• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

ஆன்லைன் கல்வி: பாலியல் தொல்லைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழிகள்

Radha Shri
11 முதல் 16 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 29, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

பள்ளிகளில் மாணவிகள் தொடர்ந்து பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதை நாம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். ஆனால் ஆன்லைன் வகுப்புகளிலும் இது நடக்கும் என்பது தான் பெற்றோர்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாகியது. கடந்த சில தினங்களாக அதிகம் பேசக்கூடிய பிரச்சனைகளாக சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவ மாணவிககளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் போது அரைகுறை ஆடை அணிந்தது, மற்றும் மாணவிகளுக்கு ஆபாச SMS அனுப்பியது, ஆபாச இணைய தளங்களின் லிங் அனுப்புவதாகவும் வந்த புகார்களை அடுத்து ஆசிரியரை கைது செய்துள்ளார்கள்.

 

இதைத் தொடர்ந்து அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் 11, 12ஆம் வகுப்புகளுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஆனந்த் மீது முன்னால் பள்ளி மாணவி புகார் தெரிவித்துள்ளார். அவர் மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஆசிரியர் ஆனந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முதலில் இந்த பிரச்சனையை வெளியில் கொண்டு வந்த மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு பாராட்டுகளை கூற வேண்டும். இப்போதாவது வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான செய்திகளை தொடர்ந்து நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம்.

பொறுப்புள்ள இடத்தில் இருக்கும் ஆசிரியர்களே இது போல குற்றம் செய்யும் போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன செய்வது? பாலியல் வன்கொடுமையிலிருந்து பிள்ளைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் ? ஆன்லைன் கல்வியில் என்னென்ன நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்? பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நலன் காக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கான பல்வேறு துறையிலுள்ள  நிபுணர்களின் பதில்களைப் இப்பதிவில் பார்க்கலாம்.

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகளில் பிள்ளைகள் பாடம் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள், மொபைல் போனில் நண்பர்களிடம் பாடம் சம்பந்தமாக சந்தேகங்கள் கேட்கிறார்கள் என்று தான் பெற்றோகள் நினைத்துக் கொண்டு அதிகம் அதில் தலையிடுவதில்லை. ஆனால் பிள்ளைகள் ஆன்லைன் வழியாகவும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

இதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பிள்ளைகள் நிறைய பிரச்சனைகளில் விழிப்புணர்வு இல்லாமலேயே சிக்கிக் கொள்கிறார்கள். இது தொடர்பான பயம், பதட்டம் பிள்ளைகளிடம் நிறையவே உள்ளது. அதாவது யாரிடம் சொல்வது, சொன்னால் என்ன நடக்கும்? பெற்றோர் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள், நமக்கோ, நமது குடும்பத்துக்கோ கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று பல கேள்விகள், குழப்பங்கள் அவர்களுக்கு தோன்றும்.

பாலியல் பிரச்சனகளிலிருந்து குழந்தைகளை நாம் எப்படி பாதுகாப்பது? மற்றும் பெற்றோர் எபப்டி உதவலாம் என்பது தொடர்பான ஆலோசனைகளை கூறுகிறார் உளவியல் நிபுணர் டாக்டர்.நப்பின்னை சேரன்

 

பாலியல் பிரச்சனைகள் தொடர்ந்து பள்ளிகள்ல நடப்பதை நாம் கேள்விப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் இந்த  பிரச்சனைகளை மாணவர்களோ அல்லது பெற்றோர்களோ பள்ளியில் பேசுவதற்கென்று கமிட்டி இருக்கிறதா? ஏன் இந்த கேள்வி என்றால் குழந்தைகள் வீட்டிற்கு அடுத்தப்படியாக பள்ளியில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். வீட்டுக்குள் சொல்ல முடியாத விஷயங்களை குழந்தைகள் பள்ளியில் பேசும் வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்.

பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொள்வது அவசியம்

இதில் இரண்டு வகையான மனநிலை குழந்தைகளுக்கு ஏற்படும். ஒன்று இதை எங்கு சொல்வது? அப்படியே சொன்னால் என்ன ஆயிடும் என்கிற பயம்? எப்போதுமே பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் ஒரு மிரட்டல் வைப்பார்கள். நீ இதை செய்தால் உங்க அம்மா அப்பாவை ஏதாவது செய்துவிடுவேன் அல்லது உன்னை ஏதாவது செய்துவிடுவேன்? நீ பள்ளியில சரியா படிக்கிறதில்லை, ஒழுக்கமாக இருப்பதில்லை என சொல்லிவிடுவேன் போன்ற மாதிரியான பயமுறுத்தல்கள் வைப்பார்கள்.

