டீன் ஏஜ் பிள்ளைகள் வெளிப்படையாக பேச உதவ - பெற்றோருக்கான டிப்ஸ்
7 முதல் 11 வயது
Dr. Chitra Aravind ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 23, 2022
சமீபத்தில் பதின் வயது பிள்ளைகளின் பெற்றோர்கள் மனதில் பலவித ஆச்சங்களை ஏற்படுத்தியது இந்த பாய்ஸ் லாக்கர் ரூம். டீன் ஏஜ் பிள்ளைகளை கையாள்வது என்பது வெவ்வேறு சவால்களை கொண்டது. அவர்களோடு பெற்றோர் பேசவும், அவர்கள் பெற்றோரிடம் வெளிப்படையாக பேசுவது என ஒரு சுமூக உறவு இந்த கட்டத்தில் அவசியமாகின்றது. ஆதலால் இந்த கட்டத்தில் பெற்றோர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை, குறிப்பாக பாலியல், எதிர் பாலின ஈர்ப்பு, உடலியல் மாற்றங்கள் போன்ற உணர்ச்சி மிகுந்த விஷயங்களை பிள்ளைகள் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்கும் வழிகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்.மேலும் பிள்ளைகளிடம் எந்த மாதிரியான அணுகுமுறை பயனளிக்கும் கண்டிப்பா? நட்பா?