• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

குழந்தையில் கை கழுவுதல் பழக்கத்தை எவ்வாறு கொண்டு வருவது?

Radha Shri
3 முதல் 7 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 24, 2019

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெரியவர்கள் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எளிதாக கடைப்பிடிக்க முடியும். ஆனால் குழந்தைகளை யோசித்து பார்த்தால் அவர்களுக்கு இது முழுமையாக புரியாது. ஏன் இவங்க எல்லாரும் அடிக்கடி கை கழுவ சொல்றாங்கன்னு ஒரு சலிப்பு வர ஆரம்பிக்கும். மேலும் கொரோனா பற்றிய முழு தகவலையும் சொல்லி அவர்களை பதற்றமடைய வைக்க வேண்டாம். அதனால் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சொல்லி அவர்களை விளையாட்டு போக்கில் செய்ய வைப்பதே சிறந்த அணுகுமுறையாகும்.

இயல்பாகவே ஒவ்வொரு நாளும் நம் கைகளில் கிருமிகள் சேர்கின்றன. கதவை திறக்கும் போது, முகத்தை துடைக்கும் போது, பொம்மைகள் வைத்து  விளையாடும் போது, டயப்பர் மாற்றும் போது என பல விதங்களில் கண்களுக்கு தெரியாத கிருமிகள் நம் கைகளில் சேரும். குழந்தைகள் விளையாட்டுத்தனம் மிக்கவர்கள். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு கைகளில் கிருமிகள் சேர்வது எளிது. ஆரம்பத்தில் கை கழுவுவதை விளையாட்டாக சொல்லிக் கொடுத்து அவர்கள் வளர வளர இதன் நன்மைகளை எடுத்துக் கூறலாம். இந்த மாதிரி உருவாகும் கிருமிகளை தவிர்ப்பதற்கு கை கழுவுவது மிக மிக அவசியம். மேலும் இந்த கிருமிகள் மற்றவர்களுக்கு பரவாமலும் பார்த்துக் கொள்ள உதவுகின்றது.

கை கழுவுவதன் நன்மைகளோடு குழந்தைகளுக்கு ஏற்ற அணுகுமுறையில் இந்த பழக்கத்தை எவ்வாறு கொண்டுவரலாம் என்பதற்கான குறிப்புகளையும் இப்போது பார்க்கலாம்.

கைகளை கழுவுவதன் நன்மைகள்

இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். ஒவ்வொரு வருடமும் பல லட்சம் குழந்தைகள் அவர்களின் 5 வது பிறந்தநாள் கொண்டாடுவதற்கு முன் இறந்துவிடுகிறார்கள். காரணம், அதீத வயிற்றுப் போக்கு மற்றும் நிமோனியா. கைகளை சுத்தமாக கழுவுவதன் மூலம் இந்த மாதிரி நோய்கள் தாக்காமல் பாதுகாக்கலாம். இந்த சின்ன பழக்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறல் போன்று பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து அவர்களை பாதுகாக்கலாம். மேலும் சில உண்மைகள்

 • கை கழுவுவதன் மூலம் 47 % வயிற்று தொற்று அதிகரிக்காமல் குறைக்கலாம்.
 • 2 முதல் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் விரல் நுனியில் மற்றும் முழங்கால்களுக்கு இடையில் பதுங்குகிறது.
 • கழிப்பறையை பயன்படுத்திய பின் நம்முடைய விரல் நுனியில் இரண்டு மடங்கு கிருமிகள் 3 மணி நேரம் வரை தங்குகிறது.

ஏன் குழந்தைகள் எப்போதும் கைகளை கழுவ வேண்டும்

உங்கள் குழந்தைகள் சரியான முறையில் தங்கள் கைகளை கழுவுகிறார்களா என்பதை  கூர்ந்து கவனித்து அவர்களுக்கு உதவு வேண்டும். இந்த வேலைகளுக்கு முன் கைகளை கழுவ வெண்டும்

 • உணவு உண்ணும் முன் மற்றும் சாப்பிடும் பொருட்களை தொடுவதற்கு முன்
 • பானையில் தண்ணீர் எடுக்கும் முன்
 • உணவை கையாளும் முன்

