• உள்நுழை
  • |
  • பதிவு
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சமாளிக்கும் 7 வழிகள்!

Parentune Support
கர்ப்பகாலம்

Parentune Support ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Nov 11, 2019

 7

கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சமாளிக்கும் 7 வழிகள்!

 

கர்ப்ப காலத்துல பெண்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுறது இயல்பான ஒண்ணு. அதை ஈஸியா சமாளிக்கிற 7 வழிகள் என்னென்னன்னு இப்போ பார்க்கலாம்.

 

1. உணவு உண்ணும் முறை : 

கர்ப்ப காலத்துல நம்ம உடம்புல ஹார்மோன் மாற்றங்கள் அதிகமா இருக்கும். கருவுல இருக்கிற குழந்தைய பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வச்சிருக்கிறதுக்காக தான் இந்த மாற்றங்கள் நடக்குது. இந்த ஹார்மோன் மாற்றத்தினால தான் செரிமானம் மெதுவா நடக்குது. அப்போ தான் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் போய்ச்சேரும். அதனால நாம என்ன சாப்பிடுறோம்? எப்போ சாப்பிடுறோம்? எப்படி சாப்பிடுறோம்? இந்த மூணு விஷயத்துல கண்டிப்பா கவனம் செலுத்தணும். மூணு வேளை நிறைய சாப்பிடுறதுக்கு பதிலா, கொஞ்சம் கொஞ்சமா அப்பப்போ சாப்பிடலாம். தூங்கறதுக்கு 2 மணி நேரத்துக்கு முன்னால சாப்பிட்டு முடிச்சிடணும். பொறிச்ச, காரமான, எண்ணெய் உணவு வகைகளை தவிர்த்துட்டா அஜீரணக் கோளாறுகளையும் நம்மால தவிர்க்க முடியும்.

 

2. ஒத்துக் கொள்ளாத உணவைக் கண்டறிதல் :

என்ன சாப்பிடும்போது உங்களுக்கு அஜீரணக் கோளாறு உண்டாகுதுன்னு பாருங்க. சிலருக்கு எலுமிச்சை, திராட்சை இந்த மாதிரி சிட்ரஸ் ஜூஸ் வகைகளை குடிக்கிறதால செரிமானப் பிரச்னைகள் வரலாம். அந்த மாதிரி எது ஒத்துக்கலைன்னு பார்த்து அதை தவிர்க்கிறது நல்லது.

 

3. சில்லுன்னு ஒரு ஸ்கூப் :

ஐஸ் க்ரீம், சில்லுன்னு இருக்கிற தயிர் அல்லது குறைந்த கொழுப்பு உடைய யோகர்ட் இந்த மாதிரி உணவுப் பொருட்களை அஜீரணக் கோளாறு இருக்கிற சமயத்துல எடுத்துக்கிட்டா கொஞ்சம் ரிலீஃப் கிடைக்கும். அதுவும் அளவா தான் எடுத்துக்கணும்.

 

4. தண்ணீர் அவசியம் :

தேவையான அளவு தண்ணீர் குடிக்கணும். இளநீர், மோர், தண்ணீர் இதெல்லாம் அஜீரணத்தை தவிர்க்கும்.

 

5. தினமும் ஒரு ஆப்பிள் : 

தினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக்கிறது செரிமானப் பிரச்னைகளுக்கு நல்லது. ஆப்பிள்ல அதிக இரும்புச்சத்து இருக்கிறதால அஜீரணக் கோளாறை தவிர்க்க அது உதவுது. ஆப்பிள் பிடிக்கதவங்க மாதுளை அல்லது நெல்லிக்காய் எடுத்துக்கலாம்.

 

6.  காஃபி, டீ தவிர்க்கவும் : 

நீங்க காஃபி அல்லது டீ பிரியரா இருந்தா அதிகமா குடிக்காம தவிர்க்கணும். அஜீரணக் கோளாறுக்கு அதுவும் காரணமா இருக்கிறதால அடிக்கடி காஃபி, டீ யை கண்டிப்பாக தவிர்க்கணும்.

 

7. டாக்டரின் ஆலோசனை :

இதையெல்லாம் செஞ்சும் உங்களுக்கு அஜீரணப் பிரச்னை இருக்கா? உடனே உங்க மருத்துவரை சந்திச்சு ஆலோசனை பெறுங்க.

 

இந்தக் குறிப்புகள் உங்களுக்கு எந்த அளவுக்கு உதவியா இருந்துச்சுன்னு கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க.

 

நீங்க இந்த அஜீரணக் கோளாறை எப்படி சமாளிச்சீங்கன்னும், உங்களோட யோசனைகளையும் இங்க பகிர்ந்துக்கங்க.

  • கருத்து
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}