மேலும் பெற்றோருக்கு நெருங்கியவர்களாக இருந்தால் குழந்தையின் மீது புகார்களை தொடர்ந்து கூறி குடும்பத்துக்குள்ளே அல்லது பள்ளியில் ஒரு அவப்பெயர் உருவாக்குவார்கள். நாளை இந்த குழந்தை தன் மீது ஏதாவது தவறு சொன்னால் மற்றவர்கள் நம்பாத அளவுக்கு முன்னதாகவே பேசி குழந்தையின் மீது நம்பிக்கையின்மையை பெற்றோருக்கு உருவாக்குவது. இது போல் நடப்பதால் உண்மை வெளியில் தெரியாமல் போகின்றது.

பள்ளியில் பிள்ளைகள் பாலியல் பிரச்சனைகளை வெளிப்படையாக பேச கமிட்டி அமைக்க வேண்டும்

 • பள்ளிகளில் மேனேஜ்மெண்ட் வரைக்கும் இந்த மாதிரி பாலியல் பிரச்சனைகள் கொண்டு செல்லும் வகையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இதே போல் மேனேஜ்மெண்டுக்கும், மாணவர்களுக்கும் இடையில் பேசக்கூடிய அதாவது உளவியல் ரீதியாக இந்த பிரச்சனையை கையாளக்கூடிய உளவியல் நிபுணர் இருக்க வேண்டும்,
 • குழந்தையோட பாதிப்பையும் மிகைப்படுத்தாமல், குழந்தைக்கு ஆறுதல், நம்பிக்கை கொடுப்பவராகவும் அதே நேரத்தில் தவறு செய்தவர்களுக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்கும் ஒரு ஆளுமையாகவும் ஒரு நபர் கமிட்டியில் இருக்க வேண்டும்.
 • பாதிக்கப்பட்ட பிள்ளைகளிடம் இந்த பிரச்சனையை பற்றி பேசுவதற்கும், இந்த மாதிரி பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி முதலில் அவர்களுக்குள் இருக்கும் பதட்டத்தை குறைக்க வேண்டும்.

பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகம், உளவியல் நிபுணர் இவர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் மட்டுமே குற்றம் செய்பவர்களை அடையாளம் காணவும், சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கவும் முடியும்.

 

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே நல்லுறவுக்கான வழிகள்

பெற்றோர் பிள்ளைகளுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியை குறைத்து நெருக்கத்தை அதிகப்படுத்த என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும்.

 • பதின்பருவத்தில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. பிள்ளைகள் பெற்றோரிடம் வெளிப்படையாக பேசும் சூழல் எப்போதும் வீட்டில் இருக்க வேண்டும். இதனால் தனக்கு நேரும் பாலியல் தொல்லைகளை ஆரம்ப நிலையிலேயே அவர்களால் கூற முடியும். இந்த விஷயத்தில் பெற்றோரகள் பிள்ளைகளிடம் படிப்பு சம்பந்தமான விஷயங்கள் மட்டுமில்லாமல் பிள்ளைகளின் மற்ற உணர்ச்சிரீதியான விஷயங்களை பற்றியும் அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும்.
 • மொபைல் போன் பயன்பாடு பற்றி முதலில் பெற்றோர் அறிந்து கொண்டு பிள்ளைகளுக்கும் அதை பற்றி தெளிவாக கூற வேண்டும். இன்று ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறுவதால் பிள்ளைகள் அதிக நேரம் மொபைல் போனுடன் செலவிடுகிறார்கள். அதனால் பெற்றோர் தவறாமல் மானிட்டர் செய்ய வேண்டும்.
 • சமூக வலைதளங்கள் மூலமாக பிள்ளைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் வரும். அதனால் பிள்ளைகள் படிப்பு விஷயமாக பார்த்தாலும், பிள்ளைகள் என்னென்ன ஆப்ஸ் பயன்படுத்துகிறார்கள், சமூக வலைதளங்களில் என்னென்ன தகவல்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை பெற்றோர் மானிட்டர் செய்வது அவசியம்.
 • ஆன்லைன் வகுப்புகளில் பிள்ளைகள் அதிக நேரம் மொபைல் போனுடன் இருக்கிறார்கள். ஆசிரியர்களிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று பெற்றோர் தைரியமாக இருந்தார்கள். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு ஆசிரியரிடமிருந்தும் இந்த மாதிரியான பாலியல் பிராச்சனைகள் வருகிறது என்பதை பெற்றோர் உணர இது சரியான நேரம். இதன் பிறகு பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளில் இருந்தாலும் பெற்றோர் மானிட்டர் செய்ய வேண்டும்.
 • பிள்ளைகள் செய்யும் சிறு சிறு தவறையும், ஒழுங்கற்ற நடத்தையையும் சொல்லி அவர்களை முன்கூட்டியே தீர்மானிக்காமல். அவர்கள் கண்ணோட்டத்திலிருந்து அந்த பிரச்சனையை அல்லது தவறை அணுகுவதன் மூலம் விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். தவறையும் பாஸிட்டிவ்வாக அவர்கள்  திருத்திக் கொள்ள உதவ முடியும்.