இந்த வேலைகளுக்கு பின் கைகளை கழுவ வெண்டும்

 • கழிப்பறையை பயன்படுத்திய பின்
 • வெளியில் விளையாடிய பின், மணலில் அல்லது தண்ணீரில் விளையாடிய பின்
 • செல்லப் பிராணிகள் அல்லது விலங்குகளை கையாண்ட பின்
 • இருமல், தும்மல், சளி இருக்கும் போது, மூக்கை துடைத்த பின்
 • சாப்பிட்ட பின்
 • பள்ளி அல்லது டே-கேர், ப்ரீ-ஸ்கூலில் இருந்த வந்த பின்
 • அதிக நேரம் பொது இடங்களில் செலவு செய்த பின் (ஷாப்பிங் மால், மளிகை கடை, உள்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு மைதானம், பேரூந்து)

சரியான முறையில் கை கழுழுவதற்கான 4 வழிகள்

 1. முதலில் வெறும் தண்ணீரில் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
 2. சோப் அல்லது ஹேண்ட் வாஷ் வைத்து கைகளின் இடுக்குகளில், விரல்கள், நகங்கள் போன்ற இடங்களில் சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும், அதன் பிறகு தண்ணீர்ல் நன்றாக கழுவ வேண்டும்
 3. 20 விநாடி வரை கைகளை கழுவ நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 4. சுத்தமான டவலில் கைகளை துடைத்துக் கொள்ள வேண்டும்.

சோப் அல்லது தண்ணீர் இல்லாத தருணங்களில் ஹேண்ட் வைப்ஸ் அல்லது சானிடைஸர் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம். குழந்தைகள் இதை பயன்படுத்தும் போது கவன்ம தேவை.

குழந்தைகளுக்கு இதை ஒரு பழக்கமாக மாற்றுவதற்கான குறிப்புகள்

எளிதானது, வசதியானது மற்றும் பாதுகாப்பனது – சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி வாஷ் பேசின் சென்று கைகளை கழுவுவது கடினமாக இருக்கலாம். பாதுகாப்பான ஸ்டூல் அல்லது அவர்கள் உயரத்திற்கு எட்டி கை கைகளை கழுவுவதற்கு எளிதாக ஏற்றதாக அமைத்துக் கொடுங்கள். கடினமான செயல் என்று செய்யாமல் விடவும் வாய்ப்பு இருக்கின்றது.

வேடிக்கை நிறைந்த அனுபவம் விதிமுறையாக அறிமுகப்படுத்தாமல் வேடிக்கையான சோப் வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் குழாய்கள் என குழந்தைகளுக்கு இதை வேடிக்கை அனுபவமாக தொடங்குங்கள். அதன் பின் அவர்கள் ஆசையாக இந்த செயலை செய்ய முன் வருவார்கள்.

கை கழுவும் சார்ட் ஒட்டி வைக்கலாம் – குழந்தைகளுக்கு புரியும் வகையில் கை கழுவுவதை வலியுறுத்தும் சார்ட்டை தயார் செய்து ஒட்டி வைக்கலாம். கதையாக கூட வடிவமைத்து வாஷ் பேசின் அருகில் ஒட்டி வைக்கலாம்.

ஆர்ட் & கிராஃப்ட் – குழந்தைகளுக்கு ஆர்ட் & கிராஃப்ட் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த ஒரு கருவாக எடுத்துக் கொண்டு அவர்களோடு சேர்ந்து கிராஃப்ட், பிக்சர் ஆர்ட், கொலேஜ், ஆல்பம் தயாரிக்கலாம்.

உதாரணம் அவசியம் – வீட்டில் பெரியர்கள் இதை ஒரு பழக்கமாக வைத்திருந்தால் குழந்தைகளுக்கு திரும்ப திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சரியான உதாரணம் அவசியம் தேவை.

கிருமிகளை பற்றி பெசலாம் கை கழுவுவதன் மூலம் கிருமிகளை அளிக்க முடியும். அவர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் ஏற்படும் நோய்களையும், பாதிப்புகளையும் இதன் மூலம் தடுக்க முடியும் என்பதை அவர்களுக்கு புரியும் விதத்தில் எடுத்து சொல்லலாம். கதைகள் மூலமும் இதை ஒரு பழக்கமாக அவர்களுக்குள் கொண்டு வரலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு இந்த ஒரு பழக்கமாக எவ்வாறு மாற்றினீர்கள் என்பதை கருத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

 

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}