• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

குழந்தைகள் விரல் சூப்புவது ஏன்? பழக்கத்தை மாற்றுவதற்கான வழிகள்

Jeeji Naresh
0 முதல் 1 வயது

Jeeji Naresh ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 20, 2021

குழந்தைகள் தாயோட வயிற்றில் இருக்கும் போதே விரல் சூப்பும் பழக்கத்தை துவங்குகிறார்கள். பிறந்த பிறக்கு இந்த பழக்கம் தானா அவங்களுக்கு வந்துவிடுகிறது. பெற்றோர்கள் முதலில் தன் குழந்தை ஏன் விரல் சூப்புகிறது என்பதை அறிய அந்த குழந்தையை உற்று கவனிக்க வேண்டும். குழந்தைங்களோட விரல் சூப்புற பழக்கத்துக்கு நிறைய காரணங்கள் இருக்கு. அது ஒவ்வொரு குழந்தையின் வயது மற்றும் வளர்ச்சி முறைக்கு ஏற்றார்போல மாறுபடும். இதற்கான காரணங்கள் மறறும் இந்த பழக்கத்தை எப்படி நிறுத்தலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

கைக்குழந்தைகள் ஏன் விரல் சூப்புகிறார்கள் , அதை எவ்வாறு தவிர்க்கலாம்:

 • பெரும்பாலும் 4 அல்லது 7 மாதங்களில் துவங்கி, 2 முதல் 4 வயது வரை கை சூப்பும் பழக்கம் வருகின்றது.
 • பிறந்த ஒரு வருடம் முதல் உள்ள குழந்தைகள்  பசிக்காகவும், பய உணர்ச்சிக்காகவும் விரலை வாயில் வைத்து கொள்ளுகிறார்கள். விரல் சூப்புவதால் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.
 • புட்டிப்பால்(ஃபார்முலா)  குடிக்க ஆரம்பிக்கிற காலத்துல தான் நிறைய குழந்தைகள் விரல் சூப்ப ஆரம்பிக்கிறாங்க. தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு கிடைக்கிற நிறைவு புட்டிப்பால் குடிக்கும் போது கிடைக்கிறது இல்லை. புட்டியில பால் தீர்ந்ததும் தன்னோட மனநிறைவுக்காக குழந்தை விரல் சூப்பத் தொடங்குகிறார்கள்.
 • சில குழந்தைகள் 4 முதல் 7 மாதத்தில் பல் முளைக்கும் போது ஈறுகளின் பாதிப்பினால் விரல்களை வைத்து தேய்ப்பார்கள்.

இவை இயல்பான ஒன்றுதான் என்றாலும் இந்த பழக்கத்தை மாற்றுவது நல்லது. பெரும்பாலும் இந்த பழக்கம் குழந்தைகள் அடுத்த கட்டத்திற்கு போகும்போது தானாகவே சரி ஆகிவிடும். உங்க குழந்தை வாயில கை வைக்கும்போது கைகள், நகத்தில் உள்ள அழுக்கு வயிற்றில் போனால் வயிற்று உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. விரல்களை தூய்மையாக வைத்துக் கொள்வது நல்லது.ஒரு வயதுவரை இந்தப் பழக்கத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அதற்கு மேலும் இந்தப் பழக்கம் தொடருமானால், உடனே கவனிக்க வேண்டும்.                

உங்க குழந்தை  மேற்கூறிய எதாவது ஒரு காரணத்தினால் தான் விரல் சூப்புகிறது என்று நீங்க கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்கான தீர்வையும் முயற்சி செய்யலாம்.

 • குழந்தைகள் பால் குடுக்கும் போது அதிக நேர இடைவேளை இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்
 • அம்மா, அப்பாவை பார்க்காத ஏக்கத்தினால் தான் முதலில் குழந்தைகள் அசௌகரியத்தை உணர்கிறார்கள். எப்பவும் அம்மாவது, அப்பாவாது, பாட்டி, தாத்தாவாவது குழந்தையிடம் பேசிட்டு, விளையாடிட்டு, அவர்களுடனே  இருக்கலாம். குழந்தையை தனிமையில் விடாதீர்கள்.
 • புதிய சூழல், புதிதான ஓசை, புதிய மனிதர்கள் போன்றவை குழந்தைகளுக்கு பயம், ஏமாற்றம், திகில், அதிர்ச்சி, கவலை, கோபம், தனிமை ஆகிய உணர்வுகள் வர காரணமாகின்றது . அதனை கண்டறிந்து மகிழ்ச்சியான சூழலை உருவாக்கித்தர வேண்டும்.
 • பல் முளைக்கும் போது ஈறுகளின் பாதிப்பினால் விரல்களை சூப்பும் போது கேரட், ஆப்பில், பீட்ரூட் போன்ற கடித்து சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்களை பச்சையாக தோல் சீவி கொடுக்கலாம்.
 • வாயில் கை வைக்கும் போது கட்டாயபடுத்தி எடுத்து விட கூடாது. வாயில் கை வைக்கும்போது விளையாட்டு காட்டிகொண்டே மெதுவாக எடுத்து விடலாம். அன்பான அணுகுமுறையால் தான் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியும்.
 • குழந்தைகள் விரல் சூப்புவதை தடுப்பதற்கு பதில் அவர்களுக்கு வேறு ஏதாவது வேடிக்கை காட்டி அவர்களை திசைத்திருப்பலாம்.
 • கைகளில் கை உறை பயன்படுத்துவதால் இப்பழக்கத்தை நிறுத்தலாம்.

