• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

குழந்தைகளின் தனித்துவமான உடல்நலப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது?

Parentune Support
0 முதல் 1 வயது

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 17, 2019

உங்கள் குழந்தை ஏதேனும் ஒரு நோய்க்கு ஆளாவதை பார்த்தல், பெற்றோர்களாகிய உங்களுக்கு மன உளைச்சலை (மேலும் பயத்தையும்) ஏற்படுத்துகிறது. எனவே, பெற்றோர்களாகிய நீங்கள் பொதுவான மற்றும் வழக்கத்திற்கு மாறான உபாதைகள் பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருத்தல் அவசியமானது.உதாரணமாக,ரோஸியோலா(roseola) , வாய்ப்புண்  மற்றும் வயிற்று வீக்கம் ஆகியவற்றில் இருந்து தட்டை தலை நோய்த்தொகை வரை- வயிற்றுப்போக்கு மற்றும் செவித் தொற்றுநோய் முதல் விழிப் பிரச்சனைகள் (சோர்வான கண்கள்- lazy eye) வரை - தெரிந்து வைத்திருத்தல் இன்றியமையாததாகும்.

தனிப்பட்ட குழந்தைகளின் பிரச்சினைகள் என்னென்ன ?

தனிப்பட்ட குழந்தைகளின் பிரச்சினைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது, இதை ஒவ்வொரு பெற்றோரும்  கவனித்துக்கொள்ள வேண்டும். இங்கே படியுங்கள்...

#1. பிறப்பின் பொழுது

உங்கள் குழந்தை பிறக்கும் பொழுது,ஏதேனும் ஒரு பொதுவான அல்லது வழக்கத்திற்கு மாறான, சில  பிறப்புத் தழும்புகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. இப்போதுள்ள கணக்குப்படி, புதிதாக பிறக்கும் குழந்தைகளுள் 80 விழுக்காடு  குழந்தைகள் சில மாதிரியான பிறப்புத் தழும்புக்கு ஆளாகின்றனர்.  'நாக்கு கட்டு'(tongue-tie) எனும் நோயானது குழந்தையை உணவை உட்கொள்ள முடியாத படி செய்கிறது.மேலும்,அவர்கள் பேச்சுத்திறனையும் பாதிக்கிறது. சில குழந்தைகள் பிறக்கும் பொழுது,மச்சங்களுடனும் அல்லது திரும்பிய தலையுடனும் பிறக்கின்றனர். 

டோர்ட்டிகோலிஸ் (Torticolis)

டோர்டிகோலிஸ் என்றால் 'திருகுக் கழுத்து' என்று அர்த்தம். ஒரு குழந்தைக்கு இந்நிலைமை ஏற்பட்டால் அதன் தலை ஒரு பக்கமாகவும்  அதே நேரத்தில் அதன் தாடை ஒரு பக்கமாகவும் திரும்பிக்கொள்ளும். இதனை கோணல் கழுத்து எனவும் கூறுவர். இது பார்க்க வலிமிக்கதாக தெரியும். ஆனால் உண்மையில் அப்படி அல்ல. இதனை பிறவிக் திருகுக் கழுத்து எனவும் அழைப்பர்.(இந்த பிறவித் திருகுக் கழுத்தில் ஒரு வகையே)'. இந்த நிலைமை ஒரு குழந்தைக்கு ஏற்படும் போது ,தன் தலையும் தாடையும் ஒரே பக்கமாக திரும்பிக்கொள்ளும்) இது 250 குழந்தைகளில் 1 குழந்தைக்கு ஏற்படும். அதாவது 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிறவித் திருகுக் கழுத்துக்கான காரணம் என்ன(Congenital Malformation)?

பிறவித் திருகுக் கழுத்துக்கான காரணம் மார்பு எலும்பையும் காறை எலும்பையும் சேர்க்கும் தசையில் ஏற்படும் நெருக்கடியே ஆகும். இதனால் இதை 'பிறவித் தசைப்பற்றுத் திருகுக் கழுத்து' என்கின்றனர்.இது குழந்தை எவ்வாறு கருப்பையில் பொறுத்தப்பட்டிருக்கிறது என்பதின் அமைப்பை பொறுத்தது அல்லது பிரசவத்தின் பொழுது ஏற்படும் விபத்துக்குள்ளான தசையைப் பொறுத்தது.

இந்த பிரச்சனை இருக்கும் குழந்தைகளுக்கு 'klippel feil' எனும் நோய் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஏனெனில் இந்த நோய் இருக்கும் குழந்தைகளுக்கு மற்ற பிரச்சனைகளும் இருக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக,கேட்பதில் அல்லது சிறுநீரகத்தில் கோளாறு இருக்கலாம். இந்த நோய் பொதுவாக மரபுக் காரணமாக வருகிறது. மேலும இது நரம்பு மண்டலம் அல்லது மூளையில் ஏற்படும் கட்டியினால் வளர வாய்ப்புள்ளது.

