• உள்நுழை
 • |
 • பதிவு
உணவு மற்றும் ஊட்டச்சத்து

கர்ப காலத்தின் உணவு முறைகள்

Ankita Gupta
கர்ப்பகாலம்

Ankita Gupta ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Mar 16, 2021

நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது

கர்ப காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். கரு உண்டான 32ம் நாளிலிருந்து இதயத்துடிப்பை மருத்துவர் கேட்க வேண்டும் . அப்படி இருக்கையில் தான், கரு ஆரோக்கியமாக உருவகம் எடுத்திருப்பது உறுதி ஆகும். ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு தீங்கோ துன்பமோ நேராமல் பார்த்து கொள்வது அப்பெண்ணின்  கடமை ஆகும். பொதுவாக கர்ப்ப காலத்தில் பிடித்ததை சாப்பிட வேண்டும் என்று தோனும். ஆனால் அவ்வுணவு சிசுவிற்கும், அப்பெண்ணிற்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும்.

சராசரியாக ஒரு மனிதரை விட 3௦௦ கலோரிகள் கர்பிணிப்பெண்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. அதற்காக கேக், ஐஸ் கிரீம் போன்ற உணவுகளை சாப்பிட்டு கலோரிகளை ஈடு செய்யக்கூடாது . சத்துள்ள உணவுகளாய் எடுத்துக்கொள்ள வேண்டும் . குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் . மஹாபாரதத்தில் அபிமன்யுவிற்கு கருவறையிலிருந்து செவி கேட்டார் போல், அனைத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் கருவறையிலிருந்தே ஆரம்பம் ஆகிவிடும்.

குழந்தைக்கு உணவு பழக்கம்

அப்படி சீரான முறையில் சிசு வளருவதற்கு மேற்கொள்ள வேண்டிய உணவு பழக்கங்கள் உங்களுக்காக இதோ:

பச்சை காய்கறி மற்றும் பழம்

இக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக நிறைய காய்கறிகளும் , பழங்களும் உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மூல நோய் மிக சாதாரணமான ஒன்றாகும் . இது மலசிக்கலால்  ஏற்படும் ஒன்று. இதை தடுக்க கீரை வகைகளும் , வாழைப்பழங்களும் அதிமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல் பழ ரசங்களாக எடுத்துக் கொள்ளாமல் பழங்களாக உட்கொள்ள வேண்டும். பழசாறுகளில் இனிப்பு சேர்த்து சாப்பிடுவதனால் பழத்தின் நற்பலன்கள் கிடைக்காமல் போகின்றன .

திரவ உணவு

 • தண்ணீர்: சாதாரணமான மனிதரை விட தண்ணீர் அதிகம் பருக வேண்டும் . இது வாந்தி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகும். மேலும் சிறுநீரக  பாதையில் ஏற்படும் தொற்றுகளை சரி செய்ய உதவும்.
 • எலுமிச்சை சாறு: இது புத்துணர்ச்சியை தரக்கூடியது.வைட்டமின் சி அதிகம் உள்ளது. கர்ப்பகாலத்தில் இது, இரும்பு சத்தை சுலபமாக உறிஞ்ச உதவுகிறது.                  
 • இளநீர்: இதில் பொட்டாசியும், மெக்னீசியம் போன்றவை உள்ளன .இது உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். அது மட்டும் அல்லாமல் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.                              
 • மோர்: கர்ப்பகாலத்தில் மோர் எடுத்துக்கொண்டால் கால்சியம் சத்து குழந்தைகளின்