பிள்ளைகள் சில நேரங்களில் என்ன நினைக்கிறார்கள் பெற்றோருக்கு என் மீது  நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? நான் என்ன  சொன்னாலும் தவறு என் மீது இருக்கிறது என்று நான் சொல்வதை கவனிக்கமாட்டார்களா? என்னை நம்பிகிறார்களா? போன்ற பல கேள்விகள் இருக்கும்.  இந்த நம்பிக்கையை பெற்றோர் மட்டுமே உருவாக்க முடியும். பிள்ளைகளிடம் உனக்கு என்ன நடந்தாலும் நான் உனக்கு துணையாக நிற்பேன், நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற நம்பிக்கையான வார்த்தை பிள்ளைகளுக்கு மிகப்பெரிய ஆதரவாக உணர்வார்கள்.

பிள்ளைகளிடம் பாஸிட்டிவ்வான அணுகுமுறை

பிள்ளைகள் இந்த மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது அவர்கள் முதலில் பெற்றோரின் ஆதரவைத்தான் தேடுவார்கள். நீங்கள் கூறிய இந்த நம்பிக்கையான வார்த்தைகள் தான் உங்களிடத்தில் அவர்களை வெளிப்படையாக பேச ஊக்கப்படுத்தும்.

 • குழந்தை வளர்ப்பில் பெற்றோருடைய நேர்மறையான அணுகுமுறை பிள்ளைகளுக்கு மனதளவில் பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. பிள்ளைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளையும் பூதாகாரமாக சுட்டிக்காட்டாமல், நீ தவறு செய்தாலும் உன் மீது எனக்கு இருக்கும் பிரியம் குறையாது. உன் மீது தவறு இருந்தாலும் நீ திருத்திக் கொள்ள நான் உனக்கு உதவுகிறேன். தையரியாக என்ன நடந்தாலும் என்னிடம் சொல் என்ற நம்பிக்கையை பிள்ளைகளிடம் சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்க்க வேண்டும்.
 • ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் மீது தவறுகள் கூறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஆடை, சிரித்து பேசுவது, தொட்டு பேசுவது என அவர்கள் மீது எளிதாக குற்றத்தை திணித்துவிட முடியும். இந்த இடத்தில் பெற்றோரின் ஆதரவு மிக முக்கியம். தங்கள் பெண் பிள்ளைகள் மீது நம்பிக்கை இருப்பதை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.
 • மேலும் அவர்கள் வெளிப்படையாக பேசவதற்கான சூழல் வீட்டில் எப்போதும் இருப்பது அவசியம். இந்த மாதிரி பாலியல் பிரச்சனைகளை பெண் பிள்ளைகள் ஆரம்ப நிலையிலேயே பெற்றோரிடம் சொல்ல முயற்சி செய்வார்கள். ஆனால் அதை பெற்றோர் சரியாக கையாள்வார்கள் என்ற நம்பகத்தன்மை இருந்தால்  மட்டுமே தொடர்ந்து பேசுவார்கள்.

ஆன்லைன் வழியாக பிள்ளைகளுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகளை எப்படி கையாள்வது? எப்படி பாதுகாப்பது தொடர்பாக பேசுகிறார்  துப்பறிவாளர் திரு.மாலதி. இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் துப்பறிவாளர்.

ஓவ்வொரு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களின் பிரச்சனைகளை பேசக்கூடிய கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.  பள்ளியில் மட்டுமில்லாது வெளியிலும் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை அந்த கமிட்டியில் தெரிவிப்பதற்கான வசதிகள் இருக்க வேண்டும். அலுவலகங்களில் நடக்கும் பாலியல் பிரச்சனைகளை தடுப்பதற்காக உருவாக்கிய POSH Act சில கல்லூரிகளிலும் இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்காக தனியாக ஒரு கமிட்டி அமைப்படுவது சிறந்தது.

 • கமிட்டியில் கட்டாயமாக பள்ளி நிர்வாகத்தோடு சேர்த்து அரசு சார்ப்பாக உளவியல் நிபுணரோ, கல்வித்துறை சார்பாகவோ ஆளுமை யாராவது ஒருவர் அதில் பங்கேற்க வேண்டும். மற்றும் குழந்தைகளின் பாலியல் பிரச்சனைகளை கையாளும் NGO- வில் இருந்து நிபுணர்கள், சமூக ஆர்வலர் என பல ஆளுமைகள் கொண்ட குழு அமைக்கப்பட  வேண்டும்.
 • எதற்காக இந்த கமிட்டியில் இவர்கள் தேவை என்றால், எப்போதுமே முதலில் இது போல் ஒரு குற்றம் நடந்தால் அதை மூடி மறைக்கவே எல்லா இடத்திலிருந்தும் முயற்சி நடக்கும். குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாதபடி சூழல் இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனைகள் சரியாக கையாளப்படும்.

