• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல்

பரிட்சைக்கு தயாராவது எப்படி ? குறுகிய காலத்தில் திறம்பட படிக்கும் உத்திகள்

Bharathi
7 முதல் 11 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Feb 04, 2022

பள்ளி திறந்தாச்சு.அடுத்ததாக பரீட்சைக்கு தயாராக வேண்டியதுதான். எல்லா பிள்ளைகளும் ஒரே மாதிரி பரிட்சையை அணுகுறதில்ல. சிலருக்கு பரீட்சை என்றாலே பயம். அதுவும் இவ்வளவு நாளாக வீட்டில் இருந்தே தேர்வு நடந்தது. இனி பள்ளிகளில் தேர்வு நடைபெற உள்ளது. எப்படி பரீட்சைக்கு தயாராவது என்பதில் நிறைய சவால்கள் இருக்கும். குறிப்பாக, குறுகிய காலத்தில் எப்படி திறம்பட படிக்கலாம் என்பதற்கான உத்திகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பரீட்சைக்கு எவ்வாறு படிப்பது?

எப்போதும் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. கொஞ்சம் நேரம் படித்தாலும் நன்றாக புரிந்து அடுத்து எப்போது கேட்டாலும் சொல்கிற அளவுக்கு படிக்க வேண்டும்.

 • மறக்கும் என்று நினைத்தால் அதை கூடுதல் கவனத்துடன் திரும்ப திரும்ப படிக்க வேண்டும்.
 • அதிகாலையில் எழுந்து படிப்பது உத்தமம்.
 • படிப்பதை சிறு சிறு குறிப்புகளாக எழுதிக் கொண்டே படிக்க வேண்டும். அப்போது தான் தேர்வின் போது திருப்புதல் நேரத்தில் எளிதாக இருக்கும்.
 • கணிதம் என்றாலே நிறைய பேருக்கு பதட்டம். கவனக்குறைவாக தவறாக செய்து விட்டேன் என்று மாணவர்கள் கூறுவார்கள். கணிதம் பொறுத்த வரை போட்டு பார்ப்பதே நல்லது. ஃபார்முலா எழுதி பார்த்து மனப்பாடம் செய்ய வேண்டும். அப்போது தான் நினைவில் இருக்கும்.
 • படிக்கும் போது உற்சாகத்துடன் படிக்க அமர வேண்டும்.
 • ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி ஒப்பிட்டுப் படிப்பதை வழக்கமாக்குங்கள் . மறதியை விரட்டும் அற்புத டெக்னிக் இது.
 • எந்தெந்தக் கேள்விகள் .. எந்தெந்த மதிப்பெண்களில் கேட்கப்படும் என்பதை அனுமானிப்பதற்கு , மாதிரி வினாத்தாள்கள் பெரிதும் உதவும் . ஐந்து ஆண்டுகள் வரையிலான வினாத்தாள்களை வைத்துப் பயிற்சி எடுங்கள் 
 • பள்ளிகளில் வைக்கும் சிறு வகுப்பு தேர்வினை சின்சியராக படித்து எழுதுங்கள்.
 • ஸ்டடி ஹாலிடேஸ் இல் பார்த்து கொள்ளலாம் என நினைத்து நாட்களை வீணாக்காமல் படிக்க வேண்டும்.
 • தேர்விற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் படித்தால் மறு நாள் தேர்வு அறையில் மிகவும் களைப்பாக தூக்கமாக வரும். அதனால் முந்தைய நாள் இரவில் அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும்.
 • தேர்விற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் மறக்காமல் எடுத்து வைத்து விட வேண்டும்.

தேர்வின் போது பின்பற்ற வேண்டியது

 • தேர்வு அறைக்கு அரை மணி நேரம் முன்னதாக சென்று விட வேண்டும்.
 • முதலில் ஹால் டிக்கெட் எடுத்து வைக்கவும். பின்னர் பரீட்சைக்கு தேவையான அனைத்து பொருட்களும் எடுத்து வைத்து ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.
 • தேர்வு தாளில் உள்ள அனைத்து வினாக்களையும் வாசித்து எழுத ஆரம்பிக்க வேண்டும்.
 • தெரியாத வினாக்களை இறுதியில் எழுதவும்.
 • கையெழுத்து மிகத் தெளிவாக இருந்லாலே மதிப்பெண் எடுக்க வாய்ப்பு அதிகம்
 • பத்து நிமிடத்திற்கு முன்பு எழுதி முடிக்க முயற்சி செய்யுங்கள்.
 • எழுதியது அனைத்தும் சரியாக உள்ளதா என ஒரு முறைக்கு இருமுறை சரி பார்க்கவும்.
 • பக்க எண்கள் சரியாக உள்ளதா கேள்வி எண் சரியாக உள்ளதா என அனைத்தையும் சரிப்பார்க்க வேண்டும்.
 • தன்னம்பிக்கை உடன் எழுத வேண்டும்.
 • தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பெற்றோரின் உதவி

பெற்றோர்கள் குழந்தைகளை அது படிச்சாச்சா இது படிச்சிட்டியா என்று கேள்வி கேட்டு பயம் காட்ட வேண்டாம். நீங்கள் இந்த 8 வழிகள் மூலம் உதவலாம்..