எலும்பு வளர்ச்சிக்கு உதவும்

 • பருப்பு வகைகள் சாப்பிடுவது அவசியம் . பாதாம் ,வால்நட் பருப்புகளை உட்கொள்ளலாம் .இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. முந்திரி பருப்புகள் அளவாக சாப்பிட வேண்டும் . இல்லையெனில் எடை கூடி விடும் . மூன்று வேளை உணவாக சாப்பிடாமல் , உணவை ஆறு வேளையாக சாப்பிட வேண்டும்.
 • காய்ந்த எலந்தைப்பழம் , பேரீச்சம்பழம் , வேக வைத்த சுண்டல், முளைகட்டிய பயறு வகைகளை மாலை வேளைகளில் சாப்பிடலாம்.
 • அசைவம் சாப்பிடுபவர்கள் என்றால் உணவில் மீன், முட்டை கரு ஆகியவை எடுத்துக் கொள்ளலாம்.  எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், வாயு ஏற்படுத்தும் குளிர்பானங்கள் , வெளியில் சமைக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது . தேங்காய் சேர்த்த உணவையும் தவிர்க்க வேண்டும். சீனிக்கட்டுப்பாட்டில் இருந்தால் காய்கறி சூப்புடன் ஆப்பிள், தர்பூசணி , பேரிக்காய், சாத்துக்கொடி ஆகியவை ஒரு கையளவு உணவுடன் எடுத்துக்கொள்ளலாம்.
 • போலிக் அமிலம் கர்ப்பகாலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இது,குழந்தையின் முதுகுத்தண்டில் பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ளும் , மூளையின் முக்கியமான வளர்ச்சிக்கு கைகொடுக்கிறது . உணவு முறைகள் வழியாக இம் அமிலத்தை எடுத்துக்கொண்டாலும் போதுமான அளவு கிடைப்பதில்லை. வைட்டமின், கால்சியம் மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளும் படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இயற்கை உணவுகளான பச்சைக்காய்கறிகள் , முழு தானியங்கள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் மூலமாக இந்த அமிலம் கிடைக்கிறது.
 • கர்ப்பிணிகள் வாரத்தில் மூன்று நாட்கள் வரை குங்குமப்பூ பாலிலோ , தண்ணீரிலோ ஊற வைத்து அருந்தலாம் . இது குழந்தை சிவப்பாக பிறப்பதற்கு மட்டும் உதவாமல் பிரசவ ஜன்னி வராமல் பாதுகாக்கிறது.
 • 35 வயதை எட்டாத பெண்கள் , கர்பகாலத்தில் தினமும் குறைந்தது இருபது நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 35 வயதிற்கு மேல் கர்ப்பம் தரித்தவர்கள் , மருத்துவரின் ஆலோசனை படி செயல்பட வேண்டும்.

எடுத்துக்கொள்ள கூடாத உணவுகள்

 • பச்சைப்பாலை அருந்தக்கூடாது.

 • வேகவைக்காத முட்டைகளை எடுத்துக்கொள்ள கூடாது.

 • உடல் உஷ்ணம், வாயு கிளப்பக்கூடிய உணவு வகைகளை எடுத்துக்கொள்ள கூடாது.

 • கேபின்(caffeine) என்று கூறப்படும் காபி ,டீ, சாக்லேட் ஆகிய உணவுகளை மிகவும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

 • கர்ப்பமான முதல் மூன்று மாதத்திற்கு சாப்பாட்டில் அதிக பூண்டு, வெல்லம், புளி சேர்த்துக்கொள்ள கூடாது . நான்காவது மாதத்திலிருந்து வாயு பிரச்சனையை  தவிர்ப்பதற்கு பூண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

 • கர்ப்பகாலத்தில்  மது அருந்துதல் கூடாது.

ஒரு குழந்தை பிறக்கும் போது தான் தாயும் பிறக்கிராள். அதுவரை அவள் ஒரு பெண்மணியே என்று கூற்று உண்டு.  அப்படிப்பட்ட தாய்மையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுவது அவசியம்.

அவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.

 • 2
விளக்கக்குறிப்புகள் ()
Kindly Login or Register to post a comment.

| May 12, 2019

8 வாரம் 3 நாள் கர்ப்பமாக உலேன் madam. இந்த வாரம் என்ன அறிகுறிகள் ஏற்படும் சௌலுங்க madam

 • Reply
 • அறிக்கை

| Oct 05, 2019

Madam 8 வாரம் 5 நாள்நாள்கர்ப்பம்மாக

 • Reply
 • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs

Ask your queries to Doctors & Experts

Download APP
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}