குறிப்பாக, இந்த கமிட்டி எப்போதும் செயல்பாட்டில் இருக்கிறதா? என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ? என அரசு சார்ப்பாக மானிட்டர் செய்ய வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளில் என்னென்ன பாதுகாப்பு கொண்டுவர வேண்டும்?

 • ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போது இந்த வகுப்புகளை மானிட்டர் அதாவது எப்போது வேண்டுமானாலும் மானிட்டர் நடக்கும்விதமாக பள்ளி நிர்வாகத்தில் இருந்து நியமிக்கப்பட வேண்டும். அவர் வீடியோல் கால் மூலமாக வந்து வகுப்பை பார்வையிட்டு செல்லலாம். அப்போது தான் தங்களை நிர்வாகத்திலிருந்து ஒருவர் கண்காணித்து கொண்டு இருக்கிறார் என்ற உணர்வு ஆசிரியர்களுக்குள் இருக்கும். சில கல்லூரிகளில் இந்த மாதிரி நடவடிக்கைகளை ஏற்கனவே செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் கட்டாயம் ஆக்கப்படலாம்.
 • ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து அவர்களின் வகுப்பில் இருந்து நடத்தலாம் என்ற மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம். இங்கும் திடீரென்று கண்காணிக்க பள்ளி நிர்வாகத்தில் இருந்து யார் வேண்டுமானலும் வந்து பார்க்கலாம் என்ற விதமான விதிமுறைகள் இருக்க வேண்டும்.
 • ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மாணவ/மாணவிகளுக்கான புகார் மின்னஞ்சல் உருவாக்கலாம். அரசு அதிகாரிகளுக்கும் இணைப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் ஹெல்ப்லைன் நம்பர் மூலமாகவும் மாணவர்கள் தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.

பாலியல் பிரச்சனைகள் நிகழும் போது எங்கெல்லாம் தெரிவிக்கலாம்?

பெரும்பாலும் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகள் உடனே வெளியே வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. பிள்ளையின் எதிர்காலம், குடும்பத்தின் கொளரவம், மிரட்டல், அதிகாரம் இல்லை. மீடியா பயம் என பல காரணங்கள் உண்டு. இதுவே குற்றம் செய்பவர்களுக்கும் சாதகமாக அமைந்துவிடுகிறது. பெற்றோர் எங்கெல்லாம் இதை தெரியப்படுத்தலாம்.

 • துப்பறியும் ஏஜென்ஸிகள் (Detective Agency). காவல் நிலையங்களுக்கு சென்று நேரடியாக புகார் கொடுக்க தயங்குபவர்கள் துப்பறியும் ஏஜென்ஸியை நாடலாம். சில புகார்கள் காவல் நிலையத்திலிருந்தும் வரும். அதே போல் தனியாகவும் இங்கு குற்றங்களை தெரியப்படுத்தலாம்.
 • சமூக வலைதளம் – சமீபத்தில் நடந்த பள்ளி விவகாரம் சமூக வலைதளங்கள் மூலமாக தான் வெளியில் தெரிந்தது. சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தலாம்.
 • NGO அரசு சாரா அமைப்புகள் – குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக துளிர் போன்று பல அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கும் பாலியல் பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.

தமிழக அரசு ஆன்லைன் வகுப்புகளுக்களை முறைப்படுத்தும் வழிமுறைகளை அறிவித்துள்ளது. மேலும் அறிய

 

#OnlineClasses-இல் முறையற்று நடந்து கொள்வோர் மீது #POCSOact பாயும்!

வழிகாட்டுதல்களை வகுத்தளிக்க வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்.

மாணவ - மாணவியர்களுக்காக ஹெல்ப்லைன் எண் அமைத்து, பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தவறிழைப்போர் தப்ப முடியாது! pic.twitter.com/m9v9UhJANZ

— M.K.Stalin (@mkstalin) May 26, 2021

 

 

விசாகா கமிட்டி

விசாகா கமிட்டி மூலம் பள்ளி கல்லூரியில் நடக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கான புகார்களையும் தெரிவிக்க ஏற்படு நடந்து வருகிறது. ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விசாகா குழு அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர் உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். இது தொடர்பான உங்கள் சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்கலாம். நீங்கள் பின்பற்றும் பாதுகாப்பு குறிப்புகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு விரும்புகிறேன். நன்றி

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}