தந்தையர் தின ஸ்பெஷல் - என் குழந்தைக்காக நான் மாற்றிக் கொண்ட விஷயங்கள்

All age groups

Radha Shri

3.2M பார்வை

3 years ago

 தந்தையர் தின ஸ்பெஷல் - என் குழந்தைக்காக நான் மாற்றிக் கொண்ட விஷயங்கள்
சமூக மற்றும் உணர்ச்சி
வாழ்க்கை திறன்கள்
Special Day

ஒரு குழந்தை பிறந்த பிறகு தாயின் வாழ்வில் மட்டும் மாற்றங்கள் வருவதில்லை, தந்தையின் வாழ்விலும், நடவடிக்கைகளிலும் நிறைய மாற்றங்கள் வரும். இன்று பெரிம்பாலான அப்பாக்கள் செய்ய முடியாது, செய்ய மாட்டார்கள் என்று காலங்காலமாக கடைபிடித்த கற்பிதங்களை உடைத்திருக்கிறார்கள். தாயின் உள்ளுணர்வைப் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். தந்தையின் உள்ளுணர்வைப் பற்றி அறிய வேண்டுமா! தந்தைவழி உள்ளுணர்வு தாய்வழி உள்ளுணர்விலிருந்து வேறுபட்டது.

Advertisement - Continue Reading Below

தாய் தனது குழந்தையோடு பிணைப்போடு இருக்கும் நிறைய விஷயங்கள்,  குழந்தை தாயின் வாசத்தை கண்டுபிடிக்கும். தாய்ப்பால் குடிக்கும் போது ஏற்படும் ஆழமான பிணைப்பு என இயற்கையாகவே அமைக்கப்பட்டுள்ளன.. நவீன சமூகத்தில் குழந்தை பிறந்ததில் இருந்தே வளர்ப்பதில் தந்தையின் பங்கும் மிக முக்கியமாகிறது. அதை அப்பாக்கள் சிறப்பாக செய்து கொண்டும் இருக்கிறார்கள்

அப்பாக்கள் உள்ளுணர்வு

அப்பாக்கள் தங்கள் குழந்தைகளை எதிர்காலத்திற்கு தயார்படுத்த முயற்சிக்கிறார்கள். உதாரணத்திற்கு, தந்தை தனது குழந்தையுடன் விளையாடினால், தந்தை குழந்தையை வெல்ல விடமாட்டார். தந்தைவழி உள்ளுணர்வு என்னவென்றால், அவர் தனது மகனையோ அல்லது மகளையோ தோல்வியடைய செய்ய கற்றுக்கொடுக்கிறார்

ஆரோக்கியமான தந்தைகள் தங்கள் மகள்கள் மற்றும் மகன்களின் நடத்தையை ஒழுங்குபடுத்த உதவுவதற்கு முன்மாதிரியாக கருதப்படுகிறார்கள், எப்படி அமைதியாக இருக்க வேண்டும், எப்படி சுய திறன்களை வளர்த்துக் கொள்வது மற்றும் ஒரு நல்ல பணி நெறிமுறையை ஊக்குவிக்கிறது.

என் குழந்தைக்காக நான் என் வாழ்வில் மாற்றிக் கொண்டது

தந்தையர் தினத்தை சிறப்பாக்கும் விதமாக Parentune க்கு பிரத்யோகமாக அப்பாக்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்களைப் பார்க்கலாம்.

ஸ்ரீநாத் – 1 வயது குழந்தையின் தந்தை

image

என் குழந்தை பிறக்கும் போது, அப்பாவாக போகிறேன் என்ற மனநிலை கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியது. அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு  எனக்கு பக்குவம் இல்லை. இயல்பாகவே நான் அமைதியானவன். ஆனால் என் மகள் பிறந்த பிறகு என்னிடம் நிறைய மாற்றங்களைப் பார்க்கிறேன். என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது பொறுப்புகளை பெரிதாக பகிர்ந்து கொண்டது இல்லை. ஆனால் மகள் பிறந்த பிறகு பொறுப்புகளை நானே எடுத்து செய்கிறேன். என்னை கலகலப்பாக மாற்றிவிட்டாள் என் மகள்.

அவளுடன் அதிகமாக விளையாடுகிறேன், பேசுகிறேன். இப்போதெல்லாம் என் மகள் தான் என்னுடைய மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக இருக்கிறாள். மகள் பிறந்த பிறகு வாழ்க்கை இன்னும் அழகாக மாறிவிட்டது.

ஆகஸ்டீன் – 10 மாத குழந்தையின் தந்தை

image

வீட்டுல அதிகமாக நேரம் செலவு செய்யறதில்லன்னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க. எப்போதும் வெளியில இருக்கிற நேரம் தான் அதிகம். நண்பர்களோடு அதிகமா நேரம் செலவு செய்வேன். ஆனா என் குழந்தை பிறந்த பிறகு வேலை முடிஞ்சா போதும் நேரே வீட்டுக்கு வந்து என் குழந்தையோட நேரம் செலவு செய்யவே விரும்புவேன். என் குழந்தைக்காக மாத்திக்கிட்ட விஷயம் இது.

