• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து

ஹோம் மேட் செர்லாக் செய்வது எப்படி? 3 சத்தான செர்லாக் வகைகள்

Bharathi
0 முதல் 1 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 06, 2021

 3
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

குழந்தைகள் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் குடித்து வளரும். அதன் பிறகு என்ன திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று யோசித்தால் முதலில் நினைவிற்கு வருவது செரிலாக். கடைகளில் விதவிதமான ஃப்ளேவர்ஸ் இல் கிடைக்கிறது. இருந்தாலும் வீட்டில் நாம் பார்த்து பார்த்து பொருட்கள் வாங்கி வீட்டில் தயார் செய்தால் இன்னும் ஆரோக்கியமாகவும், திருப்தியாக இருக்கும் என்று வீட்டிலேயே தயார் செய்து என் குழந்தைகளுக்கு கொடுத்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

3 சத்தான ருசியான செர்லாக் வகைகள் மற்றும் செய்முறைகள்:

செர்லாக் 1:

தேவையான பொருட்கள்:

சம்பா அரிசி (அ) வெள்ளை அரிசி       

1 கப்

 

கருப்பு உளுந்து     

1 கப்

 

பாசி பருப்பு                  

1 கப்

 

பொட்டு கடலை          

1 கப்

 

பச்சை பயிறு

1 கப்

 

கோதுமை ரவை

1 கப்

 

சவ்வரிசி

1/2 கப்

கொள்ளு பருப்பு

1/2 கப்

வெள்ள சோளம்

1/2 கப்

பாதாம்

1/2 கப்

முந்திரி    

1/2 கப்

ஏலக்காய்

10

 

தயாரிக்கும் முறை

1. கொடுத்து உள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

2. அரிசி நன்றாக பொரியும் வரை வறுக்கவும்.

3. பருப்பு வகைகள் வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும்.

4. சோளம், கொள்ளு மொறு மொறு என்று ஆகும் வரை வறுக்கவும்.

5.பாதாம் மற்றும் முந்திரி சிவக்க வறுக்கவும்.

 வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் நன்றாக சலித்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

எப்படி குழந்தைகளுக்கு கொடுப்பது?

சிறிய பாத்திரத்தில் 2 ஸ்பூன் அளவு மாவு எடுத்து கொதிக்கும் நீர் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி வைத்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஆறியதும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.  இதில் ஏலக்காய்க்கு பதில் சீரகம் வறுத்து சேர்த்து தயார் செய்து வைத்துக் கொண்டால் சிறிது உப்பு சேர்த்து கொடுக்கலாம். இது ஒரு வகை செர்லாக். இதை 3 வயது கூட கொடுக்கலாம்.

செர்லாக் 2:

தேவையான பொருட்கள்

அரிசி.                             - 1 கப்

முழுப்பொரிகடலை. - 1/2 கப்

ஏலக்காய்.                     - 2

தயாரிக்கும் முறை

அரிசி நன்றாக பொரியும் வரை வறுக்கவும்.

 1. பொரிகடலை நன்றாக சிவக்க வறுத்து எடுக்கவும்.
 2. ஏலக்காய், வறுத்து எடுத்து இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 3. ஆறியதும் சலித்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

கொடுக்கும் முறை:

 2 ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீர் ஊற்றி அதில் சிறிது பொடித்த வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து ஆறியதும் ஒரு ஸ்பூன் வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 

செர்லாக் 3:

தேவையான பொருட்கள்

கோதுமை - 35 கிராம்

பாசிப்பயறு - 20 கிராம்

வேர்க்கடலை - 10 கிராம்

கருப்பட்டி - சிறிதளவு

தயாரிக்கும் முறை:

தேவையானவற்றில் கருப்பட்டியைத் தவிர்த்து, மற்ற பொருள்களைச் சுத்தம் செய்து, தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, சலித்து வைத்துக் கொள்ளவும்.

கொடுக்கும் முறை

இரண்டு ஸ்பூன் மாவு எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு கட்டி இல்லாமல் கலக்கி பின்னர் கருப்பட்டி பாகு சேர்த்து இறக்கவும். பின்னர் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கருப்பட்டி பாகு செய்யும் முறை:

கருப்பட்டி (1 கப்)தேவையான அளவு எடுத்து கொண்டு தண்ணீர் (1/4 கப்) தேவையான அளவு சேர்த்து கரைத்து கொள்ளவும். அதை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து நிக்காத காய்ச்சி ஆறியதும் பாட்டிலில் போட்டு குளிர் சாதன பெட்டியில் வைத்து கொள்ளவும். தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதை எல்லாம் ஏதேனும் ஒரு வேளை உணவாக கொடுக்கலாம். இதையே மூன்று வேளை கொடுத்தால் அதன் மேல் வெறுப்பு வந்து விடும். இதை தவிர பழக்கூழ், ராகி கஞ்சி இதை எல்லாம் வாரம் இரு முறை ஒரு வேளை உணவாக கொடுக்கலாம்.

மற்றபடி நாம் உண்ணும் உணவு எல்லாவற்றையும் ஒரு வயதிற்குள் கொடுத்து பழக்கி விட வேண்டும். ஏனெனில் சுவை அரும்புகள் ஒரு வயதிற்கு மேல் வளர்ந்து விடும். அதனால் வளர்ச்சி அடையும் முன்னர் எல்லா சுவை உணவுகளையும் அறிமுகப்படுத்தி விடவும். அது நல்லது.

உண்ணும் உணவு சுவையான உணவாகவும் ஆரோக்கியமான உணவாகவும் இருந்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் குழந்தைக்கு இந்த சத்தான, ருசியான உணவுகளை கொடுத்துப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 3
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
 • Reply
 • அறிக்கை
 • Reply
 • அறிக்கை
 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}