• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

புதிய சூழலுக்கு குழந்தைகளை தயார் செய்வது எப்படி?

Amala Jacino
0 முதல் 1 வயது

Amala Jacino ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Feb 20, 2019

பொதுவாக குழந்தைகளின் உலகம் மிக சிறியது அதில்  பெற்றோர்கள் மற்றும்  உறவினர்கள்  மட்டுமே இருப்பார்கள்  அதாவது  அம்மா, அப்பா,  உடன் பிறந்தவர்கள், தாத்தா,பாட்டி என  குறுகிய  வட்டத்திற்குள்தான்  இருப்பார்கள். அந்த வட்டத்தை  விட்டு  வெளியே  வரும்போது  ஒருவித பயம்  குழந்தைகளுக்கு வருவது  இயற்கை. அதை எளிய  வகையில்  கையாளலாம். பெற்றோர்களைவிட  யாராலும் ஒரு குழந்தையை சரியாக புரிந்து  கொள்ள  முடியாது ஏனெனில்  ஒவ்வொரு  நிமிடமும் பெற்றோர்களின் உலகத்தில் முக்கிய உறுப்பினர்களக இருக்கிறார்கள்  நமது  ஆசைகளை விருப்பங்களை  திணிப்பதற்கு பதில்  அவர்களின் ஆசை என்ன?  விருப்பம்  என்ன? என்று  நாம் புரிந்து வைத்திருப்பது அவசியம். அவர்களை  குழந்தைகளாகவே  இருக்க  விடுவதே இந்தப் பருவத்திற்கு ஏற்றது.

நான் என் விருப்பத்தை திணிக்கும் போது அதன்  பின்  விளைவுகளை  அனுபவித்துள்ளேன்  அவ்வாறு கட்டாயப்படுத்தினால்  அவர்களின்  மனதில்  குழப்பம்  மட்டும் இல்லாமல்  இப்படிதான்  செய்யவேண்டும்  என தீர்மானித்துவிடுவார்கள். இதனால்  அவர்களின் தனித்தன்மை  மறைந்துவிடும். முக்கியமாக  நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய  விஷயங்கள்  என்னவெனில்  நாம் தான்  குழந்தைகளுக்கு முதலாவது  ஆசிரியர்  நம்மை பார்த்துதான்  கற்றுக்கொள்வார்கள்  எனவே அவர்கள்முன்  கவனமாக  இருக்க வேண்டும் .நாம் எவ்வாறு ஒரு விஷத்தை  செய்கிறோம் என பார்த்து அதையே  கற்றுக்கொள்கின்றனர்.

இதே போல் தான் குழந்தைகள் வெளிச்சூழலிலும் கற்றுக் கொள்வார்கள். ஆனால் குழந்தைகள் என்பதால் புதிய சூழலுக்கு பழக அவகாசம் எடுக்கும். சில நேரங்களில் பெற்றொர் நமக்கு தர்மசங்கட நிலையும் ஏற்படலாம். குழந்தைகளை புதிய சூழலுக்கு அழைத்து செல்லும் போது எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருப்பது அவசியம்.

செய்முறை வழியாக கற்றுத்தருதல்

ஒரு நாள் நானும்  என் மகளும்  பார்க்  சென்றிருந்தோம். அவள் விளையாடாமல்  வேடிக்கை  பார்த்துக்கொண்டே  இருந்தால்  நான் கேட்டதற்கு, மற்றவர்கள்  விளையாடிக்கொண்டு  இருக்கின்றார்களே  நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. வீட்டிற்கு கிளம்பும் வரை நானும் அவளோடு விளையாடினேன். மேலும் அந்த  இடத்தில் மற்ற குழந்தைகளோடு எப்படி இணைந்து விட்டுக்கொடுத்து  விளையாடவேண்டும் என்பதையும் கற்று கொடுத்தேன். இன்றுவரை  அதே பழக்கத்தை  கடைபிடித்து   வருகிறாள்

முன்கூட்டியே தயார்படுத்துவது

எப்போதுமே குழந்தைகளை புதிய சூழலுக்கு அழைத்து செல்லும் போது அந்த இடத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று நமக்கு தெரியாது. அதனால் வீட்டிலேயே இதற்கு அவர்களை தயார்படுத்தலாம். இதை கேம் மாதிரி உருவாக்கி உதாரத்திற்கு ஷாப்பிங் அல்லது உறவினர் வீடு என்று வைத்துக் கொள்வோம். கடைக்கு சென்று ஷாப்பிங் செய்யும் போது எபப்டி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று நாம் நடித்துக் காட்டலாம். இதன் மூலம் அந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி அரிய ஒரு வாய்ப்பாக இருக்கும்.

முன்மாதிரியாக திகழ்வது 

ஒரு முறை சூப்பர் மார்க்கெட்  சென்ற  போது என் மகளும்  வந்திருந்தாள், அப்போது ஒரு அம்மா பொருள் எடுத்துக் கொண்டிருக்கும் போது கீழே  விழுந்துவிட்டது. அதை அவர் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். இதை என் மகள் பார்த்துக் கொண்டே இருந்தால். உடனே அதை நான் எடுத்து இருந்த இடத்திலேயே  வைத்தேன் . இதையும் அவள் கவனித்தாள். அப்போது  நான் எடுக்கும் போது பொருள் கீழே விழுந்தது. உடனே என் மகள் ஓடி வந்து பொருள் இருந்த இடத்திலெயே எடுத்து வைத்தாள். அதனால் ஒவ்வொரு இடத்திலும் பெற்றோரகள் எப்படி நடந்து கொள்கிறார்கள், அங்கு வருபவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை குழந்தைகள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். சில பண்புகளை, நடத்தைகளை அவர்கள் இயல்பாக கற்றுக் கொள்ள இது போன்ற சமயம் வாய்ப்பாக இருக்கும்.

