• உள்நுழை
  • |
  • பதிவு
கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா

சொர்க்க வாசல் பற்றிய கதை - வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்

Bharathi
7 முதல் 11 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 14, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா இம்முறை கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது. 
108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் மார்கழி மாதம் இறுதியிலும் தை மாதம் முதல் நாட்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி விழா

19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலே ஸ்ரீரங்கத்திற்கு மட்டும் வைகுண்ட ஏகாதசி வரும் விஜயநகர பேரரசு காலத்தில் தைத்திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்ட போது மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும் தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தால் எதைக் கொண்டாடுவது எப்படிக் கொண்டாடுவது என கேள்வி எழுந்து உள்ளது. இதை அடுத்து ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி 19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த வைகுண்டஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரியபெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.
அன்று முதல் 19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த வருட வைகுண்ட ஏகாதசி திருவிழா காண முகூர்த்தக்கால் நிகழ்வு ஸ்ரீரங்கம் கோயில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது. தமிழ் மாதம் கார்த்திகை 17ஆம் தேதியும் ஆங்கில மாதக் கணக்கின்படி டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியில் திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது.

ஏன் ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு சிறப்பு வாய்ந்தது?

ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு வரலாறு உண்டு.

திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகி நின்ற ஸ்ரீரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம். அதற்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீரங்கநாதரும் அப்படியே ஆகட்டும் என அருளினார். அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் கோவிலை பொறுத்தவரை, பாஞ்சராத்ர ஆகமம் முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாதம் முன்கூட்டியே வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசி என அழைக்கப்படுகிறது. மார்கழியில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி எனப்படு கிறது. பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல் பத்து உற் சவமும், ராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும்.

பகல் பத்து , ராப்பத்து என்றால் என்ன?

ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால், நான்முகனைப் படைத்தார்.
அந்த பிரம்மாவை வதம் செய்ய இரண்டு அசரர்கள் வந்தார்கள். அவர்களைத் தடுத்த திருமாலிடமும் அவர்கள் சண்டைக்கு வந்தார்கள். அந்த அசுரர்களை அடக்கி வதைத்தார் திருமால். அதனால் நல்லறஇவ பெற்ற அவர்கள், நாங்கள் உம் அருளால் சித்தி பெற்று ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டும் என்று வரம் வேண்டினார்கள்.

அவர்கள் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்ல ஏகாதசியன்று விண்ணகத்தின் வடக்க நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்ய லோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள், மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சொர்க்கவாசல் திருநாளை சிறந்த உற்சவமாக அனைவரும் பூவுலகில் கடைபிடிக்க வேண்டும். அன்று அவ்வாசல் வழியே எழுந்தருளும் அனைவரும் மோட்சம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்தனர். திருமாலும் அதன்படியே அனுக்ரஹித்தார்.அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசி திருநாளாக எல்லா திருமால் திருக்கோயில்களிலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து உற்சவமும் அன்று முதல் 10 நாள் இராப்பத்து உற்சவமும் கொண்டாடப்படுகிறது. பகல் பத்து, இராப்பத்த உற்சவங்களில் ஆழ்வார்களின் பிரபந்தங்கள் முழுவதுமாக எம்பெருமான் திருமன்பு பாராயணம் செய்யப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்சவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது.

திருக்கோயில்களில் திருமாலின் திருவுருவம் நடுவில் பிரதானமாக எழுந்தருளியிருக்க ஆழ்வார்கள் ஒரு புறமம் ஆசார்யர்கள் ஒரு புறமும் எழுந்தருளியிருக்கக்கூடிய இந்த அற்புதக் காட்சியை இந்த இருபது நாள் மட்டுமே தரிசிக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

முதல் பத்து நாட்கள்

முதல் பத்து நாட்கள் திருமங்கையாழ்வாரை முன்னிட்டு கொண்டாடப்படுவது மரபு. இதனை திருமொழித் திருநாள் என்பார். வைகுண்ட ஏகாதசி முதல் பத்து நாள் நம்மாழ்வாரை முன்னிட்டு போற்றப்படுகிறது. இதுவே திருவாய்மொழித் திருநாள் என்பார்.
இராப்பத்த கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைவதாகவும், மீண்டும் நம் பொருட்டு அரங்கன் அவரை நமக்குத் திரும்ப அளிப்பதாகவும் திருவிழா அமையும்.

ஆழ்வார் கோஷ்டியிலுள்ள நம்மாழ்வாரை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தாங்கலாக எழுந்தருளச் செய்து கொண்டு பெருமானின் திருவடியில் சேர்ப்பார்கள். அப்போது ஆழ்வார் திருவுருவம் முழுவதுமாக துளசி தளங்களால் மூடப்படும். இது நம்மாழ்வார் மோட்சம் அடைந்துவிட்டதை குறிக்கும்.
இவ்வாறாக இன்று (14-12-2021) திருவரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழா Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}