நான் இரவுல கண் முழிச்சு வேலை கூட பார்க்க விரும்ப மாட்டேன். ஆனா என் குழந்தையை இரவுல அதிகமா நான் தான் கவனிப்பேன்.  என் அப்பா என்னை இப்படி பாத்துகிட்டாரான்னு தெரியல, ஆனா என் குழந்தையோட சந்தோஷத்திற்காக நான் மாற எப்போதும் தயாரா இருக்கேன். இதுவே ஒரு பெரிய மாற்றமா நினைக்கிறேன்

சாகர் சுரேஷ் – 2 வயது குழந்தையின் தந்தை

Advertisement - Continue Reading Below

image

என் வாழ்வில் இதுவரை ஒரு குழந்தையை கூட நான் தூக்கியதில்லை. எப்படி குழந்தையை பிடித்து தூக்க வேண்டும் என்று கூட தெரியாது. என் மகள் NICU வில் இருந்து வந்ததால் நிறைய கவனம் எடுக்க வேண்டி இருந்தது. குழந்தையை தூக்க நான் கற்றுக் கொண்டேன். மனைவி தூங்கும் போது நான் தான் குழந்தையை பராமரிப்பேன். என் மார்பில் தான் மகள் தூங்குவாள். என் குழந்தைகாக டயப்பர் மாற்றுவது, தூங்க வைப்பது, கஞ்சி வைப்பது என புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

என் குழந்தைக்காக வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் நான் ஒரு நாளும் வெட்கப்பட்டதில்லை. தந்தையான பின் பொறுமையும், பொறுப்பும் கூடியிருக்கிறது என்று சொல்லலாம்.

சாம் – 4 வயது குழந்தையின் தந்தை

image

 

நான் மீடியாவுல வேலை செய்கிறேன். நேரத்திற்கு சாப்பிட மாட்டேன். முன்பெல்லாம் உடம்பு சரியில்லான்னா பெரிசா கவலைப் பட மாட்டேன். நான் அப்பாவானவுடன் என் குழந்தைக்காக என் உடல்நலம் மேல அதிக அக்கறை வந்திருக்கிறது. குழந்தைக்காக நேரத்திற்கு சரியாக சாப்பிடுகிறேன். ஏன்னென்றால் நாங்க எப்போதும் சேர்ந்து சாப்பிடுவோம். என் குழந்தை கூட சாப்பிட வேண்டும் என்பதற்காகவே நான் என்னை மாற்றிக் கொண்டேன்.

இன்னொரு முக்கியமான மாற்றம், குடும்பத்தோடு நேரம் செலவு செய்யறது. என்னோட பணிக்கு சனி, ஞாயிறு, விழாக்களுக்கு விடுமுறையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. என் குழந்தைக்காக நேர ஒதுக்குவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

சந்தோஷ் – 3 வயது குழந்தையின் தந்தை

image

என் வாழ்க்கையில் குழந்தைகளுக்காக நான் மாத்திட்ட இரண்டு பழக்கங்களை சொல்ல விரும்புறேன். ஒன்று என் பையனுக்காக  மதுப் பழக்கத்தை கைவிட்டேன். இரண்டாவது எனக்கு நைட் ஷோ படம் போறது ரொம்ப பிடிக்கும். கல்லூரி நாட்களில் இருந்து மகள் பிறக்கும் வரைக்கும் நைட் ஷோவிற்கு நான் போயிட்டு தான் இருந்தேன். ஆனால் மகளுக்காக பிறந்த இப்போது  நைட் ஷோ போறதில்ல.

ஜான்சன் – 11/2 வயது குழந்தையின் தந்தை

image

எனக்கு கேட்ஜெட்ஸ் மீது அதிக விருப்பம் உண்டு. குழந்தை பிறப்பதற்கு முன் கேட்ஜெட்ஸ் வாங்க நிறைய செலவு செய்வேன். என் மகன் பிறந்த பிறகு அந்த செலவைக் குறைச்சுட்டேன். அதே மாதிரி கேட்ஜெட்ஸ் கூட நேரம் செலவு செய்வதையும் குறைச்சிட்டேன். என் மகன் கூட நேரம் செலவு செய்யறதை நான் மிஸ் பண்ணக் கூடாது என்பதல் குழந்தைக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறேன். இது இரண்டுமே என் குழந்தைக்காக விருப்பப்பட்டு மாத்திகிட்ட விஷயங்கள்.

இதே போல் உங்கள் வாழ்வில் குழந்தை பிறந்த பிறகு ஒரு அப்பாவக நீங்கள் மாற்றிக் கொண்ட விஷயங்கள் என்னென்ன என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, தந்தை அன்புக்கு நிகரில்லை.

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

#dadsdo

 

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...