1. நீங்கள் ஒரு பிரகாசமான மாணவர், இதை நீங்கள் சொல்லலாம் - இதை உங்கள் பிள்ளைக்கு மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். உங்கள் பிள்ளை மீது நீங்கள் நம்பிக்கையை காட்டும் போது, ​​உங்கள் பிள்ளை தானாகவே அதிக நம்பிக்கையாக உணர்வார்கள்.

2. இது அற்புதம்நீ அதை எப்படி செய்தாய்? - நாள் / வாரம் முழுவதும் உங்கள் குழந்தையின் சிறிய சாதனைகளை கவனித்து, ஒரு கனம் இந்த செயல்களுக்காக அவர்களை பாராட்டுங்கள். ஒரு குறிப்பிட்ட முடிவை அவர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பது பற்றி அவர்களிடம் கேட்பதன் மூலம் அதை மேலும் சிறப்பாக்குங்கள். உங்கள் ஆர்வத்தைக் காட்டி, உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

3.வெற்றியை உனதாக்கிக் கொள் - கடினமாக உழைத்தால், அது உங்களிடம் வரும் - இது ஒரு ஆக்கப்பூர்வமான அறிக்கை மட்டுமல்ல; இது உங்கள் குழந்தை எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒரு வாழ்க்கை மந்திரமாகும், அவர்கள் அதைக் கடைப்பிடித்தால், அது நிச்சயமாக உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

4. தேர்வுகள் வாழ்க்கையின் முடிவு அல்ல - மீண்டும், மிக முக்கியமான செய்தி! பெற்றோர்களாகிய நீங்களும் இதை உங்களிடமே சொல்லி் கொள்ள வேண்டும்; நீங்கள் சொல்வதை, நீங்கள் கடைப்பிடிக்கவும். உண்மை என்னவென்றால், தேர்வுகள் வாழ்க்கையின் முடிவு அல்ல. சில நேரங்களில் ஒரு குழந்தை 'வாழ்க்கையை விட பெரியதான’ தேர்வுகளுக்கான இந்த அணுகுமுறையால் மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதால் அவர்களுக்கு படிப்பின் மேல் வெறுப்பு உண்டாகிறது.

5. நீங்கள் சில பாடங்களில் நன்றாக இல்லாவிட்டால் கவலைப்பட வேண்டாம் - எல்லாவற்றிலும் நீங்கள் நன்றாக இருக்க முடியாது - அது உண்மை, இல்லையா? சில குழந்தைகள் கணிதத்துடனும், சிலர் வரலாற்றுடனும், சிலர் வேதியியலுடனும் போராடுகிறார்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தைக்கும் அவர்களுடைய பலங்களும் பலவீனங்களும் உள்ளன. எனவே பலங்களில் கவனம் செலுத்தும்படி, பலவீனங்களை பொறுமையாக தேற்றும் படி சொல்லுங்கள்.

6. உங்களால் முடிந்ததை செய்து, மற்றதை மறந்துவிடுங்கள் - தேர்வு நாளில், ‘நன்றாக எழுத வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்துங்கள். அவர்களுடைய சிறந்ததை செய்ய நீங்கள் அவர்களை ஊக்குவிக்கும்போது, ​​தேவையற்ற அழுத்தத்தையும் நீங்கள் குறைக்கிறீர்கள்.

7. பயப்படவேண்டாம் தோல்வியே வெற்றிக்கு முதல் படி - நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம் ‘நாம் பயப்படுகிற பல விஷயங்கள் ஒருபோதும் நிறைவேறாது’ என்று - இந்த எண்ணத்தை உங்கள் குழந்தையின் எண்ணத்தில் புகுத்த வேண்டும். தோல்வியின் நன்மைகளை உங்கள் பிள்ளைக்கு் தெரிவிப்பதன் மூலம் ‘பயம்’ என்ற வார்த்தையிலிருந்து அச்சத்தை வெளியேற்றுங்கள் - தவறுகளிலிருந்து அவர்கள் எப்படி கற்றுக்கொள்ள முடியும்; இது நம் வாழ்க்கையில் எவ்வாறு மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொள்ள வைக்கிறது என்று விளக்குங்கள்.

8. நான் உன்னை நேசிக்கிறேன் ஒருபோதும் குறையாது- மூன்று மந்திர வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நல் இரவு என்று கூறும் போது அது உங்கள் குழந்தைக்கு (புன்னகையுடன்) சொல்லும் கடைசி விஷயமாக இருக்கட்டும். இந்த வார்த்தைகள் உங்கள் பிள்ளைக்கு அமைதியான மற்றும் உறுதியளிக்கும் உணர்வை வேறு வார்த்தைகளால் கொண்டு வரமுடியாது!

சத்தான உணவுகளை கொடுங்கள்

 • எண்ணெய் பலகாரங்கள் கடினமான உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்க வேண்டாம்.
 •  நிறைய பழங்கள், சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும்.
 • பாதாம், போன்ற கொட்டைகள் கொடுக்கலாம்.

ஊக்கப்படுத்தும் வழிகள்

அவர்களை உற்சாகப்படுத்துங்கள். என்கரேஜ் பண்ண வேண்டும். நேர்மறை கருத்துகளை கூறுங்கள். இது எல்லாம் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}