• உள்நுழை
  • |
  • பதிவு
பெற்றோர் கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

Radha Shree
0 முதல் 1 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Jun 16, 2019

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

முந்தைய தலைமுறையை விட இன்றைய இளம் அப்பாக்கள் அதிகமாகவே குழந்தை வளர்ப்பில் பங்கெடுக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் ஒரு குறிப்பிடதக்க மாற்றத்தை கொண்டு வர விரும்பும் அப்பாக்களின் அணுகுமுறை என்ன ? குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு நிதி தேவையை பூர்த்தி செய்வது என்பதை தாண்டி குழந்தைகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்ளுக்கு ஒரு நண்பனை போல் ஊக்கப்படுத்தி முன்னேற்றும் அப்பாக்களின் தொகுப்பு இதோ...

தந்தை சாகருடன் ஆதிரை

நான் ஒரு தந்தையான பிறகு என்னுள் நிறைய மாற்றங்களை நான் உணர்ந்தேன். என் மகள் பிறந்த தருணத்திலிருந்து அவளின் அன்றாட தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன். அவளுடைய விஷயத்தில் நான் ஒரு ஆண் இதெல்லாம் செய்ய மாட்டேன் என்று எண்ணியது கிடையாது. நான் அப்பா ஆனதுக்கு அப்புறம் குழந்தைங்க மேல இருந்த கண்ணோட்டமே மாற ஆரம்பிச்சிடுச்சு.

குழந்தை வளர்ப்புல முக்கியமானது பொறுமை தான். அந்த பொறுமைய நான் கத்துக்கிட்டேன். என்னோட பொண்ணு ஆதிரைக்கு இப்போ 4 வயசு ஆகுது. குழந்தைகள்ல ஆண், பெண் பாகுபாடு பார்க்கிறது எனக்குப் பிடிக்கல. அதனால ஒரு பையனை எப்படி தைரியமா வளர்ப்போமோ, அதே மாதிரி தான் நான் என் பொண்ணை வளர்க்கிறேன். பொம்மைகள் வாங்கும்போது கூட ஆண் குழந்தைன்னா இந்த மாதிரி பொம்மை வாங்கணும்; பெண் குழந்தைன்னா இந்த மாதிரி பொம்மை வாங்கணும் அப்படிங்கிற பாகுபாடு இல்லாம அவளுக்கு என்ன பிடிக்குதோ அதை தான் நான் வாங்கிக் கொடுப்பேன்.

குழந்தை கூட நான் நிறைய விளையாடுவேன். என்னோட ஆஃபிஸ் வேலைகளை முடிச்சுட்டு ரொம்ப டயர்டா வீட்டுக்கு வந்தாலும் குழந்தை கூட விளையாடுற நேரத்தை மட்டும் எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஏன்னா குழந்தைப் பருவத்துல நான் அவகூட இருக்கிற நேரம் எல்லாம் அவ வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத நினைவுகளா இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.

தந்தை சாமுடன் மகிழ்மதி

குழந்தைங்களுக்கு அப்பா, அம்மா தான் பெரிய இன்ஸ்பிரேஷன். நாம பண்ற விஷயங்களை தான் குழந்தைங்க கவனிச்சுக்கிட்டே இருப்பாங்க. அதனால அதுல கவனமா இருக்கணும்னு நான் நிறைய மாத்திக்கிட்டேன். அதனால குழந்தைக்கு நானா எதுவும் சொல்லித்தர மாட்டேன். அவங்களுக்கு அட்வைஸ் எல்லாம் பண்ணக்கூடாது. அதனால இப்போ சாப்பாடு இப்படி சாப்பிடணும், கீழே சிந்தி வீணாக்கக்கூடாது அப்படின்னா நான் அதை செய்வேன். அதைப் பார்த்து என் பொண்ணு கத்துக்குவா.

