• உள்நுழை
 • |
 • பதிவு
கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

1-3 வயது குழந்தைகளுக்கு பாதுகாப்பான இல்லத்தை எப்படி அமைத்துக் கொடுக்கலாம்?

Radha Shri
1 முதல் 3 வயது

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Aug 02, 2021

1 3
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

பெற்றோர்களே நமக்குக் குழந்தை தவழ ஆரம்பிக்கும் பொழுதே வீட்டில் எதைத் தள்ளி விடுவார்களோ, எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்களோ, இடித்து விடுமோ, குத்தி விடுமோ என்று பலவிதமான அச்சங்கள் வருவதுண்டு. முக்கியமாக 1 முதல் 3 வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்குத் தீக்காயம், மூச்சுத்திணறல், கூர்மையான பொருட்களினால் ஏற்படும் காயங்கள், கட்டில், டேபிள் மற்றும் நாற்காலியின் விளிம்புகளினால் ஏற்படும் காயங்கள், விஷப்பொருட்களால் ஏற்படும் ஆபத்து என வெளியில் உள்ளவர்களை விட வீட்டைச் சுற்றிய ஆபத்துகள் அதிகம் ஏற்படுவதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இதனை நினைத்துப் பயம் கொள்ள வேண்டாம். வீட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இந்த மாதிரி ஆபத்துகளிலிருந்து நம் குழந்தைகளை முன்கூட்டியே பாதுகாக்கலாம். அதனால் சமையலறை, குளியலறை போன்ற இடங்களில் என்னென்ன பாதுகாப்பு தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது. முன்னெச்சரிக்கையே பல ஆபத்துகளிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றும் யோசனைகளையும், நடவடிக்கைகளையும் இப்பதிவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் வீட்டில் ஆபத்து ஏற்படுத்தும் விஷயங்களை இதே போல் பட்டியலிடுங்கள். எனக்குத் தெரிந்த சிலவற்றை கூறுகிறேன்.

 • கதவு, ஜன்னல் போன்றவற்றின் இடுக்குகள், விளிம்புகள்.
 • ஸ்விட்ச் பாக்ஸ், வயர், கேட்ஜெட்ஸ் சார்ஜிங் ப்ளக்
 • விஷப்பொருட்களான பூச்சிக் கொல்லி மருந்துகள், திரவங்கள், மருந்து மாத்திரைகள்.
 • எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ்.
 • குண்டூசி, பொத்தான்கள், பட்டன் பேட்டரி, காசு, காந்தம், ஆணி, பின்னூசி, ஊக்கு போன்ற சிறிய பொருட்கள்.
 • பால்கனி மற்றும் வீட்டு வாசல்.
 • நெருப்பு மற்றும் சூடான பாத்திரங்கள் அல்லது வெண்ணீர் மற்றும் சூடான உணவு.
 • திரைச்சீலைகள், தலையணை மற்றும் பாலிதீன் பைகள்
 • ட்ராயர்ஸ், டேபிள், நாற்காலி மற்றும் கட்டில் ஆகியவற்றின் கூர்மையான விளிம்புகள்.
 • கூர்மையான விளையாட்டுச் சாமான்கள்.
 • தண்ணீர் தொட்டிகள் மற்றும் மூழ்குவதற்கான வாய்ப்புள்ள இடங்கள்.

கதவின் மூலை மற்றும் விளிம்புகளிடமிருந்து பாதுகாக்க:

கதவு மற்றும் ஜன்னல் இடுக்குகளில் குழந்தைகளின் கைவிரல்கள் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. அதனால் வீட்டில் உள்ள எல்லா கதவு மற்றும் ஜன்னலுக்கும் corner & edge guards மற்றும் விண்டோ ஸ்டாப்பர் (Window stopper), டோர் ஸ்டாப்பர் (door stopper) பொருத்திக் கொள்ளுங்கள். இதனால் குழந்தைகள் கதவை இழுக்க முடியாது, இடுக்கில் கை வைத்தாலும் ஆபத்து இல்லை.

மின் உபகரணங்களிடம் கவனம் தேவை:

வீட்டில் குழந்தைகளின் கைக்கு எட்டும் இடத்தில் இருக்கும் அனைத்து ப்ளக்-இன்களையும் ப்ளக்-இன் கவர்ஸ் மூலம் அடைத்து வைத்துக் கொள்ளலாம். மேலும் மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜ் செய்துவிட்டு ஸ்விட்சை அனைக்காமல் அதை அப்படியே விட்டுவிடுவது ஆபத்தானது. அவ்வப்பொது சார்ஜிங் முடிந்தவுடனே அதை அனைத்துவிட வேண்டும். மொத்தத்தில் குழந்தைகள் எளிதாகத் தொடக்கூடிய இடங்களில் மின் உபகரணங்கள் இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு ஆபத்து நேராதவாறு பாதுகாப்பு கருவிகள் கொண்டு அவற்றுக்கு உறையிடுவது சிறந்தது.

கூர்மை – ஜாக்கிரதை

பெரும்பாலும் குழந்தைகளுக்கு கூர்மையான மூலைகள், விளிம்புகளுள்ள டேபிள், நாற்காலி, அலமாறி, ட்ராயர், ட்ரெஸ்ஸிங் டேபிள் போன்றவற்றால் எளிதாகக் காயப்படுகிறார்கள். ஆதலால், கூர்மையான மூலை மற்றும் விளிம்புகளுக்கு உறை போட்டுக் கொள்ளுங்கள். குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவே பிரத்யோகமாக உறைகள் வருகின்றது. மேலும் கத்தி, அரிவாள், அறுகாமனை போன்ற பொருட்கள் எப்போதுமே அவர்கள் அருகில் இருக்கக் கூடாது.அதே போல் கூர்மையான விளிம்புள்ள விளையாட்டு பொருட்களையும் தவிர்த்து விடுங்கள்.

