• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை எப்படி பலப்படுத்துவது?

Bharathi
11 முதல் 16 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 23, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

மாதராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்” என்கிறார் ஒளவையார் இதன் அர்த்தம் வாழ்க்கையில் சகோதரிகளை மகள்களை பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்று சொல்லப்படுகிறது. அதாவது பெண் குழந்தைகள் இருக்கின்ற வீடு மகிழ்ச்சியும் மங்களமும் நிறைந்ததாக இலக்கியங்களில் சித்தரிக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் இன்றைய பெற்றோருக்கு அதிகமாகவே உள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் சின்மயா பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகவும் வருத்தத்திற்கு உரியது. இன்றைய காலகட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. இதன் மூலம் எவ்வாறு நம் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது என்று பயம் கலந்த கலக்கம் பெற்றோரிடம் அதிகரித்து விட்டது.  

பெண் குழந்தைகளை பாதுகாக்க என்னென்ன வழிகள் உதவும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

1. பயப்படாமல் இருக்க வேண்டும்

இன்று பல குழந்தைகள் பயத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் அதிகம் தனிமையில் வாழ்வதும் வளர்வது தான். பரந்துவிரிந்த உறவினர்க் கூட்டங்களை விட்டுவிட்டு தாய் மற்றும் தந்தையோடு மட்டும் ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் யாரிடமும் பேசாமல், பழகாமல் வாழ்கின்றனர். மேலும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விடுவதால் அந்தக் குழந்தை அதிக தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு இயல்பாகவே பல விசயங்களில் எப்படி நடந்து கொள்வது எப்படிச் சூழலை சமாளிப்பது என்று தெரிய வருவது இல்லை. அதனால் காரணமே இன்றி ஐயம் கொள்ளத் தொடங்கி விடுகிறார்கள். இதனைப் போக்க முயல்வது மிகவும் முக்கியம்.பயம் முன்னேற்றத்தின் எதிரி!தைரியமே வெற்றியின் அச்சாணி என்பதைப் போதிக்க வேண்டும்.உங்கள் வாழ்வு அனுபவங்களைக் கூடச் சொல்லி தன்னம்பிக்கை ஊட்டலாம்.

2. குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கவனம் 

குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள். வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.

குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

3. கலந்தாய்வு முறை:

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உளவியல் ரீதியிலான கலந்தாய்வு மட்டுமின்றி, பெற்றோருக்கும் அவற்றை அளிப்பது அவசியம் என வலியுறுத்தும் கன்யா, கலந்தாய்விற்கு பிறகு, துணிச்சலாக வழக்கை எதிர்கொண்ட பல தாய்மார்களை பார்த்ததாக பெருமிதம் கொள்கிறார். அவர்களுகளுக்கு கலந்தாய்வு நடத்தி, தேற்றும் வரையில், வாழ்க்கை ஏதோ இருள் சூழ்ந்தது போன்று சில பெற்றோர்கள் உணர்ந்தும் உண்டு.

தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

4. வெளிப்படையாக பகிர்வதை ஊக்கப்படுத்த வேண்டும்

பெற்றோர், சகோதர-சகோதரிகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைத்து உறவுகளிடமும், நட்பிடமும் அன்பாக, எதிர்பார்ப்பு இல்லாத சிநேகத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும். மேலும் பெற்றோரிடம், குறிப்பாக தன் தாயிடம் எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். அதற்கான இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும்.

5. பெண் குழந்தைகளை மதிப்புடன் நடத்த வேண்டும்

பெண் குழந்தைகளுக்கு அச்சம் தரும், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் வகையிலான செயல்களை சொல்வதோ, செய்வதோ கூடாது. மூத்த பெண் குழந்தை அதிக பொறுப்புடன், விட்டுக்கொடுத்து போகவேண்டும், வீட்டில் வேலைகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி, அந்தச் சிறுமிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

எதிர்த்துப் பேசாம நான் சொல்றதை மட்டும் கேளு' என்று பெண் குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்தாமல், ஒரு செயலால் விளையும் நன்மை, தீமைகளை அவர்களுக்கு அன்புடன் புரியும்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும், எப்போதும் பெண் குழந்தைகளை கண்காணித்தபடியே இருந்தால், அவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களின் தனித்திறமைகள் வெளியே தெரியாமலும், சுய சிந்தனை வளராமலும் போகலாம். எனவே, அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.