அவளுக்கு அறிவுரை சொல்றதோ இல்ல அதட்டுறதோ இல்லாம என்னோட வீட்டுல அந்த மாதிரியான சூழலை உருவாக்கி கொடுப்பேன். அதைப் பார்த்தே அவ கத்துக்குவா. குழந்தைங்க எப்பவுமே ரொம்ப சென்சிடிவா இருப்பாங்க. அதனால அவங்கள புரிஞ்சுக்கிட்டு ரியாக்ட் பண்ணனும்.

சில சமயம் நான் வீட்ல இருந்து வொர்க் பண்ணும்போது அவ இடைல வந்து ஏதாவது கேட்டுக்கிட்டே இருப்பா. அப்போ அவளை அவாய்ட் பண்ணாம அவ கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கிட்டு என்னோட வேலையையும் பார்க்கிறதுக்கு நான் கத்துக்கிட்டேன். அவளுக்காக நேரம் ஒதுக்கிறதை மட்டும் எப்பவுமே நான் தவிர்க்கிறது இல்ல.

தந்தை பார்த்தசாரதியுடன் கஸ்தூரி கவின்

இந்த கால குழந்தைகளை வளர்ப்பது என்பது அப்பாக்களுக்கு சவாலான விஷயம். ஏனென்றால் அவர்களுக்கு நிறைய விஷயங்களில் ஒரு அப்பாவாக முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. வேலை நிமித்தமாக தினமும் என் மகனை பார்க்க முடியாது என்பதால் அவனுடன் நான்  இருக்கும் தருணங்களை முழுமையாக கொடுக்க வேண்டும் என்று விரும்புவேன். அவன் வளர வளர அப்பா மகன் உறவு என்பது நட்பு கலந்த உறவாக இருப்பது அவனுக்கும் எனக்கும்  நெருக்கத்தை அதிகரிக்கிறது.

அவனோடு நான் அதிகமாக விளையாடுவேன் அது என்னிடம் கவினுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எவ்வளவு நேரமானாலும் என் வருகைக்காக காத்திருப்பான். நான் அவனோடு கொஞ்சம் நேரமாவது விளையாட வேண்டும் அப்போது தான் அவனுக்கு திருப்தியாக இருக்கும். இந்த விஷயத்தில் எப்போதும் அவனை சந்தோஷப்படுத்தவே விரும்புவேன்

தந்தை புவனுடன் தரன்

தரனின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்தையும், என்னை பொறுத்தவரையில் பரிட்சை போல் உணர்ந்தேன். கங்காரு தன் வயிற்றில் குழந்தையை வைத்திருப்பது போல, நான் அடிக்கடி உணர்வதுண்டு. என் அப்பாவுக்கும் எனக்கும் நடுவில் முதன்மையாக இருந்தது பயம். என்னோட விருப்பங்களை என் அம்மா மூலம் மட்டுமே நிறைவேற்றிக் கொள்ள முடியும். நாம் சொல்லி 4 நாட்கள் கழித்து தான் ரிசல்டு தெரியும்.

இப்போது அவனுக்கு 3 வயதாகிறது. அவனை சாப்பிட வைப்பது என்பது இன்றுவரை எனக்கு சவாலான விஷயம். இந்த விஷயத்தில் என்னை எளிதாக ஏமாற்றிவிடுவான். தரனை பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் எனக்கும் என் மகனுக்கும் நடுவில் இருப்பது ஒரு நட்பாக உணர்கிறேன். அவனுக்கு எது தேவையோ, அதை என்னிடம் நேராக வெளிப்படுத்துகிறான். இந்த நெருக்கம் எனக்கு பிடித்திருக்கிறது .

தினமும், குறைந்தது 2 மணி நேரமாவது அவனுடன் செலவு செய்வதை தவிர்க்க மாட்டேன். என்னோடு பயணம் செய்வது அவனுக்கு பிடிக்கும். வீட்டு காலிங் பெல் அடித்ததும் அவன் ’பு’(அவன் செல்லமாக என்னை கூப்பிடுவான்) என ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}