• உள்நுழை
  • |
  • பதிவு
தொழில் குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

உங்கள் குழந்தைக்கு டயப்பர் ரேஷஸ் வராமல் எவ்வாறு பராமரிப்பது?

Parentune Support
0 முதல் 1 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jul 01, 2020

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதால் அரிப்பு, சொரி, எரிச்சல் வருவது இயல்பானது தான். குழந்தைக்கு டயப்பர் மாற்றும் போது அவர்கள் ஒத்துழைக்க வைப்பது என்பது ஒரு கடினமான வேலையாக இருக்கும். உங்கள் குழந்தை அல்லது குறுநடை போடும் குழந்தைக்கு டயப்பர் மாற்றும் போது படுக்காமலும், திரும்பினாலும், கை கால்களை உதைத்தாலும், கத்தினாலும் டயப்பர் மாற்றுவதில் குழப்பம் ஏற்படும். டயப்பரை சரியாக அணிவிப்பதன் மூலம் சிறுநீர் லீக் ஆகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இந்த வலைப்பதிவில், டயப்பர் சுகாதாரம் பற்றிய சில உண்மைகளையும், முக்கியமான கேள்விகளுக்கான பதில்களையும் பகிர்ந்து கொள்கிறோம்:

1.டயப்பரை மாற்றுவதற்கான மிகவும் சுகாதாரமான வழி எது?
2.துணி டயப்பர்களை எத்தனை முறை மாற்ற வேண்டும்?
3. முடிந்தவரை சுத்தமாகவும்,கிருமிகள் தொற்று  பரவுவதையும் எப்படி தடுக்க முடியும்?
4. டயப்பரால் ஏற்படும் ரேஷஸ்களையும், எரிச்சலையும், நிறுத்த சில வழிகள்?

சரியான டயப்பர் சுகாதாரத்தை நீங்கள் எவ்வாறு பராமரிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவது குறித்த சில குறிப்புகள் :

