• உள்நுழை
 • |
 • பதிவு
பெற்றோர் குழத்தை நலம் சிறப்பு தேவைகளை

இயற்கை பேரிடரில் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கான ஆலோசனைகள்

Radha Shree
0 முதல் 1 வயது

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Dec 26, 2019

தென் தமிழகத்தை புரட்டிப் போட்டு பெரும் சேத்ததை ஏற்படுத்தியது ’கஜா’ புயல். எப்போதுமே இயற்கை பேரிடரை எதிர்கொள்வது என்பது பெரியவர்களுக்கே கடினமான விஷயம் என்றால் சாதரண இடிக்கும், மின்னலுக்கும் பயப்படும் சிறு பிள்ளைகளின் நிலையை யோசித்துப் பாருங்கள். நமக்காவது புயலை பற்றிய முன் அனுபவம் மற்றும் தகவல்கள் தெரிந்திருக்கும். சிறு பிள்ளைகளுக்குத் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்ற புரிதல் இல்லாமல் பதட்டத்தோடும், பயத்தோடும் இருப்பார்கள்


இங்கே Life is beautiful என்கிற ஆங்கில படத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்தப் படத்தில் வரும் அப்பா கதாபாத்திரம் இறக்கும் வரை நாம் அகதிகளாக அடிமைப்பட்டுள்ளோம் என்பதை மகனிடம் வெளிப்படுத்தவே மாட்டார். மகனைப் பாதுகாக்கவும், மகிழ்ச்சியாக வைக்கவும் war – ஐ விளையாட்டாக மாற்றுவதற்கு அந்த அப்பா திட்டமிடுகிற உத்திகள் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது. நகைச்சுவை, கற்பனை மற்றும் மனோபலத்தோடு தன் மகனை ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பார். யதார்த்த வாழ்க்கையிலும் பிள்ளைகள் சந்திக்கும் எதிர்பாராத இயற்கை பேரிடர்கள் அவர்களை மனதளவில் பாதிப்பு இல்லாமல் உணர வைக்க முயல்வதே நம்முடைய மிகப்பெரிய சவால்.

சூறாவளிக்கு  முன்  பாதுகாப்பு

ஏற்கனவே கடுமையான பாதிப்பை உருவாக்கி சென்ற ’கஜா’ புயலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்னும் ஒரிரு தினங்களில் அடுத்தடுத்து புயல் சின்னம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையங்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதிரி புயல், சூறாவளி, வெள்ளம் போன்ற பாதிப்பு ஏற்படும் போது பிள்ளைகளைப் பாதுகாப்பாகவும், பதட்டமில்லாமலும் வைக்க உதவும் அத்தியாவசியான குறிப்புகளைத் தெரிந்து கொள்வோம்.

 • புயலைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுங்கள் – சூறாவளி, புயல் ஏன் வருகின்றது என்பதை பற்றி பிள்ளைகளோடு பேசுலாம். இதில் யாருடைய தவறும் இல்லை, இயற்கையாக நிகழ்பவை என்ற புரிதலை அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்தாத எளிய வார்த்தைகளில் புரிய வைக்காலம்.

 • ஆபத்து வருவதை ஏற்றுக் கொள்ளவும் – உங்கள் இருப்பிடத்திற்கு பாதிப்பு நேரும் என்றால் ஆபத்தையும், சேதத்தையும் மதிப்பிட்டு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

 • அவசரகால ஏற்பாடுகள் தேவை - அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற உணவுகளை சேமித்துக் கொள்ளுங்கள். அதே போல் நான்கு நாட்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள், பால் பவுடர், பால் பாக்கெட், ஸ்நாக்ஸ் போன்ற உணவுப்பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருட்களை மறந்துவிடாதீர்கள்.

 • இப்போதும் பிள்ளைகளின் விருப்பம் அவசியம் - இருப்பிடத்தை விட்டு வெளியேறச் சொன்னால் பெரியவர்களுக்குத் தேவையான உடைகள், பொருட்கள் எடுத்துக் கொள்வது போல் குழந்தைகளுக்கும் தேவையான பொருட்கள், விளையாட்டுகள், புத்தகங்கள், பெட்ஷீட் போன்றவற்றை அவர்களின் விருப்பத்தைக் கேட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் அவர்களின் பையில் முக்கியனமான மொபைல் எண்களை ஒரு சிறிய டைரியில் எழுதி மறக்காமல் வைத்து விடுங்கள்.

