• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குழந்தை உளவியல் மற்றும் நடத்தை

0-1 வயது குழந்தையின் தேவைகளை எவ்வாறு புரிந்து கொள்வது?

Radha Shree
0 முதல் 1 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Apr 15, 2021

0 1
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

உங்கள் குழந்தையின் சில அசைவுகள் மற்றும் கை சைகைகளால் என்ன சொல்லவருகிறார்கள் என்பதில் குழப்பமடைகிறீர்களா? முக்கியமாக 0-1 வயது குழந்தைகளின் உடல்மொழியை புரிந்து கொள்வதில் நமக்கு பல குழப்பங்கள் ஏற்படும். அவர்களுடைய சொற்களற்ற தகவல்தொடர்புகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதற்கான எளிமையான குறிப்புகளை பார்க்கலாம்.

0-3 மாத குழந்தைகளின் உடல்மொழி

குழந்தை பிறந்து சில வாரங்களில் அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்த பல சமிக்ஞைகளை வெளிப்படுத்த தொடங்குவார்கள். நீங்கள் குழந்தையின் கன்னத்தை தொடும்போது அது தலையை திருப்பும். குழந்தை  சத்தம், ஒளி மற்றும் எதோ ஒரு காரணத்திற்க்காக திடுக்கிட வாய்ப்புள்ளது, அப்போது கைகளையும் கால்களையும் விரித்துக்கொண்டு அழத்தொடங்கும்.

குழந்தையின் பாதத்தைதொடும் போது அல்லது உங்கள் மீது படும் போது  அடியெடுத்து வைக்க தொடங்கும். நீங்கள் குழந்தையின் உள்ளங்கையில் தொடும்போது உங்கள் விரலை பற்றிக்கொள்ளும்.இந்த செயல்கள் குழந்தைகள் நம்மிடம் எதையும் சொல்ல முயற்சிப்பதல்ல அவை வெறும் ஒரு செயலின் எதிர்வினைகளே.

குழந்தைகளது அனைத்து  செயல்களும் எதிர்வினை என்று சொல்லிவிட முடியாது. நாம் செய்யும் செயல்களுக்கு சிரிக்கிறது என்று மட்டும் பொருள் கிடையாது. இயல்பாக மகிழ்ச்சியான குழந்தையாகவும் இருக்கலாம்.

குழந்தைகள் அழுவது என்றாலே அது பசி மற்றும் தூக்கத்திற்காக மட்டுமில்லை. அதன் தேவைகள் பூர்த்தி ஆகவில்லை என்றாலோ, பயம் அல்லது அசொளகரியத்தாலும் அழும். வலியை உடலை முறுக்கி அழுது வெளிப்படுத்தும். வலியின் தீவிரத்தை கதறி அல்லது மிதமாக அல்லது விட்டுவிட்டு அழுது வெளிப்படுத்தலாம்.

4 - 8 மாத குழந்தைகளின் உடல்மொழி

4 மாத குழந்தை உடல் உறுப்புகள் மூலம் தனக்கு என்ன தேவை என்று தெளிவாக சமிக்கைகள் செய்ய தொடங்குகிறார்கள். தாங்கள் நினைப்பதை செயலாற்றும் ஒருங்கிணைப்பு அவர்களுக்கு வந்துவிடும். அவர்களை தூக்க வேண்டும் என்பதற்கு இரண்டு கைகளை நீட்டுவது. ரொம்ப நேரம் உட்கார பிடிக்கவில்லை என்றால் நாற்காலியிலிருந்து வெளியேற உதைப்பார்கள். அதனுடன் விளையாட்டு பொம்மையை உங்கள் பக்கம் எறிவது என்பதற்கு சைகைகள் மூலம் நம்மை விளையாட அழைப்பதாக அர்த்தம்.

