• உள்நுழை
 • |
 • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் பயணம் செய்தால் என்ன செய்வது?

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 16, 2019

 கர்ப்ப காலத்தில் பயணங்கள் மேற்கொள்வது பற்றி பற்பல ஆலோசனைகள் பலதரப்பிலிருந்து வேறுபட்ட கருத்துக்களாக உங்களை வந்தடையும். சிறந்த தீர்வு எதையும் நன்கு பகுத்தறிய வேண்டும். பொதுவாக, கர்ப்ப காலத்தில் பயணங்கள் மேற்கொள்ளலாம். அப்பயணங்களானது தாய் மற்றும் கருவிற்கு எவ்வித சிக்கல்கள் மற்றும் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தாவண்ணம் பயணங்களை அமைத்துக்கொள்வது அவசியமாகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல்நல குறைவு பிரச்சனைகளால் அவதியுறுவோர் பயணங்களைத் தவிர்ப்பதே அறிவுறுத்தப்படுகிறது.

ஆகவே , கர்ப்ப காலத்தில் பயணங்கள் மேற்கொள்வது பாதுகாப்பனதே. கர்ப்பிணி மற்றும் கருவானது ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் 36 வார காலம் வரை பயணங்கள் மேற்கொள்ளலாம்.

கர்ப்பத்தின் போது பயணத்திற்கு ஏற்ற காலம் :

பயணங்கள் மேற்கொள்வதற்கான சிறந்த காலக்கட்டம் என்பது இடைப்பட்ட கர்ப்ப காலம் ஆகும். அதாவது 14வது வார கர்ப்பம் முதல் 28வது வார கர்ப்பம் வரையிலான காலக்கட்டம் பயணங்களுக்கு உகந்தது.  ஏனெனில் முதல் மற்றும் இறுதி மூன்று மாத கர்ப்ப காலமானது பொதுவாக பெரும்பாலான கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடிய காலமாகும். இந்த இடைப்பட்ட கர்ப்ப காலத்தில் காலை நேர தொய்வு இல்லாமல் இருக்கும். உங்களது ஆற்றல் திரும்ப கிடைக்கும். எனவே சந்தேகத்திற்கு இடமின்றி இவ்விடைப்பட்ட கர்ப்ப காலம் , பயணங்கள் மேற்கொள்ள உடல் மற்றும் மன ரீதியாக மிக உகந்ததாக இருக்கும்.37வது வார காலத்தில் இருந்து அனைத்து கர்ப்பிணிகளும் பயணங்களைத் தவிர்ப்பது சிறந்தது.

கர்ப்பத்தின் போது பயணங்களைத் தவிர்க்க வேண்டியவர்கள் :

ப்ரீஎக்ளம்சியா எனப்படும் உயர் அழுத்தம் தொடர்புடைய பிரச்சனை உள்ளவர்கள், முன்கூட்டிய சவ்வு தகர்வு, குறை பிரசவத்திற்கான வாய்ப்பு உள்ளவர்கள் போன்ற கர்ப்ப கால பிரச்சனைகளால் பாதிப்பில் உள்ளவர்கள் பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கருவினை சுமப்பவர்கள் பயணங்களைத் தவிர்க்கவே அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணம் மேற்கொள்வதற்கு முன் செய்ய வேண்டியவை:

பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்கு பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்வது நல்லது.

பயணத்திற்கு முன், மகப்பேறு நிபுணரிடம் பரிசோதனைக்கு சென்று வருவது நல்லது

உங்களது தீர்மானிக்கப்பட்ட பிரசவ தேதியை அறிந்து கொள்ளுதல் நல்லது. உங்கள் உடன் இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்துதல் அவசியமாகும்.

வலி நிவாரணிகள், முதலுதவி பெட்டி, விட்டமின் மாத்திரைகள் போன்ற மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உடன் எடுத்து செல்லுதல் மற்றும் மருந்து சீட்டுகளையும் உடன் வைத்து கொள்ளுதல் அவசியமாகும்.

தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட்டு கொள்ளுவதை உறுதி செய்தல்.

பயண தூரத்தை அறிந்து, விரைவான வழியைத் தேர்வு செய்தல்

இரத்தக் கட்டு : 

கர்ப்ப காலத்தின் போது பயணங்கள் மேற்கொள்ளும் போது நீண்ட நேரம் அசையாமல் அமர்ந்த படி இருப்பதனால் கால் மற்றும் உடலின் பிற பகுதிகளில் உள்ள நரம்புகளில் இரத்தம் உறைந்து இரத்தக்கட்டுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பின்வருவனவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும்.

திரவ உணவுகள் அதிக அளவில் பருக வேண்டும்.

தளர்வான உடை அணிதல்:

குறிப்பிட்ட இடைவெளிகளில் நடத்தல் மற்றும் கால்களை தளர்த்தி அசைத்தல்

வயிற்றுப்போக்கு :

பயணங்களின் போது உண்ணப்படும் உணவுகள் மற்றும் நீரினால்  வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனைத் தவிர்க்க,

பாட்டில் தண்ணீர் அதிக அளவில் பருகலாம்.

