• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு வரும் உடல்நலப் பிரச்சனைகளுக்கான வீட்டு வைத்தியம்

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jan 30, 2022

குளிர் காலம் படாத பாடு படுத்துகிறது. இந்த குளிரையும், குளிர் காற்றால் ஏற்படும் சளி, இருமல், அலர்ஜி மற்றும் காய்ச்சலை பெரியவர்களாலே தாங்க முடியவில்லை. குழந்தைகள் தான் அதிக தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள். பொதுவாக குளிர் காலத்தில் நோய் தொற்றை உருவாக்கும் வைரஸ்கள் அதிகம் பரவுகிறது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்  என்பதும்  வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது, சுமார் 200 வகையான வைரஸ்களால் நமக்கு ஜலதோஷம் உண்டாகிறது. குழந்தைகளுக்கு பொதுவாக இந்த சளிப் பிரச்சனை வந்து 2-3 நாட்களிலே நிவாரணமாகிவிடும், இதற்கென்று பிரத்யேக சிகிச்சை எடுக்க தேவையில்லை.

பெரும்பாலும் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின்  கைகளை தொடுவதினாலும்,  பென்சில், புத்தகம், விளையாட்டுப் பொருட்கள், கைப்பிடி போன்றவற்றால் இந்த வரைஸ் தொற்று பரவுகிறது. எப்போதுமே ஜலதோஷத்திற்கும், லேசான காய்ச்சலுக்கும் ஏற்ற வைத்தியம் என்பது வீட்டு வைத்தியமே. அதாவது நம்முடைய பாட்டிகளின் பாஷையில் சொன்னால் அஞ்சறைப் பெட்டி வைத்தியம். இதை கை வைத்தியம் என்றும் சொல்வார்கள். இந்த மாதிரி பிரச்சனைகளின் அறிகுறிகள் மற்றும் இதற்கான வீட்டு வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.   

சளி மற்றும் இருமல் ஏற்படுவதற்கான அறிகுறிகள்

இந்த மாதிரி பிரச்சனைகளின் அறிகுறிகள் மற்றும் இதற்கான வீட்டு வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.   

 1. தும்மல் மற்றும் சளி மூக்கில் இருந்து வெளிவரும்
 2. தொண்டை புண் மற்றும் இருமல்
 3. களைப்பு மற்றும் பசியின்மை
 4. சில சமையம் காய்ச்சல் வருவதும் அறிகுறி.

காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பாதிப்புகள்  அதன் தீவிரத்தை பொறுத்து  வெவ்வேறு அறிகுறிகள் உள்ளன.

காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள்

 1. தலைவலி மற்றும் உடல் வலி
 2. பசியின்மை 
 3. 101 F அதிகமான காய்ச்சல்
 4. வேகமாக சுவாசிப்பது, சோம்பல், எரிச்சல், விழுங்குவதில் சிரமம், சொரியுடன் கூடிய காய்ச்சல் ஆகியவை அதிகப்படியான காய்ச்சல் வரும் அறிகுறிகள்.

மேற்சொன்ன அறிகுறிகள் ஏற்பட்டு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்குடன் காய்ச்சலின் வீர்யம் அதிகமாகலாம், ஆகையால் இந்த அறிகுறிகள் குழந்தைகளுக்கு வரும்போது உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். தடுப்பூசி  இதுபோன்ற காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பெரும் பங்காற்றுகிறது.  

வீட்டு வைத்தியம் சளி மற்றும் காய்ச்சல்

மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தவிர, வீட்டிலேயே சில மருந்துகளை தயாரித்துக் கொடுக்கலாம். குளிர் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், இயற்கையாக அதன் வீரியம் குறையவும் இதோ உங்களுக்கான சில எளிய வீட்டு வைத்தியம்.

