• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

குழந்தைகளின் வயிற்று வலிக்கான பாட்டி வைத்தியம்

Bharathi
1 முதல் 3 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 30, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

வணக்கம், இது என்னுடைய முதல் பதிவு. வயிறு சம்பந்தமான பிரச்சினைக்கு தீர்வு காண இந்த மருந்தை முயற்சி செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயிறு வலியை சந்திக்காமல் வளர்வதில்லை. எங்கள் பாட்டி சொன்ன வைத்தியம் பல உடல்நலப் பிரச்சனைகளை சரி செய்ய எங்களுக்கு உதவி செய்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வீட்டில் செய்யக்கூடிய வயிற்று வலிக்கான எளிய மருந்து

உடல் சூட்டினால் ஏற்படும் வயிறு வலி, ஏதேனும் உணவு ஒவ்வாமை, வயிற்றுப் போக்கு இந்த மாதிரி உபாதைகள் வரும் போது இந்த மருந்து நிச்சயமாக கைக் கொடுக்கும். அதேபோல் பசியின்மை, செரிமான தொல்லைகள் இவற்றிற்கு இதனுடன் ஒரு பல் பூண்டு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சில பேருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டால் நிக்காமல் போய்க் கொண்டே இருக்கும். இந்த மாதிரி அடிக்கடி வயிற்று பிரச்சனைகளால் பாதிக்கப்படும் நபர்கள் மூன்று நாட்கள் ஒரு முறை இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

ஓமம் - 2 தேக்கரண்டியளவு

சீரகம் - 2 தேக்கரண்டியளவு

காயம் - 1 துண்டு

செய்முறை:

ஒரு வாணலி எடுத்து நன்றாக சூடுபடுத்தி, ஓமம் சீரகம் இரண்டையும் சேர்த்து பொரிய விட்டு, காயம் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 1/2 டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும். வற்றிய பின்னர் வடிகட்டி பருகவும்.

குறிப்பு:

1-3 வயது - 1/2 - 1 சங்கு

3-7 வயது - 2-3 சங்கு

7-11வயது - 1/4 டம்ளர்

பெரியவர்கள் - 1/2 டம்ளர்

இது தவிர இன்னும் ஒரு சில மருந்துகள் உள்ளன. இதோ உங்களுக்கான குறிப்புகள்

 1. எலுமிச்சை ஜூஸ் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை ஜூஸை கலந்து பருகினால் வயிற்று வலியை நீக்க உதவும். அரை எலுமிச்சை பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனை நன்றாக கலக்கி, பின் குடிக்கவும்.

 2. நல்லெண்ணெய் நல்லெண்ணெய் தொப்புள் குழியில் போட்டால் சூட்டினால் ஏற்படும் வயிறு வலி குறையும்.

 3. காய தண்ணீர் சூடான தண்ணீரில் காயம் பொடி சேர்த்து கலந்து குடித்தால் வாயுத்தொல்லைக்கு உடனே தீர்வு கிடைக்கும்.

4. மோர் உடன் ஒரு துண்டு இஞ்சி மற்றும் காயம் சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலியைப் போக்கும். இது அல்சர் இருந்தால் இஞ்சி சேர்க்காமல் பருகவும்.

உங்களுக்கு வயிற்று போக்கு இருந்தால் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடலின் சீரான செயல்பாட்டிற்கு நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதை முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக சரியாகும்... இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் Like பண்ணுங்க share பண்ணுங்க.. அடுத்த பதிவில் பார்ப்போம்.... Take care friends... Eat healthy.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}