பாட்டிலில் அடைக்கப்பட்ட இயற்கைப் பழச்சாறுகள் பருகலாம்.

பதப்படுத்தப்பட்ட பாலைப் பருகுதல்

தோல் உரிக்கப்படக்கூடிய பழங்கள் (வாழைப்பழம் ,ஆரஞ்ச் போன்றவை) மற்றும் சமைக்கப்பட்ட  காய்கறிகள் தவிர பிற பழங்கள் மற்றும் சமைக்கப்படாத காய்கறிகளைத் தவிர்ப்பது நல்லது.

இறைச்சி மற்றும் மீன்கள் நன்கு முழுமையாக சமைக்கப்படாத பட்சத்தில் தவிர்ப்பது நலம்.

கார் பயணத்திற்கான சில ஆலோசனைகள்:

கார் பயணத்தின் போது உங்களது பயண நேரத்தை முடிந்தவரை குறைக்கலாம். இருக்கை பட்டையை(பெல்ட்) ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் அணிதல் முக்கியமான பாதுகாப்பு அம்சம் ஆகும். இருக்கை பட்டையினை உங்களது இடுப்பு எலும்புக்கு கீழ் மற்றும் வயிற்றுக்கு அடியில் கொக்கியில் மாட்ட வேண்டும். தோள்புற பட்டையினை மார்ப்புகளிக்கு இடையில் செல்லுமாறு அமைத்து கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தங்கள் மேற்கொள்வதும், சிறிது தூர மற்றும் சிறிது நேர நடை பயிற்சி மற்றும் கால்களை அசைத்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

பேருந்து பயணத்திற்கான சில ஆலோசனைகள் :       

பேருந்து இருக்கைகள் சிறிதாக இருக்கும் பட்சத்தில் அசைவின்மையால் தொந்தரவுகள் உண்டாகலாம். எனவே இட வசதி உள்ள பேருந்துகள், படுக்கை மற்றும் கழிவறை வசதி கொண்ட பேருந்துகளைத் தேர்வு செய்தல் நல்லது. பேருந்து புறப்படும் போதும், இயக்கத்தில் உள்ள போதும் அமர்ந்திருத்தல் பாதுகாப்பானது. நீண்ட நேர பயணத்தைத் தவிர்ப்பதும், நீண்ட நேர நிறுத்தங்களில் இறங்கி சிறிய நடை பயணம் மற்றும் கால்களை நீட்டுதல் அவசியமாகும்.

விமான பயணத்திற்கான சில ஆலோசனைகள் :

விமான பயணத்திற்கான பதிவின்போது, பிரசவ தேதியினை மனதில் கொள்ளுதல் அவசியம். 36வது வாரத்திற்கு முன்பே பயணத்தை முடித்து கொள்ளுதல் நல்லது. சில உள்நாட்டு விமான நிறுவனங்கள் கடைசி மாதத்தில் உள்ள கர்ப்பிணிகளை அனுமதிப்பதில்லை. சில நிறுவனங்கள், மருத்துவ சான்றிதழ் அளிக்கும் பட்சத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். சர்வதேச விமானங்களில், அனுமதிக்கப்படும் கர்ப்ப கால வார அளவு உள்நாட்டு விமானங்களை விட குறைவு ஆகும். சில சமயங்களில் 28வது வார கர்ப்பிணிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே பதிவு செய்யும் முன் விமான நிறுவன கொள்கைகளைப் ஒரு பார்வையிடல் அவசியமாகும்.

அல் (aisle) இருக்கைகளைப் பதிவு செய்யலாம். இதன் மூலம் எழுந்திரிக்கவும் , கால்களை நீட்டவும் முடியும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை இவ்வாறு செய்யவும். பயணத்திற்கு முன்பு

 • 11
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Jul 14, 2019

குழந்தை பிறக்க இன்னும் 1 மாதம் மட்டும் உள்ளது குழந்தை பிறந்ததும் தடுப்பூசி எப்போ போட வேண்டும்

 • அறிக்கை

| Jul 11, 2019

sapta mudiyala vamit varuthu

 • அறிக்கை

| Jun 23, 2019

hu

 • அறிக்கை

| Apr 17, 2019

actually my due date is nov. 13 2018

 • அறிக்கை

| Apr 14, 2019

நான் இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன் , இரவு , பகல் நித்திரை செய்வது மிகவும் குறைவு இதனால் எதுவும் பாதிப்பு ஏற்படுமா ??? எனக்கு அடிக்கடி காது வலி வருகின்றது இதனால் என் குழந்தைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுமா?

 • அறிக்கை

| Mar 26, 2019

karupaten pothu thumpal

 • அறிக்கை

| Mar 26, 2019

karupaten pothu thumpal

 • அறிக்கை

| Mar 08, 2019

கருத்தரிக்க தேவை

 • அறிக்கை

| Feb 20, 2019

baby foods

 • அறிக்கை

| Jan 22, 2019

+£*

 • அறிக்கை

| Jan 07, 2019

Please say pregnancy symptoms

 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்
சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}