• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

தாய்மையில் அவசியம் தூய்மை - கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டியது

Radha Shri
கர்ப்பகாலம்

Radha Shri ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது May 22, 2022

தனிநபர் தூய்மை என்பது வாழ்வின் அடிப்படையான ஒன்றாகும். குறிப்பாக, கர்ப்ப காலத்தில், பின்பற்ற வேண்டிய ஒரு  நல்ல பழக்கமாகும். நீங்கள் உங்கள் கர்ப்ப காலத்தில் தூய்மையைப் பின்பற்றினீர் என்றால் அனைத்து நோய் தொற்றுகளில் இருந்து விலக்கி உங்களை காத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால், நோய் தொற்று நேரடியாக வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கும் அபாயம் உள்ளது. கர்ப்ப காலத்தின் போது அளவான, உணவு மற்றும் தூக்கம் உட்பட உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பற்றி கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், உணவு, உடை, இருப்பிடம் ஆகியவையே வாழ்வின் அடிப்படை. அவற்றில் தூய்மை காத்தோமேயானால் நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு ஏற்படாது. கர்ப்ப காலத்தில் தூய்மையையே குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.   

கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

 நன்றாக கை கழுவுவதன் மூலம் கிருமிகள் மற்றும் வைரஸ்கள் பரவுவதிலிருந்து தடுக்கலாம். உங்கள் கழிப்பறையை உபயோகித்தப் பின்னரும் மற்றும் உணவு உண்ணும் சமயத்திலும் மற்றும் உணவு தயார் செய்யும் முன்னும் உங்கள் கைகளை 20 முதல் 30 விநாடிகள் வரை வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சோப்பு கொண்டு கை கழுவுதல் வேண்டும். 

கைக்குட்டை பயன்பாடு:

இருமல் அல்லது தும்மலின் போது உங்கள் முகத்தை கையால் மூடிக் கொள்வதைவிடச் சிறந்தது கைக்குட்டையை பயன்படுத்துவதேயாகும். ஏனெனில், நோய் கிருமிகள் மற்ற இடங்களில் தங்கிவிடும் அபாயம் உள்ளது. உபயோகித்த துணிகளை சூடான நீரில் துவைத்து அடுத்த முறைகளில் உபயோகிப்பதே நன்மைப் பயக்கும்.

கைபேசி மற்றும் மடிக்கணினி பயன்பாட்டைக் குறைத்தல்:

கர்ப்பவதிகள் கைபேசி மற்றும் மடிக்கணினி பயன்பாட்டைக் குறைத்தல் வேண்டும். ஏனென்றால், கைபேசி மற்றும் மடிக்கணினியில் இருந்து வரும் ஒருவிதமான கதிர்வீச்சுகள் உடலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், உறங்கும் வேலையில் கைபேசியைத் தலைப்பகுதியின் அருகே வைத்திருத்தலையும் தவிர்த்தல் வேண்டும். இல்லையெனில், அக்கதிர்வீச்சுகள் நேரடியாக மூளையின் பகுதியைப் பாதிக்கும். எனவே

பருத்தி ஆடைகளின் பயன்பாடு:

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதோடு, உடுத்தும் ஆடைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தின் போது கட்டாயமாக பருத்தி ஆடைகளையே அதிகம் உடுத்த வேண்டும். அதுவே, உடலுக்கு பயனை விளைவிக்க கூடியதாகும். மேலும், தளர்வான ஆடைகளையே உடுத்துதல் நன்மை பயக்கும்.

