• உள்நுழை
 • |
 • பதிவு
குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

கொரோனா காலத்தில் பிரசவத்தை திட்டமிடுவது எப்படி?

Radha Shri
கர்ப்பகாலம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 08, 2021

எப்போதும் பிரசவத்திற்கு திட்டமிடுவது போல் இப்போது இருக்கிற சூழ்நிலையில் செய்ய முடியாத. கொரோனா காலத்தில் நீங்கள் குழந்தையை பெற்றெடுக்க போகிறீர்கள் என்றால், உங்கள் பிரசவ தேதி நெருங்கி வந்தால் நீங்கள் பிரவத்தைப் பற்றி நிறைய சந்தேகங்கள் மற்றும் பயத்தோடு இருப்பது இயல்பானது தான். ஆனால் தயவு செய்து பதட்டப்படாதீர்கள். இந்த நிலையிலும் உங்களை நீங்கள் மனதளவில் அமைதியாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சரியாக திட்டமிடுவதன் மூலம் உங்களுக்குள் ஏற்படும் பதட்டத்தை, தேவையில்லாத பயத்தை கட்டுப்படுத்தலாம்.

இந்த நெருக்கடியான சூழலில் உங்கள் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க இந்த குறிப்புகளும், ஆலோசனைகளும் உதவும்.  உங்கள் பாதுகாப்பான மற்றும் இனிமையான பிரசவத்திற்கு உங்களை தயார்ப்படுத்த கீழே உள்ள விஷயங்கள் நிச்சயமாக உதவும்.

கொரோனா காலத்தில் பிரசவத்துக்கு முன்/பின் உதவும் பாதுகாப்பு ஆலோசனைகள்

இந்த சூழலில் பிரசவத்திற்காக நீங்கள் மருத்துவமனையில் சேர திட்டமிடும் போது கேட்க வேண்டிய கேள்விகள் இது.

 • மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றுக்காக சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் என்னென்ன செயல்படுத்தப்பட்டுள்ளன?
 • என் குழந்தை பிறப்பதற்கு முன்பு நான் வீட்டில் ஏதேனும் கூடுதல் முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டுமா?
 • மருத்துவமனையில் என் பக்கத்திலேயே எத்தனை நபர்கள் தங்க முடியும்?
 • எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்? (சுகப்பிரசவம், சிசேரியன்)
 •  மருத்துவமனையில் எனது குழந்தை பிறந்த பிறகு பார்க்க  அனுமதிக்கப்படுகிறார்களா?
 • கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் இருக்கிறதா? (தாய் மற்றும் சேய்)
 • ஏதாவது மாற்றங்கள் இருந்தால், எனக்கு எவ்வாறு அறிவிக்கப்படும்?

பிரசவத்திற்கு முன்

கர்ப்பிணிகளுக்கு ஏற்கனவே பிரசவத்தை நினைத்து அச்சம் இருக்கும். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் உங்களையும் உங்கள் குழந்தையையும் பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். நீங்கள் பின்பற்ற தவறகூடாத பாதுகாப்பு குறிப்புகள் இங்கே

 • கை சுகாதாரம்  -  இது மிகவும் எளிமையானதாக தோன்றலாம். பிரசவத்திற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது என்பது இப்போது உங்கள் உடல்நலத்திற்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். சோப்பு மற்றும் ஹேண்ட் வாஷ் கொண்டு உங்கள் கைகளை தவறாமல் கழுவுங்கள்.  அல்லது சானிடைஸரை பயன்படுத்துங்கள்.
 • சமூக விலகல் அவசியம் – அவசியம் இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். கர்ப்ப கால பரிசோதனைகளுக்கு சென்றாலும் முகக்கவசம், சானிடைஸர் மறக்காமல் பயன்படுத்துங்க. yஆருடன் பேசினாலும் சமூக இடைவெளியை பின்பற்ற தவறாதீர்கள்.
 • மன அமைதி தேவை - உங்கள் கவலையைக் குறைக்க முயற்சிக்கவும். மன அழுத்தம் உங்கள் நோயெதிர்ப்பு திறனை குறைக்கும். உங்கள் மன அழுத்தத்தையும் உங்கள் குழந்தையால் உணர முடியும். இதை கையாள்வதில் அதிக கவனம் செலுத்துங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்திகளைப் படிக்கும் அல்லது சமூக ஊடகங்களில் செலவழிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள். ஒரு புத்தகத்தைப் படிப்பது, நண்பர்களுடன் தொலைபேசியில் பேசுவது அல்லது நடைப்பயணத்திற்கு செல்வது, தியானம் செய்வது, ஏதாவது கைவினைப் பொருட்கள் & ஆர்ட் கிராஃப்ட் செய்வது போன்ற மனதுக்கும், மூளைக்கும் அமைதி, மகிழ்ச்சி தரும் செயல்களை செய்ய முயற்சிக்கவும்.
 • பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும் – உங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தோ அல்லது அவற்றை வழங்குவதற்கோ ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். பல மருந்தகங்கள் ஹோம்-டெலிவரி கொடுக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் பொருட்களுக்கு வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஷாப்பிங் செய்வதற்கு முன்பு உங்கள் ஷாப்பிங் கார்ட்டை ஒரு பாக்டீரியா எதிர்ப்பு துடைப்பால் துடைக்க மறக்காதீர்கள். நீங்கள் கடையை விட்டு வெளியேறியவுடன் கை சானிடைஸரை பயன்படுத்துங்கள். நீங்கள் வீடு திரும்பும்போது சோப்பு மற்றும் தண்ணீரில் கை, கால், முகத்தை நன்கு கழுவுங்கள்.
 • நோய்வாய்ப்பட்டவர்களுடன் அருகில் இருப்பதை தவிர்க்கவும் -  சமூக விலகல் மற்றும் பாதுகாப்பு என்பது உங்கள் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, உங்கள் குழந்தைக்கும் முக்கியமானது. இது கடினமாக இருந்தாலும், ​​உங்கள் ஆரோக்கியத்திற்கு இது முக்கியமானது என்பதை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். அன்பானவர்களுடன் வீடியோ அரட்டைகள் அல்லது தொலைபேசி அழைப்புகளை திட்டமிடுங்கள். எனவே நீங்கள் உடல் ரீதியாக ஒன்றாக இருக்க முடியாவிட்டாலும் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்கிறீர்கள் என்கிற உணர்வு உங்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் இருக்கும்.
 • நீர்ச்சத்து இழக்காமல் பார்த்துக் கொள்ளவும் -  கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

