• உள்நுழை
  • |
  • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து

2 வது டிரையம்ஸ்ட்டரில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்

Parentune Support
கர்ப்பகாலம்

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 27, 2020

2
நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

நானும் என் பையன் ராஜுவும் இப்போ ஆரோக்கியமா இருக்கிறோம்னா அதற்கு காரணம் நான் என்னோட கர்ப்ப காலத்துல எடுத்துக்கிட்ட உணவுகள் தான்.

கர்ப்ப காலத்துல சரியான உணவு எடுத்துக்கிறது ரொம்ப முக்கியம். நாம சாப்பிடுற சாப்பாடு தான் குழந்தையோட வளர்ச்சிக்கு உதவும். அதனாலேயே பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப காலத்துல என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக்கூடாதுங்கிற கவலை அதிகமா இருக்கும்.

அதுவும் இரண்டாவது டிரையம்ஸ்டர்ல சாப்பிடுற சாப்பாட்டுல நாம அதிக கவனமா இருக்கணும். குழந்தையோட அதிகப்படியான வளர்ச்சி இந்த நேரத்துல தான் நடக்கும். அதனால, அதிக சத்து நிறைந்த சாப்பாடு சாப்பிடுறது ரொம்ப அவசியம்.

இரும்புச் சத்து உள்ள உணவுகள்:

உடம்புல இருக்குற இரும்புச் சத்து உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்து செல்லும். கர்ப்ப காலத்துல இரும்புச் சத்து தான் குழந்தைக்கும் ஆக்ஸிஜனை எடுத்து செல்லும்.

கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து குறைந்தால் இரத்த சோகை, முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு மற்றும் பிரசவத்திற்கு பின் மனச்சோர்வு ஆகிய பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்:

இறைச்சி

சீஃபுட்

பச்சை காய்கறிகள்

தானியங்கள்

பயிர்கள்

பீன்ஸ்

நட்ஸ்

புரோட்டீன்:

கர்ப்ப காலத்துல குழந்தையோட மூளை மற்றும் திசுக்கள் வளர புரோட்டீன் மிகவும் அவசியம். தினமும் நாம சாப்பிடுற உணவுல 100 கிராம் புரோட்டீனாவது இருப்பது அவசியம். தாயின் கருப்பை மற்றும் மார்பக வளர்ச்சிக்கும் புரோட்டீன் அவசியமானது.

புரோட்டீன் நிறைந்த உணவுகள்:

இறைச்சி

முட்டை

மீன்

நட்ஸ்

பீன்ஸ்

பட்டாணி

பயிர்கள்

கால்சியம்:

கால்சியம் குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக உதவியாக இருக்கிறது, மேலும் இது தசைகள், நரம்புகள் இடையேயான இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது

கால்சியம் நிறைந்த உணவுகள்:

பால்

தயிர்

வெண்ணெய்

முட்டை

வெள்ளை பீன்ஸ்

பாதாம்

மத்தி மற்றும் சால்மன் மீன்கள்

கீல், காலே, ப்ரோக்கோலி மற்றும் டர்னிப் கீரைகள்

கால்சியம்-வலுவூட்டப்பட்ட பழச்சாறுகள்

தானியங்கள்

ஃபோலேட்:

கர்ப்ப காலத்துல ஃபோலேட் ரொம்ப அவசியம், இது ஸ்பைனா பிஃபிடா உள்ளிட்ட நரம்புக் குழாய் குறைபாடுகள் வராம இருக்க உதவும். மேலும் முன்கூட்டிய பிரசவ அபாயத்தைக் குறைக்கும்.

ஃபோலிக் அமிலம் பிறவி இதய குறைபாடுகளை குறைக்கவும் உதவுது

போலேட் நிறைந்த உணவுகள்:

கருப்பு-கண் பட்டாணி

பருப்பு வகைகள்

வலுவூட்டப்பட்ட தானியங்கள்

கீரை, முட்டைக்கோஸ், அடர் பச்சை இலை காய்கறிகள்

ஆரஞ்சு

அரிசி போன்ற முழு தானியங்கள்

உணவுகளால் மற்றும் கர்ப்ப காலத்தில் போதிய ஃபோலேட் கிடைப்பது கஷ்டம். அதனால ஃபோலேட் இருக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் டி

வைட்டமின் டி வளரும் குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக உருவாக்க உதவியாக இருக்கும்.

சூரிய ஒளியில் இருந்து விட்டமின் டி நமக்கு நேரடியா கிடைக்குது. அதனால காலையில வாக்கிங் போறது ரொம்ப நல்லது.

வைட்டமின் டி நிறைய இயற்கை உணவுகளில் இல்லை, ஆனால் தானியங்கள் மற்றும் பால் போன்ற பலப்படுத்தப்பட்ட உணவுகளில் வைட்டமின் டி உள்ளது.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்:

கொழுப்பு நிறைந்த மீன்கள்

மீன் கல்லீரல் எண்ணெய்

மாட்டிறைச்சி கல்லீரல்

பாலாடைக்கட்டி

முட்டையின் மஞ்சள் கரு

காளான்

வலுவூட்டப்பட்ட பழச்சாறுகள்

தண்ணீர் சத்து:

கர்ப்பிணி பெண்களுக்கு உடலில் நீர்ச்சத்து மிகவும் அதிகமாக தேவைப்படும். நஞ்சுக்கொடி மற்றும் அம்னோடிக் சாக்கை உருவாக்க நீர் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் நீரிழப்பு என்பது நரம்புக் குழாய் குறைபாடுகள் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியைக் குறைப்பது போன்ற சிக்கல்களை உண்டாக்கும்.

கர்ப்பமாக இருப்பவர்கள் நீரிழப்பு மற்றும் அதன் சிக்கல்களைத் தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

இது மாதிரி நீங்க என்ன சாப்பிட்டீங்க, என்னவெல்லாம் சாப்பிடலங்கிறதை கீழ கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க. அது மத்தவங்களுக்கு உதவும்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}