• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?

Bharathi
கர்ப்பகாலம்

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 23, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கர்ப்ப காலத்திலும், பாலூட்டும் காலத்திலும், உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதால் உணவூட்டத் தேவைகள் மிக பெருமளவில் அதிகரிக்கின்றன. மற்ற எந்த காலத்தையும் விட கர்ப்பக் காலத்திற்கு முன் கொடுக்கப்படும் முழுமையான உணவூட்டம், மிக நல்லதொரு நீண்டக்கால விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. கர்ப்ப காலத்திற்கு முன், நல்ல உணவூட்டத்துடன் இருக்கும் பெண்மணிக்கு, கர்ப்பமடையும் போது அனைத்து சத்துக்களின் சேமிப்பு சிறப்பாக இருக்கும். எனவே வளரும் குழந்தையயின் தேவைகள், கர்ப்பிணியின் உடல்நலத்தைப் பாதிக்காமல் பூர்த்தி செய்யப்படும். நல்ல உணவூட்டம் பெறும் குழந்தையே உடல்நலத்திலும், மூளை வளர்ச்சியிலும் சிறந்து விளங்கும். அது மட்டுமல்லாது கர்ப்பகாலத்திற்கு முன்னும், கர்ப்ப காலத்திலும் கொடுக்கப்படும் உணவூட்டம் பிரசவத்திற்குப் பிறகு சிறப்பான பாலூட்டுதலுக்கு உதவும்.

உணவூட்டக் குறைவால் தாயின் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

உணவூட்டக் குறைவினால் பாதிக்கப்பட்ட தாய், குழவிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தன் உடல் திசுக்களினின்று தருகிறாள். கர்ப்பக் காலத்தில் பல்வேறு சிறிய ஆதாரப் பொருட்களான வைட்டமின் A, துத்தநாகம், இரும்பு மற்றும் போலிக் அமிலம் இவற்றின் குறைபாடு சாதாரணமாகக் காணப்படும். இதனால் கர்ப்பத்தின் போதும், பிரசவத்தின் போதும் சிக்கல் ஏற்படும். இதனால் குறைப்பிரசவமும் மற்றும் தாய்க்கு மரணமும் ஏற்படலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழ்க்கைமுறை & உணவுப்பழக்கம்

கர்ப்ப கால வாழ்க்கைமுறையும், உணவுப்பழக்கமும் தாய் சேய் ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுமுறையை சரியாக பின்பற்றுவதன் மூலம் கர்ப்ப கால நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி, இரும்பு, துத்தநாகம், ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. கர்ப்பிணிகள் ஆரஞ்சு சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தலாம்.கருவின் மூளை வளர்ச்சியை வலுப்படுத்தலாம். தோலுக்கும் இவை நன்மை அளிக்கும். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஆரஞ்சு எடுத்துகொள்வது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற இக்காலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து அறிந்துகொள்வோம்.

கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் என்பது பொதுவான பிரச்சனையாகும். இதில் உள்ள நார்ச்சத்து வயிறு பிரச்சனைகள் மற்றும் வயிறு வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்.

தூக்கம்

உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் அவசியமாகும். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைப் பாதிக்கிறது. எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியமானது.

தண்ணீர்

தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பால் பொருட்கள்

தயிர் உள்ளிட்ட பால் பொருள்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு 'ப்ரோபயாட்டிக்' என்று பெயர். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகளவு சுரக்க உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

பால் கர்ப்ப காலத்தில் சேர்த்து கொள்வது குழந்தை பிறந்த பிறகு பாலூட்ட உதவியாக இருக்கும்.

காய்கறிகள்

நமது அன்றாட உணவில் அவசியம் இடம்பெற வேண்டியவை காய்கறிகள். முக்கியமாக, பீட்ரூட், கத்திரிக்காய் போன்ற அடர் நிறம் உள்ள காய்கறிகள், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் குடமிளகாய் போன்றவை அவசியம் வேண்டும்

குறிப்பாக அவரைக்காய் சேர்த்து கொள்வது நல்லது.

கீரைகள்

வாரத்தில் குறைந்தது இரண்டு நாள்களாவது கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதில் அதிகளவில் வைட்டமின்கள், இரும்புச்சத்து உள்ளிட்ட அத்தியாவசியச் சத்துகள் நிறைவாக உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும்.

கர்ப்ப காலத்தில் கீரை சேர்த்தால் மலச்சிக்கல் நீங்கும். குழந்தையின் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

பூண்டு

ஆயுர்வேத மருத்துவத்தில், தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது. அதனால் தினசரி உணவில் பூண்டு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

கர்ப்ப காலத்தில் எடுத்து கொண்டால் தாய்ப்பால் கொடுக்கும் போது உதவியாக இருக்கும்

மஞ்சள்

மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டிபயாட்டிக் என்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிரிக்க உதவும். ரத்தத்தைச் சுத்தகரிக்கும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்களில் இருந்து காக்கும்.

பழங்கள்

நாட்டு மாதுளை ஜூஸ் பருகுவது, நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக மேம்படுத்தும். ஆரஞ்சு, திராட்சை ஜூஸும் பருகலாம். சிலருக்கு இவை சளியை ஏற்படுத்தும் என்றால், அவர்கள் தவிர்க்கலாம்.

மாதுளை கர்ப்பம் உறுதியான நாளில் இருந்து தினமும் ஒரு டம்ளர் சாறு எடுத்து குடித்து வந்தால் மிகவும் நல்லது.

தேன் நெல்லி

நெல்லிக்காய் தினமும் ஒன்று வேக வைத்து சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வீசிங் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும். நெல்லிக்காய் மற்றும் தேன் சேர்த்து கடைகளில் கிடைக்கும். அதுவும் இரத்தம் ஊற சிறந்த ஒன்று.

இவை எல்லாம் தவிர மனதை எப்போதும் அமைதியாக வைத்து கொள்வது அவசியம். அதற்கு பாடல்கள் கேட்பது , இனிமையான இசை கேட்டால் நல்லது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.அடுத்த பதிவில் சந்திப்போம்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}