 • சூடான உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் தொண்டை புண் குணமடையவும், வலியை குறைக்கவும் உதவலாம்.
 • இஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சின் இயற்கை இருமலை கட்டுப்படுத்த வல்லது. இருமலால் ஏற்படும் சோர்வை குறைத்து சுறுசுறுப்பை கூட்டும். இருமல் குறைப்பதற்கான மற்றொரு தீர்வு ஆகும்.
 • வீட்டில் இந்த கசாயத்தை தயார் செய்யலாம். 4 ஏலக்காய், 4 கிராம்புகள், ஒரு சிறிய இஞ்சி மற்றும் ஒரு டம்ளர் தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைய்யுங்கள். அதில் சிறிது தேன் சேர்த்து இரண்டு முறை தினமும் குழந்தைக்கு கொடுக்கலாம்..
 • துளசி தேனீர். தண்ணீரில் துளசி இலைகள் போட்டு தேனீர் தயாரித்து கொடுப்பதன் மூலம் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
 • தேன் தொண்டை வலிக்கு சிறந்த தீர்வாகும். தேன் ஒரு ஸ்பூன், சில இஞ்சி சாறு சேர்த்து கொடுத்தால் குளிர் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிறந்த மருந்தாகும்.
 • பிறந்த குழந்தைகளின் கழுத்தில் உரித்த பூண்டு மற்றும் 2 கிராம்புகள் துணியில் சுருட்டி கட்டி விடுங்கள். அல்லது அருகில் வைத்துவிடுங்கள். பூண்டின் வாசனையானது குழந்தையால் உறிஞ்சப்பட்டு மூக்கின் அடைப்பை விடுவிக்க உதவுகிறது.
 • கடுகு எண்ணெய்யில் ஓமம் மற்றும் பூண்டை வறுத்து அரைத்து அந்த பேஸ்ட்டை உங்கள் குழந்தையின் மார்ப்பிலும், பாதத்திலும் போடுங்க. குழந்தைக்கு நல்ல நிவாரணம் தரும்.

சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்க உதவிக்குறிப்புகள்

பருவகால சளி மற்றும் காய்ச்சலிலிருந்து உங்கள் குழந்தையைத் தடுக்கும் வழிகள் இங்கே. இதை படிக்கவும்

 • இதுபோன்ற வியாதிகள் வர காரணிகளான கிருமிகள் அண்டாமல் இருக்க  குழந்தைகளுக்கு அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கற்றுத்தரவேண்டும்.வெதுவெதுப்பான தண்ணீரில் மிதமான சோப்பைக் கொண்டு சுமார் 20 நொடிகள் கழுவதால் கிருமிகள் அகற்றப்படும்.
 • பள்ளியில் இருந்து வந்தவுடன், விளையாடிவிட்டு வந்தபின், வெளியில் சென்று வந்தபின், சாப்பாட்டிற்கு முன்பும் பின்பும் கை, கால் கழுவது சிறந்த தடுப்பு நடவடிக்கை. வெளியிடங்களில் அதிகப்படியான கிருமிகள் இருப்பதால் இவ்வாறான நடவடிக்கைகள் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டும்.
 •  சளி ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை இருமும் போதும் தும்மல் வரும்போதும் முதுகையும் வாயையும் மறைப்பதால் வியாதி பரவாமல் தடுக்கப்படும்.
 • குளிர் காலத்தில் உணவை மிதமானச் சூட்டில் உண்ண வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவதால் உடல் ஆற்றல் அதிகரிக்க உதவும்.  எளிதில் செரிக்கக் கூடிய மற்ரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய பச்சைக் காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ், முருங்கைக்காய் அதிக அளவில் சாப்பிடலாம்.  அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.
 • குளிர்காலத்தில் குழந்தைக்கு குளிர் பானங்கள் மற்றும் ஐஸ் க்ரீம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்;
 • குழந்தை சூரிய ஒளி மற்றும் திறந்தவெளி காற்று நன்மைகளை தரும். அதனால் குழந்தைகளை வெயிலில் செல்ல ஊக்குவிக்கவும்.
 • குழந்தையை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். மற்ற குழந்தைகளுக்கும் நோய் தொற்று பரவும். மேலும், உங்கள் குழந்தையை இந்த பிரச்ச்சனையில் இருந்து விரைவில் மீட்க உதவுவதற்காக அனைத்து ஏற்பாடுளையும் செய்யுங்கள்.

குழந்தைகளுக்கு ஆதரவும், அக்கறையும் கொடுங்கள். கூடவே இந்த வீட்டு வைத்தியமும் சேர்ந்து உங்கள் குழந்தையை விரைவில் மீட்க உதவுகிறது...

 

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}