகளின் அட்டவணை

 • 1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

 • கூட்டு தடுப்பூசி

 • வலியில்லா தடுப்பூசிகள்

தடுப்பூசியின் அவசியம் என்ன?

பண்டைய காலத்தில் கண்டறியப்படாத நோய்களினால் பாதிப்புற்றோர்கள் தீவிரமான நோய் பாதிப்புக்கும் , இறப்புக்கும் உள்ளானார்கள். உதாரணமாக அம்மை நோயினால் இறப்புற்றோர் வீதம் அதிகரித்தது. போலியோ பாதிப்பினால் உடல் ஊனமுற்றோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. அம்மை நோயினால் பாதிப்புற்று மீண்டு வந்தோர் உடலில் அந்நோய்க்கான எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது அறியப்பட்டது. எனவே நோய்த் தாக்குதலின் போது அந்நோயினை எதிர்த்து போராடி அதற்கேற்ற எதிர்ப்பாற்றலை உருவாக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், அப்பாதிப்பினை சீர் செய்தபின், பின்வரும் காலங்களில் அந்நோய் ஏற்படாத வண்ணமும், ஒரு வேளை ஏற்படின் அதை எதிர்க்கும் வண்ணம் அந்நோயை எதிர்ப்பதற்கு தேவையான எதிர்ப்பாற்றலை உற்பத்தி செய்து வைத்துக் கொள்கிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இத்தன்மையே தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு ஆதாரமாய் அமைந்தது.

தடுப்பூசியின் உட்பொருள்கள் என்ன?

தடுப்பூசியின் உட்பொருள் ஆனது அந்நோய் பாதிப்புக்கு காரணமான பாக்டீரியாக்களும் வைரஸ்களுமே ஆகும். ஆனால் செயலிழைக்கப்பட்ட அல்லது உயிரற்ற பாக்டீரியாக்களும் வைரஸ்களுமே ஆகும். ஆகவே இவை நோய் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் நோய் எதிர்ப்பு மண்டலம் இவ்வயற்காரணிகளுக்கு எதிராக அக்காரணிகளின் தன்மைக்கு ஏற்ற வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

தடுப்பூசி எவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது?

இவ்வாறு தடுப்பூசியின் மூலம் செலுத்தப்படும் உயிரற்ற நோய்க் காரணிகளால் அந்நோய்க்கான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்பட்டு விடுவதால், பிற்காலத்தில் அந்நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் அதனை திறம்பிக்க கையாண்டு பாதிப்பை ஏற்படுத்த முடியா வண்ணம் தடுப்பூசியின் மூலம் உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் தடுத்து விடுகிறது.

தடுப்பூசியின் பக்க விளைவுகள் என்ன?

தடுப்பூசியினால் குழந்தைகளுக்கு அதனை செலுத்தும்போது வலி உண்டாகும். அது தவிர்க்க இயலாதது. அதனால் விழைய இருக்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு ஏற்று கொள்ள வேண்டும்.

ஊசி போடப்பட்ட இடத்தில் வீக்கம், சிவந்த தன்மை போன்றவை ஏற்படலாம். இதற்கு வெதுவெதுப்பான நீரில் துணியை நனைத்து ஒத்தி எடுக்கலாம். ஊசி போடப்பட்ட இடத்தை நன்கு தேய்த்து விட வேண்டும். இது சிறிது நேரத்தில் சரியாகி விடும்.

அடுத்ததாக, காய்ச்சல். தடுப்பூசிக்கு பிறகு வரக்கூடிய காய்ச்சல் ஆனது பாதிப்பாக கருதக்கூடாது. தடுப்பூசி செயல்பட ஆரம்பித்ததற்கான அறிகுறியே காய்ச்சல். காய்ச்சல் என்பது உடலில் புகுந்த அயற்காரணிக்கு எதிராக, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முதற்கட்ட பாதுகாப்பு செயல்பாடு ஆகும். எனவே காய்ச்சலானது நோய் எதிர்ப்பு ஆற்றல் உற்பத்திக்கான ஆரம்பம் ஆகும். ஆகவே பயப்பட வேண்டியதில்லை.

தடுப்பூசிகளின் அட்டவணை

கர்ப்ப காலத்திலேயே தாய் மற்றும் சேய்க்கான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. குழந்தை பிறந்ததது முதல் பதின்பருவம் வரையிலான தடுப்பூசிகளின் தொகுப்பினை இங்கு காணலாம்.

 • பிசிஜி எனப்படும் காசநோய்க்கான தடுப்பூசி

 • போலியோ

 • டிடீஎபி எனப்படும் டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுஸிஸ்

 • ஹச்.ஐ.பி

 • நிமோனிக்கல்

 • ரோட்டா வைரஸ்

 • ஒ.பி.வி

 • ஹெப்படைடிஸ் பி

 • இன்ஃப்ளுயன்சா

 • தட்டம்மை

 • சின்னம்மை

 • ஹெப்படைடிஸ் எ

 • எம்.எம்.ஆர்

 • டைப்பாய்டு

 • மெனிங்கோக்கல்

தடுப்பூசியின் மூலம் பதினான்கு அதி தீவிரமான நோய்களைத் குழந்தைக்கு இரண்டு வயதாகும் முன் செலுத்துவதன் மூலம் தடுக்க முடியும். ஒரு வயதிற்கு முற்பட்ட காலத்தில் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளைத் தவற விட்டவர்கள் 12 மாதம் முதல் 24 மாத காலக்கட்டத்தில் அத்தடுப்பூசிகளையும் சேர்த்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். ஒரு வயது முதல் மூன்று வயது வரையிலான காலத்தில் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் பின்வருமாறு.

 • சின்னம்மை

 • டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமல்

 • ஹெப்படைடிஸ் பி

 • எம்.எம்.ஆர் எனப்படும் தட்டம்மை, முன் கழுத்து கழலை மற்றும் ரூபெல்லா

 • போலியோ

 • நிமோனிக்கல்

 • ஹெப்படைடிஸ் எ

ஒரு முறை மட்டும் ஒர் நோய்க்கான தடுப்பூசி போடுதல் போதாது. ஒரே தடுப்பூசியானது வேறுபட்ட காலத்தில் வேறுபட்ட அளவுகளில் வழங்கப்பட வேண்டும்.

கூட்டு தடுப்பூசிகள்:

இவ்வகை தடுப்பூசியில் பல நோய்க்கான தடுப்பூசிகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு ஒரே தடுப்பூசியாக தரப்படுகிறது. இதன் மூலம் குழந்தைக்கு ஒவ்வொரு முறையும் ஏற்படும் வலி மற்றும் பக்கவிளைவுகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஆனால் சில குறிப்பிட்ட தடுப்பூசிகளை மட்டுமே ஒன்று சேர்க்க முடியும் மற்றும் மருந்தின் அளவு தனிப்பட்ட தடுப்பூசியை விட குறைவாக இருக்கும்.

வலியில்லா தடுப்பூசிகள்

இவை சமீப காலமாக புழக்கத்தில் உள்ளது. ஆனால் விலை உயர்ந்ததாக உள்ளது. கூட்டு தடுப்பூசிகள் போன்று மருந்தின் அளவு குறைவாக காணப்படும்.

இறுதியாக, தடுப்பூசியானது குழந்தையை நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். அதனைத் தக்க முறையில் சரியான நேரத்தில் செலுத்தி குழந்தைகளின் நலம் காப்போம்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}