உங்கள் குழந்தையின் ஸ்கீரின் டைமை எவ்வாறு நிர்வாகிப்பது?

Uma ஆல் உருவாக்கப்பட்டது புதுப்பிக்கப்பட்டது Apr 12, 2021

தொழில்நுட்பம் என்பது இன்றைக்கு மனிதனின் உதவியாளராக அறியப்படுகிறது. கடினமான சூழ்நிலைகளிலும் ஒரு பயிற்சியாளராக, ஒரு பொழுதுபோக்காக மற்றும் பலவற்றில் கூட நாம் இதற்கு மிகவும் அடிமையாக உள்ளோம். ஏனெனில், இது இல்லாமல் நாம் எதையும் யோசிக்கவோ செய்யவோ முடியாத நிலையில் உள்ளோம். இது இன்றைய நவீன யுகத்தின் கல்வி, மருத்துவத்துறை, தொழில், தொலைதூர இடங்களை இணைத்தல் போன்ற விஷயங்களில் பாலமாக செயல்படுகின்றது. நமது குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
அவர்களுடைய அன்றாட வாழ்வில் டிவி/மொபைலை முற்றிலும் நம்மால் அகற்றிவிட முடியாது. இன்றைய சூழலில் அவர்களது கல்வியே இதன் வழியாக தான் நடக்கின்றது. இருப்பினும் பெற்றோர்களாகிய நாம் அவர்களது ஸ்கிரீன் டைமை நிச்சயமாக திட்டமிட வேண்டிய நிலையில் உள்ளோம். குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான படைப்பாற்றல், பேச்சுத்திறன், வாழ்க்கைத்திறன் என பன்முக திறன்களும் வளர்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். ஆதலால், குழந்தைகளுக்கு ஸ்கிரீன் டைமை எவ்வாறு திட்டமிடலாம் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ஸ்கிரீன் டைமை எவ்வாறு நிர்வகிப்பது ?
உங்கள் 3-7 வயது குழந்தையின் எதிர்மறையான செயல்களான ஆக்ரோஷம், அடம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை குறைக்க ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினி போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக சமூக தொடர்புகளை ஊக்குவியுங்கள். இயற்கையுடன் இணைவதற்கு திட்டமிடுங்கள், வாழ்க்கையின் இந்த தருணத்தை அனுபவிக்கவும், நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்கவும். ஆச்சரியங்களை ரசிக்கவும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.
பெரியவர்கள் ஸ்கிரீன் டைமை குறைப்பதன் அவசியம் என்ன?
குழந்தைகள் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்கள் மீது விருப்பம் இல்லாமல், சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதற்கு இந்த மின்னனு கேட்ஜெட்ஸ் மிக முக்கிய காரணியாக இருக்கின்றது. பார்ப்பதற்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றினாலும் ஆத்மார்த்தமான திருப்தியை இது தராது. ஸ்கிரீன் டைபை குறைப்பதன் மூலம் ஒரு நாளின் பல செயல்பாடுகலில் அவர்களை ஈடுபடுத்த முடியும்.
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்: நீங்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாதபோது மனஉளைச்சல் ஏற்படுகிறது. உங்கள் தினசரி வழக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒரு சிறிய தியாகத்துடன் அதில் மாற்றத்தை கொண்டுவருவதன் உங்களை சுற்றி நிகழும் அதிசயங்களை பார்க்கலாம். சமூக ஊடக ஆப்ஸின் பயன்பாட்டை நிறுத்தி நீங்கள் நடைப்பயிற்சி செய்யலாம், சிரிக்க வைக்கும் நாவலைப் படிக்கலாம் அல்லது மகிழ்ச்சியாக இதை போன்ற வேறு விஷயங்களை செய்யலாம்.
கவனத்தை மேம்படுத்துதல்: தொழில்நுட்பம் நம் வசம் இருப்பதால், கவனச்சிதறல் அதிகமாக இருக்கிறது. ஒரு கை மின்னஞ்சலில் இருக்கலாம், மற்றொன்று பேஸ்புக்கில் ஸ்க்ரோலிங் செய்யலாம், மற்ற ஆப்ஸை தேடலாம்.. இது கவனத்தை குறைக்க வழிவகுக்கிறது. நம் ஸ்மார்ட்போன்கள் சில மணிநேரங்களுக்கு அணைத்து விட்டு, உங்கள் மூளைக்கு பயிற்சியளிக்கவும், அர்த்தமுள்ள ஒன்றில் கவனம் கொள்ளுங்கள்.
ஒரு நேரத்தில் ஒரு பழக்கத்தை மாற்றுவது: ஒரே நேரத்தில் பல விஷயங்களை செயல்படுத்துவது உங்களை எதிலும் முழுமையாக ஈடுபட விடாது. ஒரு நேரத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கவும். உங்கள் ஸ்மார்ட்போன் டைனிங் டேபிளில் அல்லது படுக்கையறையில் இருப்பதை தவிர்த்துவிடுங்கள். கடினமான செயல் தான் ஆனால் நீங்கள் நீங்களாக இருக்க, உங்கள் கடமையை செய்ய நம்பிக்கையை பெற ஒரு வார இலக்காக வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு மற்றொரு இலக்கிற்கு செல்லுங்கள். உங்களுக்குள் கட்டுப்பாட்டை பெறத் தொடங்குவீர்கள்.