இதே போல் ஒரு சூழ்நிலைக்கேற்ப தேவையானதை பெற நம்மிடம் பல சைகைகளை காட்டுவது அதிகமாகும்.   மேலும் அவர்கள் காதுகளை இழுத்துக் காட்டுவதும், தலையை முன்னும் பின்னுமாக உடுட்டுவதும் அவர்கள் சோர்வாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள்.       

இந்த விளையாட்டு போதும் என்றால் அவர்கள் நம் கண்களை பார்ப்பதை தவிர்ப்பது, அந்த பக்கமாக திரும்பிக் கொள்வது போன்ற சைகைகள் மூலம் இது போதும் அடுத்த விளையாட்டு அல்லது விளையாட்டு நேரம் முடிந்துவிட்டதை வெளிப்படுத்துகிறார்கள்.

9-12 மாத குழந்தைகளின் உடல்மொழி

இந்த மாதத்தில் குழந்தைகள் அறிவாற்றல் சார்ந்து அதிகமான சைகைகளை வெளிப்படுத்துவார்கள். இயக்கம் மற்றும் கை-கண் ஒருங்கிணைப்பு மேம்படுகையில், தெளிவான மற்றும் தகவல்தொடர்பு சைகைகள் உங்கள் குழந்தைகள் இயல்பாக காட்ட தொடங்குவார்கள். முன்பை விட இன்னும் தங்களின் விருப்பங்களையும், தேவைகளையும், விருப்பு வெறுப்புகளையும் எளிமையாக வெளிப்படுத்த தொடங்குவார்கள். பழகிய முகங்களை பார்த்ததும் அரவணைக்க சைகைகள் காட்டுவதும், தெரியாத முகங்களை பார்த்ததும் பதட்டமடைவதையும் வெளிப்படுத்துவார்கள்.

உதாரணத்திற்கு, அவர்களுக்கு பசி எடுத்தால் உணவு பொருட்களின் அருகில் நிற்கலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் பானை அருகில் சைகைகள் காட்டலாம். அதே போல் அவர்களை தூக்க வேண்டும் என்று விரும்பினால் கைகளை உயர்த்தி மூ..மூ என்று சொல்ல தொடங்குவார்கள். பாட்டில் அல்லது ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்றால் அதை சுட்டிக்காட்டி பா..பா என்று சொல்வார்கள்.

இதன் பிறகு குழந்தைகளின் உடல்மொழி வார்த்தைகள், சொற்கள், சொற்றொடர்களாக மாற தொடங்கும்.

உங்கள் குழந்தைகளின் உடல்மொழியை புரிந்து கொள்ள நமக்கு முக்கியமாக தேவைப்படுவது கூர்ந்து கவனிப்பது மற்றும் பொறுமை. நாம் புரிந்து கொள்ள ஆரம்பித்தால் குழந்தைகளின் தேவைகளை நம்மால் எளிதாக கண்டுபிடித்து நிறைவேற்ற முடியும். இனி குழந்தையின் சைகைகளை ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்கள் சொல்ல வருவதையும் சேர்த்து புரிந்து கொள்ளலாம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 6
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Jun 30, 2019

jgj

 • Reply
 • அறிக்கை

| Jun 30, 2019

எனது மளுக்கு 7மாகிறது அடிக்கடி தடிமலால் சழிப்பிரச்சனையும் இருமலும் ஏற்படுகிறது. ஆங்கில மருந்துகளையே பவிக்கிறேன் சுகமாகும் பின் சிறுதுநாட்களில் அதே பிரச்சினை வரும், தீர்க்க நல்லதொரு ஆலோசனையை வழங்கமுடியுமா?

 • Reply | 1 Reply
 • அறிக்கை

| Oct 07, 2019

Super

 • Reply
 • அறிக்கை

| Nov 05, 2019

Three month bby food

 • Reply
 • அறிக்கை

| Jun 26, 2020

En paiyanuku 6 month start. But wights loss dhan aguthu. Mother milk pathala. So nan milk powder tharen wights loss dhan aguthu

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}