உங்கள் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரும்போது திட்டங்களை தயாரிக்கத் தொடங்குங்கள். தேவையான பொருட்களின் பட்டியலை (டயப்பர்கள், துடைப்பான்கள், துண்டு, சோப்) வைத்திருக்க முயற்சி செய்யுங்கள், எனவே நீங்கள் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படாது.

பிரசவத்துக்கு பின்

 • உங்கள் வீட்டில் குழந்தையை பார்க்க பார்வையாளர்கள் அதிகம் வருவதை தவிர்க்கவும். உங்கள் மகிழ்ச்சியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் நேரம் இது என்றாலும் அதைவிட முக்கியம் உங்கள் நலம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம்.  இருப்பினும், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு மக்கள் பெரும்பாலும் நோயின் கேரியர்களாக இருக்கலாம். பாதுகாப்பான சூழ்நிலையில் உங்கள் அன்புக்குரியவர்களை  சந்திக்க வாய்ப்பு கொடுக்கவும். அதுவும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செய்வது அவசியம்
 • குழந்தையை தூக்குவதற்கு முன் யாராக இருந்தாலும், கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ சொல்லுங்கள். உங்கள் வீட்டில் மற்ற குழந்தைகள் இருந்தால், தூரத்தை கடைப்பிடிக்க ஊக்குவிக்கவும். குறிப்பாக குழந்தையை அடிக்கடி தூக்காதீர்கள். நிறைய பேரிடமும் தூக்க அனுமதிக்காதீர்கள்.
 • குழந்தைக்கு தேவையான பொருட்களை கையில் கூடுதலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்கு தேவையான துணி டயப்பர்கள் மற்றும் துடைப்பான்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளுங்கள். மேலும், குழந்தைக்கு தேவையான மருந்து பொருட்கள், ஆடைகள், கை உறை, கால் உறை, விரிப்பான், மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து செல்ல பேபி ஹூட், சோப், ஷேம்பூ, மசாஜ் ஆயில் என முன்கூட்டியே பட்டியல் போட்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
 • உங்கள் குழந்தையை பொதுவான மருத்துவ பரிசோதனைக்கு அல்லது தடுப்பூசி போட அழைத்து செல்லும் போது உதவ இரண்டு பேர் மட்டும் போதும். ஒரு வயது வந்தவர் குழந்தையுடன் காரில் காத்திருக்க வேண்டும், மற்றவர் செக்-இன் செய்ய உள்ளே செல்கிறார். மருத்துவர் குழந்தையை பார்க்கத் தயாரானதும், அவர்கள் பார்க்க வேண்டிய இடத்திற்கு குழந்தையை கொண்டு வரப்படுவார்கள். வெளியேறும்போது, ​​கார் இருக்கையை ஒரு கிருமிநாசினி துடைப்பால் துடைக்க வேண்டும்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பிரசவத்துக்கு தயாராவதை திட்டமிடுவது என்பது சற்று கடினம் தான். ஆனால் நீங்கள் ஆரம்பத்திலேயே மேற்சொன்ன விஷயங்களை திட்டமிடுவது மூலம் பதற்றத்தை குறைக்கலாம். எல்லாம் சுமூகமாக நடக்கும் என்ற நம்பிக்கை இத்தருணத்தில் மிக அவசியம். மருத்துவர்களுடன் தொடர்பில் இருங்கள். கர்ப்பிணிகள் இந்த சூழ்நிலையில் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு குடும்பத்தின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக மிக அவசியம். அவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்வது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும். கொரோனா காலத்திலும் தாய் மற்றும் சேயின் நலம் காக்க அனைவரின் முயற்சியும் தேவை.

இந்த இனிய தருணத்தை எதிர்கொள்ளும் தாய்மார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பிரசவம் இனிதாக அமையும். நீங்கள் எதிர்பார்க்கும் அந்த அருமையான தருணம் வரப்போகின்றது. பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் குழந்தையை பிரசவிப்பேன் என்ற நம்பிக்கை கொண்டு உங்கள் குழந்தையை வரவேற்க தயாராகுங்கள்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த குழத்தை நலம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}