பயத்தை போக்குங்கள்

குழந்தைகளை புதிய சூழலுக்கு அழைத்து செல்லும் போது அந்த சூழல் சில அசொளகரியத்தை கொடுக்கலாம். அதனால் அங்கிருந்து கிளம்ப சொல்லி அடம் பிடிக்கலாம். குழந்தைகள் கூறியவுடன் கிளம்பாதீர்கள். முதலில் அந்த இடத்தில் எந்த விஷயம் பிடிக்கவில்லை அல்லது எது பயமுறுத்தும்படி இருக்கிறது அல்லது வேறு நபர்களின் நடவடிக்கை பயமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சில நேரங்களில் பசி, தூக்கம் அல்லது உடலில் வேறு தொந்தரவுகள் இருந்தாலும் குழந்தைகள் அழுவார்கள். அந்த தேவையை தீர்த்துவிட்டால் சூழலுக்கு பழகிவிடுவார்கள். அப்படியே தொடர்ந்து அடம் பிடித்து அழுதால் சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு வேறு ஏதாவது காட்டி திசைத்திருப்புங்கள். அல்லது மறுபடியும் அதே இடத்திற்கு வேறொரு நாள் அழைத்து சென்று பாருங்கள். வித்தியாசத்தை பார்க்கலாம். 

குழந்தைகளின் உடல்மொழியை புரிந்து கொள்ளுங்கள்

குழந்தைகளுக்கு தங்களுக்குள் ஏற்படும் பயத்தை அல்லது அசொகரியத்தை தெளிவாக கூற இயலாது. அதனால் அவர்களை புதிய சூழலுக்கு அழைத்து சென்ற பின் அவர்களை தொடர்ந்து கவனியுங்கள். அவர்களின் நடத்தை எப்படி இருக்கிறது. எவ்வாரு உணர்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடல்மொழி மூலம் அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். புதிய சூழலில் சில குழந்தைகள் அமைதியாக இருப்பார்கள், சில குழந்தைகள் குறும்புத்தனம் அதிகம் செய்வார்கள். அதற்காக அந்த இடத்தில் அவர்கலிடம் கத்துவது, அடிப்பது, பயமுறுத்துவது போன்ற செயல்களை தவிர்த்து அவர்களை அமைதியான முறையில் கையாளுங்கள். வீட்டிற்கு வந்து அவர்கள் நடந்து கொண்ட விதத்தை சுட்டிக்காட்டி ஏன் தவறு, எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், இப்படி நடந்து கொள்வதால் அவர்களுக்கு என்ன பலன் போன்ற விஷயங்களை அன்பாக எடுத்துக் கூறுங்கள். 

தைரியத்தை வளர்ப்பது

நான் என் மகளை  புதிய ஸ்கூலில்  சேர்க்க  விரும்பி அதற்கான  வேலைகளை செய்தேன்  அப்பள்ளியில் நுழைவு தேர்வு  இருந்தது. அவளை  ஒரு வாரத்திற்கு  முன்னதாகவே   தயார்  செய்து இப்படிதான் கேள்விகள் இருக்கும்  நீ இவ்வாறு  எழுதவேண்டும்  , பயப்படாமல்  இருக்கனும், ஆசிரியர்கள்   அன்பானவர்கள்  என்று  கூறினேன். தேர்வு நாளும்  வந்தது  அவள் தைரியமாக  இருந்தால் ஆனால் நான் பயந்தேன். அது தவறு என்று நிரூபிக்கும்  வகையில் என் மகள் அவளுக்கு அருகில் இருந்த  பெண்ணிற்கு அவள் ஆறுதல் கூறினால் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  

மரியாதையுடன்  நடக்க கற்றுக் கொடுப்பது

 புதிய இடங்களுக்கு  செல்லும்  போது மரியாதையுடனும்  அமைதியாகவும்  இருக்க கற்றுக் கொடுக்கவேண்டும்   உதாரணமாக  மருத்துவமனைக்கு  ஒருவரை  பார்க்க  சென்றிருந்தபோது   அந்த சூழலில்  அமைதியாக  இருக்கவேண்டும் என்று கூறினேன் ஏன் என்று வினவினாள்  இங்கே  உடல்  நிலை  சரியில்லாமல்  மருந்து  சாப்பிட்டு  தூங்கிக்கொண்டு  இருப்பார்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறினேன். குழந்தைகளை மிரட்டி, பயமுறுத்தி புதிய சூழலுக்கு அடங்கி செல்ல வைப்பது என்பது சரியான அணுகுமுறையல்ல. நாளை அதே சூழலுக்கு அவர்கள் தனியாக செல்லும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டால் மட்டுமே அவர்கள் தைரியமாக எதிர்கொள்வார்கள்.

 

  • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Oct 31, 2020

மிகவும் அருமையான பதிவு. இன்றைய காலகட்டத்தில் நவீன பெற்றோர்கள் தன் குழந்தைகளை வெளிப்புற சூழலுக்கு adopt பண்ண ரொம்பவே பயபடாரங்க. காரணம் polution, strange people nu reason சொல்றாங்க. இதனால் குழந்தைகள் வெளி உலகமே தெரியாம வளருரங்க. and attitude-a நிறைய விஷயங்கள் miss பண்ணுறாங்க என்பதுதான் உண்மை.

  • Reply
  • அறிக்கை
  • Reply
  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}