அலமாறிகள் மற்றும்  ட்ராயர்

குழந்தைகள் நடை பழகும் பொழுது அருகில் உள்ளதை பிடித்து எழத் தொடங்குவார்கள். அதனால் அலமாறியின் மீது கடினமான, அதிக எடையுள்ள பொருட்களை உயரத்தில் வைக்காதீர்கள். அதே போல் நாற்காலியை எளிதாகக் கீழே இழுத்து தள்ளுவது, மேலே போட்டுக் கொள்வது போன்றவைகள் நிகழும். கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் ட்ராயர் பயன்பாட்டில் இல்லாத போது பூட்டி வைத்துக் கொள்ளலாம். அதே போல் ட்ராயர் விளிம்புகளையும் பம்ப்பர்களை வைத்து மூடிவிடலாம்.

நச்சுப் பொருட்கள்

வருடந்தோறும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நச்சுப் பொருட்களினால் அதிகமாக பாதிக்கப்படுவதாக தகவல் பதிவாகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகள், நாப்தளீன் பால்ஸ், கிளீனிங் பவுடர் போன்றவற்றை குழந்தைகள் நெருங்காத இடத்தில் வைப்பதே பாதுகாப்பானது. அதே போல் காலாவாதியான மருந்து மாத்திரைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். அழகு சாதன பொருட்களான ஹேர் ஸ்ப்ரே, லோஷன், கிரீம் போன்ற பொருட்களையும் அவர்கள் தொட முடியாத இடத்தில் வைப்பது அவசியம்.

பாதுகாப்பான பாத்ரூம்

தண்ணீர் நிரம்பிய வாலி, டப், கழிப்பறை இவைகளாலும் ஆபத்து நேரலாம். குழந்தைகள் குளிக்கும் போது டப்பில் தனியாக விட்டுவிட்டு செல்வதால் அவர்கள் தண்ணீரில் மூழ்க அதிக வாய்ப்புள்ளது. அதே போல் சுலபமாக அவர்கள் வலுக்கி விழுந்தால் தலையில் தான் காயம் ஏற்படும். அவர்கள் உட்கார்ந்து எழுந்திருக்கும் போது பைப்களினால் காயம் ஏற்படலாம். அதனால் பாத்ரூமில் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நம்முடைய கண் பார்வையிலேயே நடக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தீயிலிருந்து தடுக்கும் வழிகள்

குழந்தைகளைப் பொறுத்தவரையில் நெருப்பு சுட்டால் மட்டுமே தெரியும். வீட்டில் எங்கெல்லாம் நெருப்பால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். குழந்தைகள் எளிதாக நெருங்க முடியாத இடத்தில் கேஸ் அடுப்பு இருக்க வேண்டும். அதே போல் வெண்ணீர், சூடான பாத்திரங்களைத் தரையில் வைக்காதீர்கள். குழந்தையின் அருகில் கற்பூரம், பத்தி ஏற்றுவதை தவிர்த்து விடுங்கள். ஸ்மோக் அலாரம் பொருத்திக் கொள்ளலாம். நெருப்பின் அபாயங்களை பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதால் அவர்கள் தீ விபத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உதவுகின்றது.

எமர்ஜென்ஸியை எதிர்கொள்ள தயாராகுங்கள்

உங்கள் தொலைப்பேசியில் அல்லது டைரியில் அவசர எண்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தை பராமரிப்பவர்களிடமும் அவசர எண்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் குழந்தைகளுக்கு முதலுதவி பெட்டியில் பேண்டேஜ், தீகாய மருந்து, கையுறை, கிருமிநாசினி, ஒட்டும் டேப் ரோல்கள், கத்திரி போன்ற பொருட்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதலுதவிப் பெட்டியில் இருக்கும் மருந்துப் பொருட்களின் காலாவதித் தேதிகளை சோதித்து புதிதாக மாற்றிக் கொள்ளவும்.

சிறு சிறு காயங்களுக்கு கட்டுப்போடுவது, உடம்புகளில் வீக்கங்கள் ஏற்படும்பொழுது எந்தெந்த பேண்டேஜிகள் பயன்படுத்துவது, ரத்தக்கசிவு மற்றும் தொடர்ந்து ரத்தம் வடிதல் போன்றவைகளை எவ்வாறு நிறுத்துவது, அது போன்று, சமையலறையில் ஏற்படும் கத்தி வெட்டுகள், கீரல்கள் போன்றவற்றிற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது ஆகியவை பற்றித் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.

குழந்தைகளின் கண் வழியே வீட்டைப் பாருங்கள்

குழந்தைகளின் கண்ணோட்டத்திலிருந்து வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் பார்ப்பதே பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறந்த வழி. அவர்களை போல் நாமும் தவழ்ந்து, நடந்து, முட்டியிட்டு அந்த இடங்களை பார்க்கும் பொழுது எதையெல்லாம் ஒழுங்குப்படுத்த வேண்டும், எந்தப் பொருளெல்லாம் அவர்கள் எட்டி எடுக்கும் தூரத்தில் இருக்கிறது, எதெல்லாம் அவர்கள் கண்களை கவரும் விதத்தில் இருக்கிறது என நம்மால் கணிக்க முடியும். இது ஒரு நாள் வேலையில்லை.

குழந்தைகள் வளர வளர இதற்கேற்றவாறு வீட்டில் உங்கள் பரிசோதனையை மேம்படுத்திக் கொண்டால் இல்லம் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.

 

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Apr 28, 2019

my son is one 16 month old. now he don't take any food. any idea

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}