எப்படி என் குழந்தைக்கு திருகுக் கழுத்து உள்ளது என்பதை கண்டுகொள்வது?

உங்கள் குழந்தை ஒரு புறமாகவே கழுத்தை வைத்திருந்தாலும் அல்லது கழுத்தை அவ்வளவாக அசைக்காவிட்டாலும் மருத்துவரை ஆலோசியுங்கள். மேலும்,ஒரு முக்கியமான அறிகுறி, குழந்தையின் கழுத்தருகில் ஒரு சிறிய கூன் போன்று இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தையிடம் இப்பிரச்சனையை காணவில்லையென்றாலும் மருத்துவர்கள் கண்டுபிடித்துவிடுவர். இந்நோயை குழந்தை பிறந்த இரண்டு மாதத்திற்குள் அறிந்து கொள்ள முடியும்.

எவ்வாறு குணப்படுத்துவது?

ஒரு எழும்புமுறிவு மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக அம்மருத்துவர்கள் குழந்தைக்கு உடற்பயிற்சியையே பரிந்துரைப்பார்கள். அவர்கள் சொல்வதன்படி சரியாக அதை குழந்தைக்கு தவறாமல் செய்தால்,அவர்கள் குணமடைவார்கள். எனவே அந்த உடற்பயிற்சியை எப்படி சரியாகச் செய்ய வேண்டும் என மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளுங்கள் .

குணமாக எத்தனை நாட்கள் ஆகும்?

குணமாவது பெற்றோர்களாகிய நமது கையில்தான் இருக்கிறது. நாம் எவ்வளவு  தூரம் மருத்துவர்கள் சொல்வதை கடைப்பிடித்து குழந்தைக்கு உடற்பயிற்சி அளிக்கிறோமோ,அவ்வளவு சீக்கிரத்தில் குணமாகும். 2-3 மாதத்திற்குள் குணமாகிவிடும்.

மஞ்சள் காமாலை

60 விழுக்காடு குழந்தைகளிடம் மஞ்சள் காமாலை காணப்படுகிறது. இதன் அறிகுறியாக உடம்பு முழுவதும் லேசான மஞ்சள் நிறம் காணப்படும்.சில குழந்தைகளுக்கு கண்கள் லேசான மஞ்சள் நிறமாக காணப்படும். இது பொதுவாக எளிதில் கண்ணில்படாது.

இதற்குக் காரணம் என்ன?

குழந்தையின் உடம்பிலுள்ள இரத்தத்தில் இருக்கும் 'பிளிரூபின்' எனும் ஒரு நிறமானது அதிகரிக்கும் பொழுதே மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் பொழுது, தாயின் சிறுநீரகம் அந்த நிறமத்தை வெளியேற்றும். குழந்தை பிறந்தபின் அதன் சிறுநீரகம் இந்த பணியை செய்வதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளகிறது. இதனால் அந்த நிறமத்தின் அளவு அதிகரித்து தலை முதல் பாதம் வரை மஞ்சள் காமாலை பரவுகிறது.

குணப்படுத்த முடியுமா?

தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கே இது அதிகமாக உள்ளது. ஆனால்,தாய்ப்பால் இதற்கு காரணமல்ல. இதை விரைவில் கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.மருத்துவர்கள் அதற்கு உதவிப்புரிவர்.

இதய முணுமுணுப்பு

பிறந்த குழந்தையின்  இதயத்தின் சத்தமானது 'லப்-டப்' என்பதையும் தாண்டி அதிகமாகவோ அல்லது வேறுவிதமாகவோ கேட்டால், அதற்கு இதயமுணுமுணுப்பு நோய் இருக்கிறது என்று அர்த்தம். சில சமயங்களில் அது இரத்தக்குழாய்களில் இரத்தம் பாயும் சத்தமாகக்கூட இருக்கலாம்.எனவே அதை மருத்துவரிடம் சென்று பரிசோதியுங்கள். பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டால்,இருதய நிபுணரிடம் சிகிச்சை பெறவேண்டும்.

ஆதலால், பெற்றோர்களாகிய நீங்கள்  குழந்தைக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று மருத்துவரிடம் பரிசோதித்து, அதற்கான சிகிச்சையை முறைப்படி உரியகாலத்தில்,செய்யுங்கள். உங்கள் குழந்தையின் நலமான வாழ்விற்கு இது ஒரு முக்கியமான படிக்கட்டாகும். வாழ்த்துக்கள்!

 

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}