2 வயதுக்கு மேற்பட்ட குழநதைககளின் விரல் சூப்பும் பழக்கத்தை எவ்வாறு நிறுத்தலாம்.

 இந்த  பருவத்து குழந்தைகள் விரல் சூப்புவதை கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும். அதுவாகவே நிறுத்தும் என்று காலம் தாழ்த்த கூடாது. காலம் தாழ்த்துவதால்  குழந்தைகள் அடுத்த வளர்ச்சி கட்டம் தாமதமாக நிறைய வாய்ப்பு உண்டு. இவர்களுடைய கவனம் விரல் சூப்புவதிலேயே இருப்பதால் சிந்தித்து செயலாற்றும் திறன் குறைவாகவே இருக்கும். உதாரணமாக குழந்தைகள் பேசுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு, பற்கள், மற்றும் தாடை வடிவமைப்பு, தெற்றுப் பற்கள் முளைக்க இந்தப் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாகும்.

முதலாவதாக, பெற்றோர்கள் இந்த பழக்கம் எதனால் தங்கள் குழந்தைக்கு வந்தது என்று ஆராய்வதன் மூலம் இதற்கான தீர்வையும் எளிதில் அடையாளம் காண உதவியாக இருக்கும்.  இது வீட்டிலோ அல்லது பள்ளியிலோ அடிக்கடி நடக்கிறதா?  தூங்கும் நேரத்தில் அதிகமாக கை சூப்புகிறார்களா?  என்ன நிகழ்வுகள் அல்லது செயல்பாடுகள் இதை தூண்டுகின்றன?  உங்கள் பிள்ளை சோர்வாக இருக்கும்போது இது அடிக்கடி நிகழ்கிறதா?  அவர்கள் கவலைப்படும்போது இது அதிகமாக இருக்கிறதா? அவர்கள் சலிப்படையும் போது கை சூப்புகிறார்களா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த பழக்கத்தில் இருந்து எப்படி நிறுத்தலாம் என்று கீழே காணலாம்.

 • பேசி புரிய வைக்க வேண்டும்:

    2 வயதுக்கு மேற்பட்ட  குழந்தைகளுக்கு நாம் பேசுவது  புரியும். அதனால் "இது ஒரு கெட்ட   பழக்கம், இந்த மாதுரி பண்ண கூடாது" என்று அதனால் வரும்   பாதிப்பினை எடுத்து சொல்ல   வேண்டும். உடனே புரிய வைத்து  விட முடியாது. நம்ம பேசுவதை  குழந்தைகள் கவனிக்காமல்  இருக்கிற மாதுரி தெரியும். கண்டிப்பாக நாம் பேசுவது புரியும்.ஆனால் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

 • விளையாட்டு பொருட்கள்:

அவர்களது கை எப்போதும் விளையாட்டில் ஈடுபட்டவாறு திசைத்திருப்பலாம். உதாரணமாக பொம்மைகள், பில்டிங் பிளாக்ஸ், பசில்ஸ், க்ளே, ஆர்ட் கலர்ஸ் போன்ற விளையாட்டு பொருட்கள் கொடுத்து அவர்கள் கைகளுக்கு வேலை குடுக்கலாம். குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியம். 

 • பரிசு பொருட்கள் மூலம்:

நான்கு அல்லது அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு " நீ கை சூப்பாமல் இருந்தால் ஒரு பரிசு கொடுப்பேன்" விரல் சூப்புவதை நிறுத்தினால் நீ கேட்டதை வாங்கி தருவேன் என்று சொல்லி கை சூப்புவது ஒரு தவறான பழக்கம் என்று சொல்லி தவிர்க்கலாம்.

 • அன்பும், அரவணைப்பும்:

நிறைய குழந்தைகள் தூங்கும் முன் கை சூப்பிட்டே தூங்க முயற்சிப்பார்கள், அந்த நேரத்தில் கதை சொல்லி, தட்டிக் கொடுத்து, முத்தம் கொடுத்து, அரவணைத்து  தூங்க வைப்பதன் மூலம் இப்பழக்கத்தை நிறுத்தலாம்.

விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக்கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களில் மருந்து தடவுவது, வாயிலிருந்து விரலை எடுக்க கட்டாயப்படுத்துவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட குழந்தைகளை புரிந்து கொண்டு அன்பாகவும், மென்மையாகவும் கையாள்வதால் இப்பழக்கத்தை எளிதில் நிறுத்திவிடலாம்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}