வீட்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சூறாவளியின் போது பாதுகாப்பு

 • உங்கள் இருப்பிடத்தை விட்டு அதிகாரிகள் வெளியேற அறிவுறுத்தினால், வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் சேதம் மிகுந்த சாலைகளை தவிர்க்கவும். வெளியேறும் போது உங்களுடைய பயத்தையோ, பதட்டத்தையோ பிள்ளைகளிடம் எதிர்மறையாக காட்டினால் அவர்கள் மேலும் பயம் கொள்வார்கள்.

 • வீட்டை விட்டு வெளியேறவில்லையென்றால் வீட்டிற்குள்ளேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கிக் கொள்ளுங்கள். ரேடியோ, வாட்ஸ் அப், டிவி மற்றும் நண்பர்கள், அதிகாரிகள், உறவினர்கள் மூலம் அவ்வப்போது இருக்கும் வானிலை அறிக்கையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
  புயலோ, சூறாவளியோ ஓயாத வரை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம். மின் கம்பி, மரங்கள் மற்றும் எதிர்பாராத விதமாக ஆபத்தை விளைவிக்கும் இடங்களின் அருகில் செல்வதை தவிர்த்துவிடுங்கள்.
  பிள்ளைகளிடம் அடிக்கடி ஆறுதலான, நம்பிக்கையான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் அவர்களிடம் தைரியத்தை தக்க வைக்க முடியும்.

 • பிள்ளைகளின் தினசரி நடைமுறைகளை முற்றிலுமாக தவிர்த்துவிடாதீர்கள். உதாரணத்திற்கு, அவர்களோடு விளையாடுவது, தூங்கும் போது கதை சொல்வது, மகிழ்ச்சியாக பேசுவது அவர்களின் அடிப்படை தேவைகள் மட்டுமின்றி வழக்கமாக செய்யும் விஷயங்களை முடிந்தவரையில் நிறைவேற்றவும். இந்த அணுகுமுறையினால் அவர்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் உணர்வார்கள்.

 • இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையைப் பெற்றோர்கள் எப்படி கையாள்கிறார்கள், மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பிள்ளைகள் கவனித்து கொண்டே இருப்பார்கள். பிள்ளைகள் நம்முடைய நேர்மறையான அணுகுமுறையிலிருந்தே கையாளும் திறனைக் கற்றுக்கொள்வார்கள்.

புயலுக்கு பின்னும் கவனம் தேவை

 • புயலின் பாதிப்புகளை டிவி, இண்டர்நெட், பத்திரிக்கை ஆகியவற்றின் மூலம் பிள்ளைகள் அதிகமாக பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 • புயலுக்கு பிறகு பிள்ளைகள் பயமாகவோ, கவலையாக இருப்பார்கள். அதனால் பிள்ளைகளின் நடத்தையில் மாற்றம் தெரிகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது தூக்கத்தில், உண்ணும் பழக்கத்தில், பேசுவதில் மாற்றம் தெரிகிறதா என்று கவனித்துக் கொள்ளுங்கள். ஒருவேலை பிள்ளைகள் பயத்தோடோ, அதீத கவலையாகவோ, ஏமாற்றமாகவோ தெரிந்தால் உளவியல் நிபுணரிடம் ஆலோசனை கேட்கலாம்.

 • மீட்புப் பணிகளில் பிள்ளைகளையும் ஈடுபடுத்துங்கள். அவர்களின் வயதிற்கு ஏற்றப் பணிகளில் பங்கெடுப்பதன் மூலம் உணர்வுகளை கட்டுப்படுத்தவும், கையாளவும் கற்றுக் கொள்வார்கள்.

இந்த மாதிரி தருணங்களில் தான் பிள்ளைகள் பாதுகாப்பையும், தைரியத்தையும், மனோபலத்தையும் நம்மிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள். இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்குத் தேவை அன்பும், ஆதரவும், பாதுகாப்பும், அதை நாம் எப்போதும் கொடுக்கத் தயாராக இருந்தால் பிள்ளைகள் எல்லா சூழலையும் கடந்து செல்லப் பழகிக்கொள்வார்கள்.

 • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த பெற்றோர் Blogs

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}