• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர்

குழந்தைகள் செல்போன் எவ்வளவு நேரம் பார்க்கலாம்? - நேரத்தை கட்டுப்படுத்தும் வழிகள்

Radha Shree
3 முதல் 7 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 12, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

என்னுடைய பக்கத்து வீட்டில் அடிக்கடி நடக்கும் அம்மாக்கும், மகனுக்குமான உரையாடல்…​
அம்மா : கார்த்திக், ரொம்ப நேரமா டிவி முன்னாடி உட்காராதே.. டிவியை ஆஃப் பண்ணு..
கார்த்திக் : ஒரே ஒரு கார்டூன் மட்டும் பார்த்துக்கிறேன்மா…ப்ளீஸ்..
வெளியிலையும் விளையாட விடுறதில்ல.. நான் என்ன தான் பண்றது…
அம்மா : மெளனம் தான் பதில்

இதில் கார்த்திக் கேட்டதில் நியாயம் இருக்கிறது. இன்று எல்லா அம்மாக்களுக்குமே குழந்தைகளுக்கான ஒரு நாளை திட்டமிடுவது என்பது பெரிய சவாலாக தான் இருக்கிறது. ஏன்னா குழந்தைங்க டிவி பார்க்க ஆரம்பிச்சா அவ்வளவு சீக்கிரத்தில் அவர்களை எழுப்ப முடியதில்லை. ஏன்னா ஒன்று அவர்கள் சுதந்திரமாக மற்ற செயல்பாடுகளை செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை அல்லது டிவியை விட ஆர்வமுள்ள விளையாட்டுகளைப் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை என்பதே யதார்த்தம்.  

டிவி பார்ப்பதை விட குழந்தைகளுக்கு பிடிப்பது நண்பர்களோடு விளையாடுவது.  நண்பர்களோடு விளையாடும் போது குழந்தைகளை அழைத்துப் பாருங்கள்.. வரவே மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்த செயலை செய்யும்போது நேரம் காலம் பார்க்காம செய்யறதே அவர்களோட இயல்பு.

என் மகளுக்கு 31/2 வயது ஆகிறது. ball கிடைத்தால் போதும் சாப்பாடு தூக்கம் எதுவும் வேண்டாம். இதே போல் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனிப்பட்ட ஆர்வம், விருப்பம் கட்டாயமாக இருக்கும். அதை கண்டுபிடித்துவிட்டாலே இவர்கள் டிவி பார்க்கும் நேரத்தை நாம் எளிதாகக் குறைத்துவிடலாம்.

உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட திரை நேர வரம்புகள்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் வாழ்விலிருந்து முற்றுலுமாக டிவியை நம்மால் அகற்ற முடியாது. ஆனால் ஒரு நாளில் எவ்வளவு நேரம் பார்க்கலாம் என்பதை திட்டமிட உதவும் அளவுகோலை இங்கே அறியலாம்.

2 வயதுக்கு குறைவான குழந்தைகள் - இரண்டு வயதிற்கு குறைவான குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கோ அல்லது பிற மின்னணு ஊடகங்களை (டிவி / டிவிடிகள், கணினி மற்றும் பிற மின்னணு விளையாட்டுகள்) பயன்படுத்தவோ எந்த நேரமும் செலவிடக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

2-5 வயதுடைய குழந்தைகள் -  உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்ப்பது, மற்றும் பிற மின்னணு ஊடகங்களைப் பயன்படுத்துதல் (டிவிடிகள், கணினி மற்றும் பிற மின்னணு விளையாட்டுகள்) ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

5-17 வயதுடைய குழந்தைகள் / இளைஞர்கள் - இடைவிடாத பொழுதுபோக்கு திரை நேரத்தை ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது

ஒரு நாளில் அவர்கள் எவ்வளவு நேரம் டிவி பார்க்க வேண்டும், என்னென்ன நிகழ்ச்சிகள், கார்டூன் பார்க்க வேண்டும் என்பதற்கான வரைமுறை வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் அவர்களை கட்டாயப்படுத்தியோ, கண்டித்தோ அணுகினால் குழந்தைகள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள். அதனால் அதற்கான சில உத்திகளைப் பயன்படுத்துவதே சிறந்தது. என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்…

