• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

ஃப்ளூவில் இருந்து குழந்தையை காப்போம்!

Parentune Support
1 முதல் 3 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Feb 09, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

ஃப்ளூவில் இருந்து குழந்தையை காப்போம்!

 

என்னோட மகள் காவ்யாவும், அவ கூட படிக்கிற நிஷாவும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். இப்போ திடீர்னு ரெண்டு மூணு நாளா நிஷா ஸ்கூலுக்கு வரலேன்னு காவ்யா என் கிட்ட வந்து சொன்னா. நான் உடனே நிஷாவோட அம்மா கிட்ட விசாரிச்சப்போ தான் நிஷாவுக்கு இன்ஃப்ளூயன்ஸா வந்திருக்குன்னு தெரிஞ்சுது.

 

ஒரு நாலஞ்சு நாளுக்கு முன்னாடி நிஷாவுக்கு உடம்பு சரியில்லாம இருந்திருக்கு. காய்ச்சல், முதுகு வலி, கால் வலியால நிஷா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா. மூக்கு ஒழுக்கும் அவளுக்கு இருந்திருக்கு. இது க்ளைமேட் மாறினதால வர்ற சாதாரணமான பிரச்னை தான் அப்படின்னு நினைச்சு காய்ச்சலுக்கும், சளிக்கும் வீட்டு வைத்தியம் பண்ணி இருக்காங்க நிஷாவோட அம்மா.

 

ஆனா காய்ச்சல் நிற்கவே இல்ல. அப்புறம் நிஷாவை டாக்டர் கிட்ட கூட்டிப்போன போது தான் அது பருவநிலை மாறுதலால் வர்ற காய்ச்சலோ சளியோ அல்ல, அது இன்ஃப்ளுயென்ஸான்னு தெரிஞ்சது.

 

உலக அளவில ஒவ்வொரு வருடமும் 30 முதல் 50 லட்சம் பேர் இன்ஃப்ளுயென்ஸாவால பாதிக்கப்படுறாங்க. சரியாக கவனிக்காம விட்டா அது உயிருக்கே கூட ஆபத்தாக அமையலாம். 

பலநூறு பேர் கூடுற பள்ளிக்கூடம் மாதிரியான இடங்களுக்கு போய்ட்டு வரும்போது நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா இப்படி நிறைய நுண்ணுயிரிகளோட தான் வீட்டுக்கு வருவாங்க குழந்தைங்க. இதனால அவங்க தொற்று வியாதியால பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு. அதனால அவங்களுக்கு தடுப்பூசி போடுறது ரொம்ப நல்லது.  இன்ஃப்ளுயன்ஸா பத்தி நான் தெரிஞ்சுக்கிட்ட சில விஷயங்களை உங்களுக்கும் சொல்றேன்.இன்ஃப்ளூயன்ஸானா என்ன?


ஃப்ளூ அப்படின்னு பொதுவா அழைக்கப்படுற ஒரு தொற்று நோய் தான் இன்ஃப்ளூயன்ஸா. ஏ வகை, பி வகை, சி வகை அப்படின்னு மூன்று வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் நம்மள தாக்குது. அது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலை பாதிக்குது. 2-5 வயசு உள்ள ஒரு குழந்தைக்கு ஆஸ்துமா இருந்தாலோ , 3 வயசு உள்ள குழந்தைக்கு காது பிரச்னை இருந்தாலோ இல்ல நிமோனியா, சைனஸ் நோய்த்தாக்கம் ஏதாவது இருந்தாலோ முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது அவசியம். குழந்தைகளுக்கு ஃப்ளூ தொற்று எப்படி ஏற்படுகிறது ?


ஸ்கூல்ல குழந்தைங்க ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து விளையாடுவாங்க; சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிடுவாங்க. இப்படி இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு உள்ள குழந்தைகள தொடுறதாலயோ இல்ல அவங்க எச்சில் படுறதாலயோ ஃப்ளூ தொற்று ஏற்படும்.


குழந்தைக்கு ஃப்ளூ வந்திருக்குன்னு எப்படி தெரிஞ்சுக்கிறது?


கீழே குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும்.. கொஞ்சமா ஆரம்பிச்சு அதிகமாகிட்டே போகும்.

  1. நெருப்பு மாதிரி காய்ச்சல்
  2. மூக்கு ஒழுகுதல் 
  3. தொண்டை வலி
  4. மூட்டு  மற்றும் தசை வலி 
  5. தலைவலி 
  6. இருமல் , தும்மல் 
  7. சோம்பல்/ சோர்வு 


குழந்தைக்கு ஃப்ளூ வந்தால் என்ன செய்வது?


ஃப்ளூ இருக்குன்னு தெரிஞ்சா டாக்டர் ஓய்வு எடுக்கச் சொல்வாரு. நிறைய நீர் ஆகாரம் எடுத்துக்க சொல்வாரு. இதுக்கு ஆன்டிபயாடிக் எதுவும் கிடையாது. ஆனால் காய்ச்சலை குறைப்பதற்கு  மருந்து கொடுப்பார். 

ஒருவேளை ஃப்ளூவால உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டா குழந்தைய வீட்டிற்கு உள்ளேயே வைத்து பார்த்து கொள்ளவும்.வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு ஃப்ளூ பாரவாமல்  இருக்கும். 

ஃப்ளூவை தடுப்பது எப்படி?
ஃப்ளூவை தடுக்கவும் அதோட வீரியத்தை குறைக்கவும் இன்ஃப்ளுயன்ஸா  தடுப்பூசி போடணும். 6 மாத குழந்தைல இருந்தே இன்ஃப்ளுயன்ஸா தடுப்பூசி போடலாம்.

 

இந்த கட்டுரை பத்தின உங்களோட கருத்துகளை கீழே கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க.

 

 

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Parentoon of the day
Lighter side of parenting

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}