6. வலிமையும் தைரியமும் பெண் குழந்தைகளின் பலம்

ஆண் குழந்தை அழுதால் தவறு எனச் சொல்பவர்கள், பெண் குழந்தைக்கு அதையே அடையாளமாக, அவர்களின் ஆயுதமாக கைகொள்ளும்படி அவர்களை வளர்ப்பது தவறு. 'அழுகையால் எந்தக் காரியமும் முடியாது. திறமையும், தைரியமும், முயற்சியும் மட்டுமே நீ வேண்டுவதை பெற்றுத் தரும்' என்று சொல்லி வளர்க்க வேண்டும்.''

7. சட்டரீதியான நடவடிக்கை

முதலில் குழந்தைகளுக்கான உதவித் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது காவல் துறைக்குத் தகவல் தெரிவியுங்கள். குழந்தைகளுக்கான உதவித் தொலைபேசித் தொடர்பின் மூலம் அவர்களுக்கானஆலோசனை, சட்ட உதவி ஆகியவற்றைத் தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். சமூகத்தின் ஆதரவைத் திரட்டுங்கள்.தேவைப்பட்டால் மட்டும், கடைசித் தீர்வாகப் பத்திரிகைகளைத் தொடர்புகொள்ளுங்கள்.

8. சட்டங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்

பெண்குழந்தை பாதுகாப்பு சட்டம். இன்றளவில் பெண்கள் சமூகத்தில் பாதுகாகக்ப்பட வேண்டும் என்பதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம்

 • Devadasi System (Abolition) Act,
 • Dowry Prohibition Act Prohibition Of Child Marriage Act,
 • Production Of Children From Sexual Offences,
 • Protection Of Women From Domestic Violence,
 • The Sexual Harassment Of Women At work Place.

ஆகிய சட்ட ஏற்பாடுகள் பெண்களை பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. காவலர் குடியிருப்புகள் உள்ளிட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குழந்தைகள் பாதுகாப்புக்கான மாநில கொள்கையையும் வெளியிட்டார்.

குழந்தைகளுக்கான மாநில கொள்கைகள் என்னென்ன?

அனைத்துப் பள்ளிகளையும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக மாற்ற அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைப் பாதுகாப்புக் கொள்கையை அறிமுகப்படுத்த விரும்புகிறது.

 1. POSH சட்டம் (பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவர்த்தி) சட்டம், 2013) கீழ் அனைத்து பள்ளிகளிலும் உள்ளக புகார் குழுவை உருவாக்குதல் மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் மற்றும் சுற்றுப்புற குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் போன்ற தற்போதைய குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த விழிப்புணர்வு நடத்துதல்.
 2. குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளுக்கும் எதிரான பிரச்சாரங்கள் மற்றும் குழந்தைகள் மீதான அதன் எதிர்மறையான தாக்கம், சட்டங்கள்/நிறுவனங்கள் அணுகப்பட வேண்டும் அல்லது அணுக வேண்டும்
 3. அனைத்து குழந்தை பராமரிப்பு நிறுவனங்களிலும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் உயர்ந்த தரத்தை செயல்படுத்துதல், தடுப்பு, பதிலளிக்கக்கூடிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குதல், பயனுள்ள ஊக்குவிப்பு சட்டத்தின் அமலாக்கம் என்பது கொள்கையில் குழந்தைகளைப் பாதுகாக்க பரிந்துரைக்கப்பட்ட சில நடவடிக்கைகள் ஆகும்.
 4. மனநலம் மற்றும் உளவியல்-சமூக ஆதரவில் சிறப்பு கவனம் செலுத்தி குழந்தை பாதுகாப்பு அமைப்பின் கீழ் மறுவாழ்வு சேவைகளை மேம்படுத்துவது மற்றும் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் தனியுரிமையை உறுதி செய்தல், மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப போதுமான பட்ஜெட் ஒதுக்கீடு ஆகியவற்றை பரிந்துரைக்கிறது.

குழந்தைகளின் பிரச்சனைக்கு தீர்வுகாண கிராமம், வட்டம், மாவட்டம், மாநில அளவில் அமைப்புகள் உருவாக்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.
குழந்தைகளை பாதுகாக்க பிரத்யேகமாக பேரிடர், அவசரநிலை மேலாண்மை அமைப்பு உருவாக்கி செயல்படுத்தப்படும்.
12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உறுப்பினராக இருக்கும் வகையில் பஞ்சாயத்துகளில் பாலர் சபை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மனதளவில் தைரியம் கொடுத்து வாழ்க்கை வாழ கற்றுக் கொடுப்போம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}