• உள்நுழை
  • |
  • பதிவு
கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் செய்ய கூடாத வேலைகள்

Parentune Support
கர்ப்பகாலம்

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 26, 2019

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கர்ப்ப காலத்தில் செய்ய கூடாத வேலைகள்

 

கர்ப்பகாலத்தில் வேலைகளை செய்வது மிகவும் நல்லது என்று நினைத்து சில கர்ப்பிணிப் பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய்வார்கள். கர்ப்ப காலத்தில் வேலை செய்வது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்றாலும், ஒரு சில வேலைகளை செய்யாமல் இருப்பது சிறந்தது. ஆரோக்கியமான உணவுகளை உண்பது, உடற்பயிற்சி செய்வது, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் இந்த வேலைகளை கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டாம்.

 

  1. நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது வீட்டை துடைத்து சுத்தம் செய்யும் வேலையை கெமிக்கல்களை பயன்படுத்தி செய்ய வேண்டாம். நீங்கள் வீட்டை துடைத்து சுத்தமாக்க பயன்படுத்தும் டிடர்ஜெண்டுகள், சோப் ஆயில்கள் மர்றும் க்ளீனிக் ஏஜெண்டுகள் போன்றவை கர்ப்ப காலத்தில் சென்சிடிவ்வாக இருக்கும் உங்களது ஸ்கின்னில் அலர்ஜியை உண்டாக்கும்.
  2. கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் அதிகமாக வளைவது ஆபத்தை உண்டாக்கும் வீடு துடைக்கும் வேலையை செய்யக்கூடாது என்ரு சொல்வதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
  3. கர்ப்ப காலத்தில் உங்களது மூட்டுகள் மற்றும் எலும்புகள் மிகவும் மிருதுவாக இருக்கும். எனவே நீங்கள் மிக அதிகமாக உங்களது உடலை வருத்திக்கொள்ள கூடாது. நீங்கள் வீட்டை சுத்தம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால், மாப்களை பயன்படுத்துவது சிறந்தது.
  4. நீங்கள் வீட்டில் பூனை, நாய் வளர்த்துபவராக இருந்தால், கர்ப்ப காலத்தில் அதை கிளிக்க வைக்க வேண்டாம்.
  5. குளியறை மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே இந்த வேளைகளை செய்ய வீட்டில் உள்ளவர்களின் உதவியை நாடலாம்.
  6. துணி துவைப்பதும் கர்ப்ப காலத்தில் செய்யக்கூடாத வேலைகளில் ஒன்றாகும். நீண்ட நேரம் குனிந்து நிறைய துணிகளை துவைப்பது உங்கள் இடுப்புக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்கும். துணி துவைக்கும் இடங்களில்உள்ள சோப்பு நுரைகளால் நீங்கள் கீழே விழக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் என்பதால் இது போன்ற வேலைகளில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும்.
  7. கனமான பொருட்களை தூக்க வேண்டிய வேலைகளை தவிர்க்க வேண்டும். இது உங்களது முதுகு பகுதிக்கு சிறந்தது அல்ல. ஏணிகளில் ஏறுவது போன்ற வேலைகளை செய்வதும் கர்ப்ப காலத்தில் கட்டாயமாக கூடாது. ஒருவேளை இது போன்ற பாதுகாப்பற்ற வேலைகளை செய்ய நேர்ந்தால் நீங்கள் அவசியம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செய்யலாம்.

இந்த கட்டுறையை பற்றி உங்களது கருத்துகளை கீழே பதிவு செய்யலாம்.

  

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}