• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் மற்றும் செயல்பாடுகள்

Bharathi
7 முதல் 11 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 29, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகளின் ஆரம்ப கால பருவங்களில் அதாவது 8 வயது வரை அவர்களின் மூளை வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் சீக்கிரமாக கற்றுக் கொள்வார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை ஞாபக மறதி பெரியவர்களுக்கு மட்டும் ஏற்படுவதாக இருந்தது இப்போது இந்த காலத்தில் வாழ்க்கைமுறை மாற்றங்களால் சிறியவர்களுக்கும் அதிக அளவில் ஏற்படுகிறது . இதற்கு சில காரணங்கள் உள்ளன.

ஞாபக சக்தியை குறைக்கும் செயல்பாடுகள் என்னென்ன?

உணவு முறை

 • தூக்கம் ( 6 முதல் 8 மணி நேரம் தூங்காமல் இருப்பது) . அல்லது ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் இருப்பது).
 • இரவில் cell phone அல்லது Computers பார்ப்பது.  ( இதனால் மூளையின் அருகில் மெலட்டோனின் ஒரு சுரப்பி உள்ளது . இது குறைவாக சுரப்பது .
 • நம் முன்னோர்கள் போல் சுறு சுறுப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம்.
 • நியாபக சக்தி குறைபாடுகளுக்கு சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். நியாபக சக்தியை அதிகரிக்கவும் , மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருக்கவும் முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

உணவு ஏன் ஒரு காரணம்?

 நாம் உண்ணும் ஆரோக்கியமான உணவு நமது நினைவாற்றல், செறிவு மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மூளை, நமது உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, நாம் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும் தன்மை உடையது. எனவே, குழந்தைகள் மூளையை ஊக்குவிக்கும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம்.

நினைவாற்றலை அதிகரிக்க  என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்?

 1. கார்போஹைட்ரெட், புரதச்சத்து மற்றும் கொஞ்சம் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை காலையில் குழந்தைகளுக்கு கொடுப்பது, அவர்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். முட்டையில் அதிகளவில் புரதம் நிறைந்துள்ளதால் இது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
 2. எண்ணெய் மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளது. இது மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நமது உடல் செல்லின் கட்டுமான அமைப்புகளுக்கு தேவையான ஒன்றாகும். சால்மன், கானாங்கெளுத்தி, டுனா, மத்தி, ஹெர்ரிங் போன்ற மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இந்த உணவை வாரத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக்கி கொள்ளலாம். மீன் சாப்பிடாதவர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்..
 3. வண்ணமயமான காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. அவை நமது மூளையில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தக்காளி, சர்க்கரை வள்ளி கிழங்கு, பூசணி, கேரட் மற்றும் கீரை போன்ற காய்கறிகள் நிச்சயம் உங்கள் குழந்தையின் உணவில் இடம் பெற வேண்டிய காய்கறிகள். குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இந்த காய்கறிகளை சாஸ்கள் அல்லது சூப்களில் சேர்த்து கொடுக்கலாம்.
 4. பால், தயிர் மற்றும் சீஸ் ஆகியவற்றில் புரத சத்து மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை நமது மூளையின் திசு, நரம்பியக்கடத்திகள் மற்றும் என்சைம்களின் வளர்ச்சிக்கு முக்கியம். இவை அனைத்தும் மூளையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உணவுகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், இது வலுவான பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு முக்கியம்.
 5. கால்சியத்தின் தேவை குழந்தைகளின் வயதைப் பொறுத்து மாறுபடுகிறது. கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளின் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாலில் கால்சியம் சத்து நிறைந்திருந்தாலும், சில குழந்தைகள் பாலை விரும்புவதில்லை. வேறு வழிகளில் குழந்தைகளின் உணவில் பால் சேர்க்கலாம். குறிப்பாக கஞ்சி, புட்டு மற்றும் அப்பம் போன்ற உணவுகளில், தண்ணீருக்கு பதிலாக பாலைப் பயன்படுத்தலாம்.
 6. பீன்ஸில் புரத சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாக பீன்ஸ் உள்ளது. பீன்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. சான்விட்ச் போன்ற உணவுகளில் பீன்ஸ் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 7. பெர்ரிப் பழங்களில் குவர்செடின் என்னும் மூளை செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.
 8. பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். அவர்கள் சொன்னது பொய்யல்ல உண்மை தான். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்
 9. தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
 10. நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவதால் ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது.
 11. மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச் செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.

வாழ்க்கைமுறையில் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். இது அவர்களின் பாடங்களை ஞாபகத்தில் வைத்து கொள்ள உதவுகிறது.

அதற்கான சில குறிப்புக்கள்.....

 • முதலில் குழந்தைகளுக்கு அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
 • திட்டமிட்டு பாடங்களைப் படிக்க வேண்டும்..
 • விருப்பப் பாடங்களை முதலில் படிக்காமல் கடினமான பாடங்களை முதலில் படிக்க வைக்க வேண்டும்..

 என்னுடைய ஆசிரியர் எனக்கு கொடுத்த ஒரு அறிவுரையை உங்களுக்கு கூறுகிறேன்..

 • பள்ளியை விட்டு வந்ததும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு இன்று காலை முதல் மாலை வரை என்னென்ன ஆசிரியர் கற்றுக் கொடுத்தார் என ஒரு தாளில் எழுத சொல்லுங்கள்... எவ்வளவு ஞாபகம் இருக்கிறது என்று தன்னை தானே தெரிந்து கொள்ள இந்த முறை உதவும். முயற்சி செய்து பாருங்கள் தோழிகளே. இது ஒரு அருமையான டெக்னிக்
 • அன்றைய பாடங்களை அன்றே படித்தால் கொஞ்சம் எளிதாக இருக்கும்..
 • வார இறுதி நாட்களில் ஒரு சிறிய தேர்வு வைத்து பரிசோதித்துக் கொள்ளலாம்..
 • ஞாபக சக்தியை அதிகரிக்கும் செஸ், புதிர்கள் போன்ற மூளை விளையாட்டுகள் உதவும்
 • தியானம், யோகா செய்ய பழக்கப்படுத்த வேண்டும்..

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். உங்கள் கருத்துக்களை கேட்க நான் விரும்புகிறேன்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}