கழிப்பிட தூய்மை:

கழிப்பிட தூய்மை மிகவும் முக்கியமானது. ஏனெனில், கர்ப்ப காலத்தில் நோய் கிருமிகள் தாக்குதல் கழிவறை மூலமாகவே ஆரம்பம் ஆகிறது. ஒரு கழிப்பறை சுத்திகரிக்கப்பட்டால், கழிப்பறைகளில் உருவாகும் அனைத்து நோய்களும் தடுக்க படுகிறது. கர்ப்ப காலத்தில் நல்ல தூய்மையான கழிப்பறையை உபயோகிப்பதே நன்மை பயக்கும். கிருமி நாசினிகளைக் கொண்டு கழிப்பறையைத் தூய்மை படுத்த வேண்டியது அவசியம் ஆகும். மேலும், கர்ப்பவதிகள் கழிப்பறையை உபயோகித்த பின்னர் கால்களை நன்றாக கழுவ வேண்டும்.

பல் சுகாதாரம்:

கர்ப்பிணிகளுக்கு வாய் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், வாய்வழி ஆரோக்கியம் இல்லையெனில், கருவின் வளர்ச்சிக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படும். கர்ப்ப காலத்தில் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் சரியான முறையில் பல் துலக்குதல் வேண்டும். நீங்கள் கர்ப்ப காலத்தில் , வழக்கமான சோதனைகளுக்கு செல்லும்போது உங்கள் பல் மருத்துவரைப் பார்ப்பது மிகவும் நல்லது. தாயின் மோசமான பல் சுகாதாரம் நீண்டகால நோய்க்கு வழிவகுக்கும்.

குளியல் முறை:    

தலை முதல் பாதம் வரை தூய்மையான நிலை அவசியம் ஆகும். கர்ப்பவதிகள் தங்களது கழிப்பிட உறுப்புகளை வெதுவெதுப்பான நீரில் கழுவுதல் அவசியமாகும். அதுவே,நோய் தொற்றுகளிடமிருந்து காத்துக் கொள்ளும் செயல் முறையாகும். 

தூய்மையின் முக்கியத்துவம்:

நோய் இல்லாத உடல் நிலை கொண்ட தாய்மார்களே முழுமையான உடல் நலம் உடையப் பிள்ளைகளை உருவாக்க முடியும் ” என்றும் நல்ல உடற்கூறு, நல்ல மன நலம், சமூக நல வாழ்வு பெற்றவர்களே, நல்ல உடல் நலம் மிக்கவர் என்றும் கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதை, நல்ல உடல் நலத்தின் மற்றொரு விளக்கமாகக் கொள்ளலாம். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பதை தாய்மார்கள் உணர வேண்டும். நல்ல தூய்மையான உடல் நிலை மற்றும் சுற்றுச்சூழலே நல்ல மனநிலையை உருவாக்கித் தர வல்லது. அதுவே, சேய்க்கும் ஆரோக்கியத்தை தருவதாகும். தூய்மையுள்ள இடத்திலேயே கடவுள் வாழ்கிறார் என்பதே உண்மை. தாய்மையைக் கடவுளாகப் போற்றும் இவ்வுலகில், அவர்களே தூய்மையின் வடிவமாக இருந்து சேயைப் பெற்றெடுக்க வேண்டும்.

தாய்மையின் தூய்மை:

தூய்மை என்பது தாய்மையின் வடிவமே!

தாய்மையில் தூய்மை காத்தோமேயானால் வாழ்க்கையில் மலர்ச்சி ஆரம்பமே!”

உங்கள் கருப்பையினில் புதிய வாழ்க்கையை தொடங்கவிருக்கும், உங்கள் சிசு சரியானமுறையில் வளர வேண்டும். எனவே, நல்ல உணவு பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதோடு சிறந்த தூய்மையையும் பின்பற்றுங்கள் .இறைவன் ஒவ்வொரு வீட்டிற்கும் எழுந்தருள முடியாது என்பதற்காகவே, தாய் வடிவில் ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பி பராமரிப்பதாகக் கூறி, பெண்ணை இறைவனுக்கு சமமாக போற்றுகிறார்கள்.

தூய்மையான உள்மனம் படைத்த தாய்மையின் உடல்நலமும் தூய்மையானதாக இருக்க வேண்டும் என இக்கட்டுரையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • 1
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| Oct 02, 2019

Mam

  • Reply
  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}