உங்கள் குழந்தைகளின் சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்

All age groups

Parentune Support

4.1M பார்வை

4 years ago

உங்கள் குழந்தைகளின் சக்தியை அதிகரிக்க உதவும்  உணவுகள்
ஊட்டத்துள்ள உணவுகள்
நோய் எதிர்ப்பு சக்தி

குழந்தைகள் வளர வளர அவர்களது விளையாட்டுத் தனம் அதிகமாகிக் கொண்டே போகும். அவர்கள் ஒரு இடத்தில் ஒரு நிமிடம் கூட நிற்பதில்லை. அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களைப் பிடித்து நிறுத்துவதற்கென்றே பெற்றோருக்கு தனி சக்தி தேவைப்படும். இப்படி சுட்டித் தனத்துடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஒருபுறம்.இன்னொரு பக்கம் தினமும் ஸ்கூலுக்குப் போகும் சிறுவர்களோ வீடு திரும்பும்போது மிகவும் சோர்வுடன் இருப்பார்கள். இந்த இரண்டு விதமான குழந்தைகளின் பிரச்னையும் ஒன்று தான். அது குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் உணவு.

Advertisement - Continue Reading Below

பெற்றோர்களுடைய கவலையே குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ப சாப்பிடுவதில்லை என்பதே. ஒரு சில குழந்தைகளே பெற்றோர் சாப்பிட அழைத்ததும் ஆர்வமுடன் செல்கின்றனர். பெரும்பாலான குழந்தைகளோ சாப்பாடு என்றாலே வேண்டா வெறுப்பாக பார்க்கின்றனர். அப்படி இருக்கும் குழந்தைகளுக்கு நேரத்துக்கு சரியான உணவை அதுவும் சத்துள்ள உணவு வகைகளை எப்படி கொடுப்பது என்கிற குழப்பம் பல பெற்றோருக்கு உண்டு.

குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில் சத்துள்ள உணவு வகைகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியமானது. இந்த வயதில் அவர்களுக்கு சக்தியூட்டும் உணவு வகைகள் என்னென்ன கொடுக்கலாம் என்று பார்க்கலாம்.

கீரை

கீரை நம் உடலுக்கு நல்லது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் குழந்தைகளுக்கு அதனை அடிக்கடி கொடுத்து வந்தால்அவர்கள் சீக்கிரமே அதனை வெறுத்து விடுவார்கள். அதனால் சத்தான உணவைக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவர்களது வெறுப்பை சம்பாதிக்கும் வேலைகளை கண்டிப்பாக செய்யக் கூடாது. வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக கீரை கொடுக்கலாம். எல்லா முறையும் ஒரே மாதிரி சமித்துக் கொடுக்காமல் ஒவ்வொரு முறையும் கீரையை விதவிதமாக செய்து கொடுக்க வேண்டும். கீரைப் பொறியல், கீரை மசியல், கீரைக்கூட்டு, கீரைக்குழம்பு இப்படி விதவிதமான வகைகளில் கீரையை சமைத்துக் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் கீரை வகைகளை விரும்பி சாப்பிட வைக்க முடியும். 

கேரட்

Advertisement - Continue Reading Below

கேரட் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சில குழந்தைகளுக்கு கேரட்டை சமைத்துக் கொடுத்தால் பிடிக்காது. அவர்களுக்கு சமைக்கும் போதே பச்சையாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொடுக்கலாம். இல்லையென்றால் அவர்களுக்கு கேரட் ஜூஸ், கேரட் ஷேக், ப்யூரி போன்ற வகைகளை செய்து கொடுக்கலாம்.

வெஜிட்டெபில் புலாவ்

காய்கறிகள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. காய்கறிகளை தினமும் குழம்பாகவும், பொரியலாகவும் சமைத்து கொடுத்தால் அது அவர்களுக்கு போர் அடித்து விடும். அதனால் வெஜிடபிள் புலாவ் போன்ற காய்கறி வகைகள் கலந்த உணவுகளை செய்து கொடுக்கலாம். எல்லா வகையான காய்கறிகளும் அதில் சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளை விரும்பி உண்ணும் வழக்கம் சமீபகாலமாக குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதனைத் தவிர்த்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுக்கும் நேரத்தில் தினமும் ஒரு தானிய வகையை சேர்த்துக் கொடுக்கலாம். அது அவர்களுக்கு சத்து சேர்க்கும். தானியங்களை விரும்பி சாப்பிடாத குழந்தைகளையும்  நம் பக்கம் இழுக்க ஒரு வழி இருக்கிறது. அது அவர்களின் விருப்பப்படி ஸ்நாக்ஸை கொடுப்பதுதான். உடனே குழம்பிவிட வேண்டாம். அதாவது அவர்களுக்கு பிடித்த ஸ்நாக்ஸ் கொஞ்சம் மற்றும் தானியங்கள் கொஞ்சம் என்று பிரித்துக் கொடுத்தால் அவர்களும் பிடித்த ஸ்நாக்ஸை சாப்பிடுவதற்காகவே தானியங்களை சாப்பிடத் தொடங்குவார்கள். பின்னாளில் அதுவே அவர்களுக்கு பழக்கமாகி விடும்.

பழங்கள்

பழங்கள் நமக்குத் தேவையான சத்துக்களை வாரி வழங்கும் அமுதசுரபி. தினமும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கத்தை சிறு வயது முதலே அவர்களுக்கு உருவாக்கி விட வேண்டும். பழங்கள் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. பழங்களை அப்படியே சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு அதனை ஜூஸ் போட்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு என எது செய்தாலும் அதனை கலர் ஃபுல்லாக அவர்களை கவரும் விதமாக செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவை டெக்கரேட் செய்து கொடுத்தால் அவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

அதே போல் சமைக்கும் போது அவர்களையும் கூடவே வைத்து கொண்டு என்ன செய்கிறோம் என்பதை அவர்களிடம் சொல்லிக் கொண்டே அவர்களையும் சமையலில் இன்வால்வ் செய்து சமைக்கும் போது தானாகவே அவர்களுக்கு அந்த உணவை சாப்பிடும் ஆர்வம் வந்துவிடும்.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...