• உள்நுழை
 • |
 • பதிவு
கல்வி மற்றும் கற்றல்

குழந்தையின் வாசிப்பு திறன் குறைந்திருக்கிறதா? எப்படி திறனை வளர்க்கலாம்?

Bharathi
3 முதல் 7 வயது

Bharathi ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Feb 17, 2022

வழக்கமான ஆண்டுகளைக் காட்டிலும் கோவிட்-19 காரணத்தால் குழந்தைகளின் கற்றலில் 30% இழப்புக்கு வழிவகுத்திருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக குழந்தைகளின் வாசிப்பு திறன் குறைந்திருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது.

வாசிப்பு என்பது ஒரு வியக்கத்தக்க அறிவாற்றல் உள்ள செயல்முறையாகும். வாசிப்பதை ஒரு தனிச் செயலாக நாம் அடிக்கடி நினைக்கும் வேளையில், ஒவ்வொரு முறையும் நாம் புத்தகத்துடன் அமரும் போது, நமது மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுகிறது. ஒரு சிறந்த கற்றல் செயல்பாட்டில், வாசிக்கும் திறன் என்பது அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. வாசிப்பு என்பது இல்லாமல், படித்தல் என்ற செயல்பாடே கிடையாது. வாசிக்கும் திறன் என்பது ஒரு குழந்தையிடம் பயிற்சியின் மூலமாக வார்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி, தொடக்கக் கல்வி நிலையிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

வகுப்பில் வாசிக்கும் பயிற்சி

 • முதலில் குழந்தைகளுக்கு எழுத்துக்களை தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும்.
 • பின்னர் எவ்வாறு எழுத்துக்களை உச்சரிக்க வேண்டும் என்று கற்று கொடுக்க வேண்டும்.
 • ஒவ்வொரு வார்த்தையும் எவ்வாறு வாசிக்க வேண்டும் அடுத்த சொல்லி தர வேண்டும்.
 • தவறாக வாசித்தாலும் பரவாயில்லை என்று வாசிக்க வைக்க வேண்டும்.
 • சொற்களை படிப்பது, எழுதுவது, பேசுவது மற்றும் விளையாடுவதற்கான உறுதியான அடித்தளம் சிறு வயதிலேயே புத்தகங்கள் மீதான அன்பை வளர்க்கிறது.
 • கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற உணர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் அவர்களால் ஒரேமாதிரியான வார்த்தைகளை எளிதாகவும் வேகமாகவும் சரளமாகவும் வாசிப்பதை அதிகப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள், 15 நிமிடங்கள் தொடரும்போது, இந்த உத்தி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
 • பத்திகளை படிக்கும்போது, அவர்களின் விரலின் மீது உங்கள் விரலை வைத்து நகர்த்திக்கொண்டே படிக்க வையுங்கள்.

வீடுகளில் பெற்றோரின் பங்கு

பெற்றோர்கள் முதலில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தானாகவே குழந்தைகள் தாமும் புத்தகங்கள் மீது ஆர்வம் கொள்வார்கள்.

 • முதலில் அவர்களுக்கு காமிக்ஸ் என்ற புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
 • தினமும் ஒரு 10-15 நிமிடத்திற்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
 • அவர்களுடன் சேர்ந்து நாமும் வாசித்து கதை சொல்ல வேண்டும்.
 • சின்ன சின்ன வார்த்தைகளை வாசிக்க கற்று கொடுக்க வேண்டும்.
 • ஒரே கதையை வாசித்து சொன்னால் அவர்களுக்கு சலிப்பு ஏற்படும்.
 • தினமும் ஒரு கதை சொல்ல வேண்டும்.
 • பின்னர் அதை ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர்களை அதே கதையை வாசிக்க வைக்க வேண்டும்.
 • தெரியாத வார்த்தைகளை மீண்டும் சொல்லித் தர வேண்டும்
 • கைபேசியில் வாசிக்க கொடுக்க கூடாது.
 • நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
 • மாதம் ஒரு முறை ஒரு நல்ல புத்தகத்தை வாங்கி கொடுக்க வேண்டும்.
 • புத்தகம் வாசிக்கும் பழக்கம் வந்தால் சிந்திக்கும் திறன் வளரும்.
 • வாசித்த கதையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கூற வேண்டும்.
 • பெரியவர்கள் ஆனதும் நாளிதழ் செய்தித்தாள்கள் தானாகவே வாசிக்க பழகி விடுவார்கள்.

சிறுவயது முதல் ஒரு பிள்ளையை வாசிப்புத் திறனுடன் வளர்த்தால் நாளடைவில் ஒரு சிறந்த செய்தி வாசிப்பாளராக வானொலி அறிவிப்பாளராக மற்றும் ஒரு சிறந்த சொற்பொழிவாளராகவும்  உருவெடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

 • புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடங்களுக்கு குழந்தைகளை கூட்டி செல்வது நல்லது.
 • அவர்களுக்கு நாம் தான் வாசிப்பில் ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
 • நிறைய புத்தகங்களை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும்.

வாசிப்பின் முக்கியத்துவம்

கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்” என்ற பொன்மொழி வாசிப்பின் முக்கியத்துவத்தை எளிதாக விளக்குகிறது.  ஆரம்ப பள்ளியில் படிக்கும் போதே வாசிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரிய வைத்தால், வளர வளர பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு வாசிப்பு ஒரு தடையாக இருக்காது. பெரிதாக வளர்ந்து வேலைதேடி செல்லும் போது வாசிப்பில் கிடைத்த அனுபவம் உதவும்.

நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் போது தேர்வாளர்கள்  படித்தபாடம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்காமல் பொது அறிவு, தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவைகளையே சோதிக்கின்றனர். இவை அனைத்தும் எந்தப் பாடப்புத்தகத்திலும் இருப்பதில்லை. தன்னை சுற்றிலும் நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள செய்தித்தாள் வாசிப்பதிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும் இன்றைய வாசிப்பின் தேவையை.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு கருத்தும் எங்களில் அடுத பதிவுகளை சிறப்பாக்கக்கூடும்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த கல்வி மற்றும் கற்றல் Blogs

Ask your queries to Doctors & Experts

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}