(இதையும் படிக்க - டாப் 10 ப்ரைன் கேம்ஸ் - உங்கள் குழந்தையின் அறிவுத்திறனை வளர்க்கும் - http://www.parentune.com/parent-blog/10-brain-games-to-activate-cognitive-thinking-in-kids/6288)

டிவி/மொபைல் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும்​ சில வழிகள்

வீட்டிலும்குடும்பத்திலும் மாற்றம் தேவை – டிவி பார்ப்பதற்கென்று நேரத்தை உருவாக்கும் விதி குழந்தைகளுக்கு மட்டுமில்லை அந்த விதி மொத்த குடும்பத்திற்கும் பொருந்தும். அப்போது தான் குழந்தைகளும் விதியைப் பின்பற்றுவார்கள்.

தூங்கும் அறையில் டிவி இருப்பதை தவிர்க்கலாம். எவ்வளவு அடம் பிடித்தாலும் இரவு தூங்கும் முன் டிவி பார்ப்பதை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் கதைகள் கேட்டுக் கொண்டு தூங்குவது, படம் வரைவது என மற்ற பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம். குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் டிவியை வைக்கலாம்.

மாற்று பொழுப்போக்கு ​- டிவியை தவிர மற்ற பொழுப்போக்கிற்கு பழக்கப்படுத்தலாம். அவர்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வைக்கலாம். இது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவாறு சூழலை அமைத்துக் கொடுக்கலாம்.

 1. படம் வரைவது, வண்ணம் தீட்டுவது, ஸ்டிக்கெர் ஒட்டுவது.
 2. கைவினைப் பொருட்கள் செய்வது. அவர்களின் அறையை அலங்கரிக்கும் சின்ன சின்ன கிராஃப்ட்ஸ் வொர்க் செய்யலாம்.
 3. pre-schoolers என்றால் அம்மாக்கள் நெட்வொர்கை உருவாக்கி நேரம் கிடைக்கும் போதெல்லாம் எல்லோரும் ஓரிடத்தில் இணைவது, போன்ற  விஷயங்களை திட்டமிடலாம்.
 4. குழந்தைகள் என்று நாம் பொறுப்புகளை அவர்களிடத்தில் கொடுக்கத் தயங்குகின்றோம். அவர்களின் விளையாட்டு சாமான்களை அடுக்கி வைப்பது, துடைப்பது போன்ற சின்ன  சின்ன வேலைகளை செய்ய வாய்ப்பு கொடுக்கலாம்.
 5. செடி வளர்ப்பது, பராமரிப்பது போன்றவற்றில் ஈடுபட வைக்கலாம்.
 6. கதை புத்தகம் படிக்கலாம், puzzles மற்றும் அவர்களின் வயதிற்கு ஏற்ற விளையாட்டுகளை வாங்கி கொடுக்கலாம்.
 7. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது வெளிச்சூழலில் மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும்.

டிவி பார்க்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள் – உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற நிகழ்ச்சியை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். குறிப்பிட்ட நேரம் மட்டுமே டிவி பார்க்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருங்கள். தினமும் அதே நேரத்தைக் கடைபிடியுங்கள். குழந்தைகள் புத்திசாலிகள் நம்மைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். கொஞ்சம் நேரத்தை தளர்த்திக் கொண்டால் போதும் பிறகு அதையே பிடித்துக் கொள்வார்கள்.

விளையாட்டில் மட்டுமே கவனம் – குழந்தைகள் பொருட்களை வைத்தோ அல்லது வேறு ஏதாவது விளையாடும் போதோ டிவி போடாமல் இருப்பது நல்லது. விளையாட்டில் மட்டுமே முழு கவனம் இருக்கமாறு சூழலை அமைத்துக் கொடுங்கள். விளையாட்டு மூலம் நடக்கும் கற்றலுக்கு டிவி தடையாக இருக்கக் கூடாது.

