• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

குழந்தைகளின் சளித் தொல்லைக்கு தீர்வு தரும் வீட்டு வைத்தியம்

Bharathi
0 முதல் 1 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 12, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகளுக்கு சளிப் பிடிப்பது என்பது  சாதரணமாக வருவது என்றாலும் ஒவ்வொரு முறையும் அவர்கள் அவதிப்படுவதை நாம் பார்க்கின்றோம். இதற்காக குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாது. சளிப் பிடிக்கும் போது சில ஆரம்ப அறிகுறிகள் தெரியும். அப்போதே சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் குழந்தைகளுக்கு சளி அதிகரிக்காமல் பார்த்துக்கலாம். இந்த பதிவில் அதற்கான வீட்டு வைத்தியம் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உடலுக்கு ஒவ்வாத உணவு, ஈரக் காற்று, மழையில் நனைவதால் , குளிர்பானங்கள் பருகுவதால் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...சளி வந்த உடன் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக பாட்டி சொன்ன மருந்து இதோ உங்களுடன்  நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதை நான் என் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

சளி குணமாக உதவும் பாட்டி வைத்தியம்:

             "சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை”.

              "பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்"..

             "கடவுளின் உணவு பெருங்காயம்"

இதை பயன்படுத்தி தான் இந்த மருந்தை தயார் செய்ய போகிறோம்..

தேவையான பொருட்கள்:

 • சுக்கு
 • மிளகு
 • பெருங்காயம்
 • பூண்டு

செய்முறை:

ஒரு வெள்ளை பருத்தி துணி எடுத்து வைத்துக் கொள்ளவும்..

ஒரு இடி கல்லில் சுக்கு ஒரு துண்டு, மிளகு 4  எண்ணிக்கை, காயம் ஒரு துண்டு, பூண்டு 2 பல் சேர்த்து இடித்து வைத்துக்  கொள்ளவும்.

பின்னர் இடித்து வைத்துள்ள பொருட்களை அந்த வெள்ளை பருத்தி துணியில் வைத்து கட்டி கொள்ளவும்..

ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்... பின்னர் கட்டி வைத்த துணியை கொதிக்கும் நீரில் போட்டு வற்றிய 1/4டம்ளர் ஆகும் வரையில் வைத்துக் கொள்ளவும்..

பின்னர் அந்த துணியை வெளியே எடுத்து நன்றாக பிழிந்து கொள்ளவும்.இப்போது மருந்து தயாராகி விட்டது...

ஒவ்வொரு வயதினருக்கும் கொடுக்க வேண்டிய அளவு கீழே காணவும்:

 • 0-1 வயது. - 1/4 சங்கு
 • 1-3 வயது  - 1/2 சங்கு
 • 3-7 வயது - 1 சங்கு
 • 7-11 வயது - 1/4 டம்ளர்

இந்த மருந்து சளி மற்றும் இருமல், உணவு செரிமானம், குழந்தைகள் வாய்வு தொல்லைகள் அனைத்திற்கும் சிறந்த மருந்தாகும். இதை தவிர பிற மருந்துகள் இதோ உங்களுக்காக...

பிற மருந்துகள்

1.   வெற்றிலை 5-6, மிளகு-5-6, சீரகம் - 1 தேக்கரண்டி அளவு இதை மூன்றையும் 1/2 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் இருமல் குணமாகும். தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

குறிப்பு: இதை போட்டு வைத்துக் கொண்டு நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பருகவும்...

2.   பெரிய பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பாதி எலுமிச்சை, ஒரு துண்டு இஞ்சி, 4-5 மிளகு (இடித்தது) , 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்...வற்றிய பின்னர் வடிகட்டி பருகவும்... சிறந்த மருந்தாகும்...

3. இஞ்சி - 1 பெரிய துண்டு, பூண்டு - 4, மிளகு-4, துளசி - 10 இலைகள், தூதுவளை - 4-5 இலைகள்,

ஓமவள்ளி - 5 இலைகள், கண்டங்கத்திரி - 3 இலைகள் இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி வைக்கவும்..வாணலி எடுத்து 1/4 பாட்டில் தேன் ஊற்றி உருகியதும், வடிகட்டிய சாறை சேர்த்து கொதிக்க விடவும்... கொஞ்சம் வற்றிய பின்னர் ஆற வைத்து சேமித்து வைத்துக் கொள்ளவும்... தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் குடித்து வர நாள்பட்ட நுரையீரல் சளி குறையும்...

இந்த மருந்துகள் அனைத்தையும் முயற்சி செய்து பாருங்கள். நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கிறது அத்தனையும் மருந்துகள் தான். எப்போதும் பாட்டி வைத்தியம் தான் நம்முடைய பெரிய பலம் என்பதை மறக்கக்கூடாது.

இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இதே போல் உங்களுக்கு தெரிந்த வீட்டு மருந்துகளையும் பகிருங்கள். உங்கள் கருத்துக்களை கேட்க நான் விரும்புகிறோம். நன்றி

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Sep 03, 2021

நன்றி அக்கா

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}