1. தடுப்பதற்கான சில குறிப்புகள் :  வெப்பமான சூழலில் டயப்பர் சொறி வருவதை தடுக்க குழந்தைக்கு பவுடர் அல்லது தேங்காய் எண்ணெய் அடிக்கடி பயன்படுத்துங்கள். அடிக்கடி டயப்பர் மாற்றுவது மிகவும்  முக்கியமானது. ஒரு பெண் குழந்தைக்கு  நோய் தொற்றை  தடுக்க எப்போதும் முன்னால் இருந்து பின்னால் துடைக்க வேண்டும்; ஆண் குழந்தைக்கு  பிரச்சினை அல்ல. ஒவ்வொரு முறையும் டயப்பரை மாற்றும்போது அந்த இடத்தை தண்ணீரால் நன்கு  கழுவ வேண்டும்.
2. காற்று சிறந்த மருந்து:  உங்கள் குழந்தைக்கு டயப்பர் சொறி ஏற்பட்டால், டயப்பருக்கு சில மணிநேரம் விடுமுறை கொடுங்கள். குழந்தையை காற்றோட்டமாக வைப்பது ஒரு சிறந்த நிவாரணமாகும். சிறந்த சிகிச்சையானது குழந்தைக்கு உடை அணிவிக்காமல் இருப்பது. குழந்தையை கூர்ந்து கவனித்தால் நீங்கள் உணர முடியும். குழந்தை தன்னுடைய அசொளகரியத்தை ஏதாவது ஒரு சைகை மூலம் வெளிப்படுத்தும். (உதாரணத்திற்கு, அழலாம் அல்லது சிணிங்கிக் கொண்டே இருக்கலாம். இடைவெளி விட்டு விட்டு அழலாம், கையையோ, துணியையோ கடிக்கலாம்).   உங்கள் குழந்தையை காற்றோட்டமாக இருக்க வையுங்கள்.டயப்பர் பயன்படுத்தாத வேளையில் சில கூடுதல் துணிகளை தயார்பப்டுத்தி கொள்ளுங்கள்!
3.பாதிப்பு அதிகமானால் டாக்டரைப் பார்க்கவும்:  பெரும்பாலான டயப்பர் வெடிப்புகள் சில நாட்களுக்குள் வீட்டு பராமரிப்பு, ஆடை இல்லாமல் வைப்பது மற்றும் ( ரேஷஸ் க்ரீம்) பயன்படுத்துதல் போன்றவற்றால் குணமாகிவிடும். ஆனால் உங்கள் குழந்தைக்கு இவற்றால் குணமாகவில்லை எனில் உங்கள் குழந்தைக்கு பாதிப்பு அதிகம் இருப்பதாக எண்ணுங்கள். அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. என் இரண்டாவது மகளுக்கு டயப்பர் சொறி இருந்தது, அது ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது மற்றும் மோசமாகி வருவதாக தோன்றியது.  அவளுக்கு உண்மையில் ஒரு கிருமி தொற்று இருந்தது, ஆகவே, அந்த டயப்பர் சொறி சரியாவதாக தெரியவில்லை, மேலும் பரவுவதாகத் தோன்றியது. உடனே நாங்கள் மருத்துவரை அணுகினோம். மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றினோம், அதன் பிறகு என் மகளுக்கு குணமாகிவிட்டது.
4.உங்கள் கை & குழந்தையின் கைகளை கழுவவும்: குழந்தைகள் எல்லாவற்றையும் தொட விரும்புவார்கள். டயப்பர் மாற்றும் போது உங்கள் குழந்தை கிருமி ஏற்படுத்தும் விஷயங்கள் எதையும் தொடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா இல்லையா என்பது தெரியாது. எனவே குழந்தையின் கைகளை  கழுவுவது இன்னும் நல்லது. நீங்கள் டயப்பர் மாற்றி முடித்தவுடன் கைகளை  கழுவ வேண்டும். அல்லது  நீங்கள் சானிட்டைசர் அல்லது ஆல்கஹால் சார்ந்த சுத்தப்படுத்தியைப் பயன்படுத்தலாம்; குழந்தையின் கைகள் எட்டாத இடத்தில் சானிட்டைசர் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. சுத்தம் & கிருமி நீக்கம் செய்யுங்கள்: தவறாமல்  குழந்தையின் டயப்பர் போடும் இடத்தை நன்றாக  துடைக்கவும்,  நீங்கள் ஒரு துணியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மிதமான குளிர்ந்த நீரைக் கொண்டு துடைக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது காட்டன் பஞ்சுகளை தண்னீரில் முக்கி துடைக்கலாம். அதிமாக வெட் டிஷ்யூ பயன்படுத்துவதை குறைத்து தண்ணீர் பயன்படுத்துங்கள். பருவநிலை பொறுத்து குளிர்ந்த அல்லது சூடான நீரை

6. தண்ணீர் குடிக்க வைய்யுங்கள்: குழந்தைகளின் உடலில் நீர்சத்து குறைந்தால் எளிதாக வறட்சி ஏற்படும். இதனால் கூட டயப்பர் அரிப்பு அதிகமாக வாய்ப்புகள் உண்டு. நீர் காய்கள், பழங்கள், தண்ணீர் போன்றவற்றின் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்வறட்சியை தடுக்கலாம். பிறந்த குழந்தைகள் என்றால் தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் உணவில் இந்த வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
7..ஒரு குழந்தையை பராமரிப்பது கடினமாக இருக்கும்: புதிதாகப் பிறந்த குழந்தையின் தேவைகளுக்குப் பொறுப்பேற்பது மிகவும் சவாலாக இருக்கும், ஆனால் ஒரு சிறிய பயிற்சி, சில அடிப்படை அறிவுறுத்தல், பொது அறிவு மற்றும் ஒரு வழக்கமான செயலால், இந்த பணிகள் எளிதாகின்றன. மகிழ்ச்சியான மற்றும் சுத்தமான டயப்பரிங் வேண்டும்.

கீழேயுள்ள கருத்துகளில் டயப்பர் சொறி நீங்க உங்கள் முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் மற்றும் உத்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த தொழில் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}