சாப்பாடு நேரம் டிவிக்கு நோ சொல்லுங்க –என்னுடைய பாட்டியும், அம்மாவும் எனக்கு சோறு ஊட்டிய அனுபவங்களை சொல்வார்கள். கேட்கவே வேடிக்கையாக இருக்கும். குழந்தைகள் அவர்களாகவே  சாப்பிடும் போது அவர்களுக்குள் நிகழ வேண்டிய வளர்ச்சி நடக்கும். உணவை விரும்ப தொடங்குவார்கள். சாப்பாடு நேரம் என்பது இனிமையாக மாறும்.

சாப்பிடும் நேரம் என்பது அவர்கள் மனதில் மோசமான அனுபவமாக பதியக் கூடாது. உடம்பின் மீதோ, தரையிலோ சாப்பாடு சிந்தினால் பராவாயில்லை, அதே போல் அரை மணி நேரம் சாப்பிட்டாலும் விட்டுவிடுங்கள். இது அவர்களுக்கான நேரம், முடிந்தவரையில் இனிமையான அனுபவமாக மாற்ற முயற்சி எடுப்போம்.

இயற்கையோடு இணைய வாய்ப்பு கொடுக்கலாம்– பறவைகள், விலங்குகள், மரங்கள், கடல், அருவி, போன்றவற்றை புத்தகத்திலும் டிவியிலும் பார்த்தால் மட்டும் போதுமா?. அனுபவப்பூர்வமாகப் பார்த்து ரசிக்க வாய்ப்பு கிடைத்தால் தான் அதன் உண்மையான மகத்துவம் அறிய முடியும். முடிந்தவரையில் இயற்கையோடு இணைய வாய்ப்பை உருவாக்கி தரலாம்.

குழந்தைகளோடு விளையாடுவது – இது ஒரு முக்கியமான குறிப்பாக நான் நினைக்கிறேன். அம்மா அப்பா குழந்தைளோடு விளையாடும் போது பல நன்மைகள் கிடைக்கும். குழந்தைகளுக்குள் இருக்கும் அத்தனை அழுத்தமும் குறையும். அடம், பிடிவாதம், எரிச்சல், கோபம் அடையும் குழந்தைகளிடம் இந்த குணம் மாறுவதை நீங்க கண்கூடாக பார்க்கலாம். குழந்தைகளோடு நமக்கு கிடைக்கிற நேரங்கள்ல நிபந்தனைகள், அறிவுறுத்தல்கள் மட்டும் சொல்லாம நிறைய விளையாடினாலே போதும். நாம சொன்ன சொல்லை கேட்டு நடந்து கொள்ள தொடங்குவாங்க.

வெகுமதிகள் (Rewards) – குழந்தைகளை நல்வழிப்படுத்த அல்லது அவங்க நாம் சொல்றதை கேட்க ரிவார்ட்ஸ் ஒரு பெரிய கருவியா செயல்படுது. உங்கள் பிள்ளையின் கடினமான நடத்தையை மாற்ற உதவும். வெகுமதிகள் என்பது ஒரு வேலைக்கான அங்கீகாரம். குழந்தைகள் செய்யும் சின்ன வேலையாகவோ, செயலாகவோ, நடத்தையாகவோ இருக்கும்போது அதற்கு வெகுமதி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு நாம் கவனம் கொடுப்பதாக உணர்வார்கள்.

குழந்தைகள் ஒருமுறை நாம் சொல்வதை கேட்டு டிவியோ, மொபைலோ ஆஃப் பண்ணினால் உடனே அந்த செயலுக்கு நாம் பாராட்ட வேண்டும். கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு பிடித்த வெகுமதியில் ஒன்றை குறைத்துவிடுங்கள். மாறாக திட்டியோ, கத்தியோ ஒன்றும் செய்ய முடியாது. குழந்தைகள் உணர வேண்டுமானால் இது தான் சரியான வழி.

உங்க வீட்டுல நீங்க செய்ற உத்திகள இங்கே பகிர்ந்து கொள்ளவும். இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 3
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Mar 09, 2019

நன்றி

 • Reply
 • அறிக்கை

| May 20, 2019

எனது மகள் 7ஆம் வகுப்பு செல்கிறாள் இன்றும் சிறு குழந்தை போல் அழுது கொண்டே இருக்கிறாள் இதற்கு என்ன செய்யலாம்

 • Reply
 • அறிக்கை

| Jun 26, 2019

phone elama sapda matengra ena seivadhu 4 vayasu agudu

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}