சிறந்த தூக்கம்: தூங்குவதற்கு முன் உங்களது கண்கள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உங்கள் கேஜெட்களை அணைக்கவும். உங்கள் படுக்கையறை ஒரு திரையரங்கு அல்ல, தூங்குவதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கவனம் செலுத்துதல்: நான் மற்றவர்களை பற்றி பேசவில்லை. மகிழ்ச்சியை அனுபவிக்கவும் மன அழுத்தத்தை சமாளிக்கவும் உங்கள் இனிமையான குடும்பத்திற்கு உங்களுடைய சிறப்பான கவனம் தேவை. எனவே, உங்கள் கேஜெட்களின் மேல் கவனம் செலுத்தாமல், உங்கள் மகிழ்ச்சியான குடும்பத்துடன் இருக்க சில மணிநேரங்களுக்கு நேரத்தை ஒதுக்கி வைக்கவும்.
செயல்திறன் கொண்டதாக இருக்க: ஒரு இயந்தரத்திற்கு கூட குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வு தேவை மீண்டும் திறமையாக செயல்பட, நாம் அனைவரும் செயல் திறன் கொண்டவர்களாக இருக்க விரும்புகிறோம், சிறந்தவர்கள் என்று அழைக்கப்படுவதற்கு நம்முடைய செயல் திறனை ஊக்கப்படுத்த முயற்சிகள் தேவை.
தொழில்நுட்பம் இல்லாமல் எப்படி இருப்பது?
இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் நமக்கு ஏராளமான பொழுதுபோக்குகளை வழங்குவதால், தொழில்நுட்பம் இல்லாமல் ரசனை என்பது கேட்க வினோதமாக இருக்கும் அளவிற்கு மனம் மாறிக் கொண்டு வருகிறது. கேட்ஜெட்ஸ் நேரத்தை குறைத்து வாழப் பழகுவதற்கான ஆலோசனைகள்.
1. ஒரு இசைக்கருவியை வாசித்தல்: உங்களை பிரியப்படுத்தக்கூடிய இசைக் கருவியை வாசிக்க நீங்கள் ஒரு இசை வகுப்பில் சேரலாம் அல்லது தூசி தட்டிப் பழைய கருவியை வெளியே கொண்டு வரலாம். ஒரு பாடலை உருவாக்க முயற்சிக்கவும் அல்லது முந்தைய காலத்தின் மெல்லிசையை இசைக்கவும். இது உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை அளிக்கும், உங்கள் காதுகளுக்கு விருந்தளிக்கும்.
2. சாகசமாக ஏதாவது செய்யுங்கள்: உங்கள் குடும்பத்தினருடன் மலையேற்றத்திற்கு செல்லுங்கள் அல்லது அவர்களிடம் உங்கள் அன்பையும் பாசத்தையும் காட்ட ஆரோக்கியமான ஒன்றை செய்யவும்.
3. ஒரு வேடிக்கையான நடனம்: விருந்தை ரசிக்க நீங்கள் மைக்கேல் ஜாக்சனைப் போல இருக்க வேண்டாம். இங்கே உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து ஆடுவது ஒரு புன்னகையையும், சந்தோஷத்தையும் பரப்புகிறது. அப்போது தொழில்நுட்பத்தின் பயன்பாடு இயல்பாகவே குறைய தொடங்கும்.
4. ஒரு விளையாட்டு: குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் விளையாடும் போது அவர்களை நண்பர்களாக கருதுகிறார்கள். கால்பந்து போன்ற ஒரு விளையாட்டை அனுபவிப்பதன் மூலம் நமக்குள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்புகிறது, அவர்களுக்கு கோல் அடிக்க அனைத்து வாய்ப்பையும் கொடுங்கள். அவர்கள் வெற்றி பெறுவதை விரும்புவார்கள், நீங்கள் தோற்கடிக்கப்படுவதை விரும்புவீர்கள்.
5. புதிய பொழுதுபோக்குகளை கண்டறிதல்: நாம் தொழில்நுட்பத்திற்காக நிறைய நேரத்தை ஒதுக்கியுள்ளோம் - நம் டிஜிட்டல் சாதனங்கள், ஒரு புதிய பொழுதுபோக்கை அனுபவிப்பதற்காக தரமான நேரத்தை மிச்சப்படுத்துவது அல்லது உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய பழைய விஷயங்கள் ஒன்றை செய்யலாம். யோகா, வரைதல் அல்லது தோட்டக்கலை போல முயற்சியுங்கள்.
6. நேரில் பேசுங்கள்: இந்த செயல்முறை ஒற்றுமையை உருவாக்குகிறது, சிறந்த புரிதல் மற்றும் ஒரு அழகான உறவை மேலும் பலப்படுத்துகிறது.
7. சீட்டு வித்தைகள்: உங்கள் குழந்தைகளுக்காக சில சீட்டு வித்தைகளை செய்து விளையாடுங்கள். அவர்களின் ஆச்சரியமான புன்னகைகள் உங்கள் இதயத்தை வெல்லும். உங்கள் தொழில்நுட்ப போதை காரணமாக நீங்கள் பார்க்காமல் போன ஒன்று உங்களை தேடி தானாக வரும்.
8. குடும்ப படபிடிப்பு: உங்கள் குடும்பத்தினரின் சிறந்த படங்களை பெற நீங்கள் புகைப்பட கலைஞராக இருக்க வேண்டியதில்லை. உங்களுடைய சிறப்பான கிளிக்குகள் அவர்களிடமிருந்து புன்னகையைப் பெறும்.
படப்பிடிப்பு தயாராக உள்ளது மற்றும் படம் தெளிவாக உள்ளது. உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெளியே செல்லுங்கள், அனுபவப்பூர்வமாகப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.இதுவே நீங்கள் இவ்வளவு நாட்கள் காத்துக் கொண்டிருக்கும் பேரின்பைத்தை உங்களுக்குள் உருவாக்கும்.
அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

{{trans('web/app_labels.text_some_custom_error')}}
{{trans('web/app_labels.text_some_custom_error')}}