• உள்நுழை
  • |
  • பதிவு
கர்ப்பம்

கர்ப்பம் பற்றிய சில கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

Radha Shree
கர்ப்பகாலம்

Radha Shree ஆல் உருவாக்கப்பட்டது
புதுப்பிக்கப்பட்டது Sep 18, 2019

தலைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது என யோசிக்கும் பெண்களும், மருத்துவமும் ,விஞ்ஞானமும் அசுர வளர்ச்சி கண்டு இருக்கும்  இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் கட்டுக்கதைகளா சுத்த மடத்தனம் என்பவர்களும் ஒரு நிமிடம் யோசித்து பார்க்கவும். நீங்களோ இல்லை நானோ கட்டுக்கதை என்று தெரிந்தும்  சில சமயங்களில் நம்பவே செய்வோம் இதில் யாரும் விதி விலக்கல்ல. காரணம் இது போன்ற கட்டுக்கதைகளை குறிப்பாக கர்ப்பம் குறித்த கட்டுக்கதைகளை கூறுவோர் நம் நெருங்கிய சொந்தமாகவே இருப்பர். நம் அம்மாவோ, பாட்டியோ, சித்தியோ, அத்தையோ தான் இதை நமக்கு சொல்பவர்களாக இருப்பார்கள்.

ஒரு பெண் கர்ப்பமாகி விட்டால் போதும் அவளை சுற்றி உள்ள ஒவ்வொரும் இதற்கு அது அர்த்தம், அதற்கு இது அர்த்தம் என்று தங்களுக்கு தெரிந்தவற்றையும், செவி வழியாக கேட்டதையும் சொல்ல தொடங்கி விடுவார்கள். கர்ப்பிணிகள் ஏற்கனவே வாந்தி,  மயக்கத்தினால் சோர்வுற்று இருக்கும் வேளையில் இது போல் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்வதை கேட்டு எது பொய்? எது உண்மை? என தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள்.எதை பற்றி பார்க்க போகிறோம் என்று புரியவில்லையா? கர்ப்பம் குறித்து என்னவெல்லாம் கட்டுக்கதை நடைமுறையில் சொல்லப்படுகிறது. அதில் ஏதும் அறிவியல் உண்மைகள் மறைந்து உள்ளதா? இது போன்ற கட்டுக்கதைகளை நம்பலாமா?  வேண்டாமா? இதற்கான அத்தனை விடைகளையும் இப்போது பார்க்கலாம்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 15 பொதுவான கர்ப்ப புராணங்கள்

இதை படிக்கும் நீங்கள் கர்ப்பமாக இருப்பவர்கள் என்றாலோ அல்லது இதற்கு முன் குழந்தை பெற்ற தாய்மார்கள் என்றாலோ இதை படிக்கும் முன் உங்களுக்கு சொல்லப்பட்ட கட்டுக்கதைகள் என்ன? என்பதையும் அதில் நீங்கள் எதை எல்லாம் இன்னும் நம்பி கொண்டு இருக்கிறீர்கள் என்பதை ஒரு முறை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.

#1. பொதுவாகவே நம் ஊரிலும்,நம்மை சுற்றி உள்ள உறவுகளும் சொல்லும் பிரபலமான கட்டுக்கதை கர்ப்பிணி பெண்கள் இரண்டு உணவு  ( ஒரு வேளைக்கு இரண்டு முறை ) சாப்பிட வேண்டும் என்பது. தாயானவள் இன்னொரு உயிரை சுமப்பதனால் ஒரு சாப்பாடு தாய்க்கு ஒரு சாப்பாடு குழந்தைக்கு என்று விளக்கம் தருகிறார்கள். இது முற்றிலும் கட்டுக்கதை ஆகும். அனைத்து சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை கர்ப்பிணி பெண்கள் அவரவர் தேவைக்கு ஏற்றவாறு சரியான அளவில் சரியான வேளையில் எடுத்து கொள்ள வேண்டும்.

#2. கர்ப்பிணி பெண்கள் சுமக்கும் கரு பெண் வாரிசாக இருந்தால் மெதுவாக தான் பிறக்கும் இதுவே ஆண் வாரிசாக இருந்தால் விரைவில் பிறந்து விடும் என்ற கட்டுக்கதையும் பரவலாக நம்பப்படுகிறது. இது முற்றிலும் பொய். பிறக்க இருக்கும் சிசு எப்போது பிறக்க வேண்டும் என்பது கருவை சுமக்கும் அத்தாயின் மாதவிடாய் சுழற்சி முடிவு செய்கிறது. எப்படி? என்று தானே பார்க்கிறீர்கள். இதோ அதற்கான விடை. ஒரு பெண்ணுக்கு  மாதவிடாய் சுழற்சிக்கு எடுத்து கொள்ளும் காலம் இருபத்து எட்டு நாளாக இருந்தால் குழந்தை விரைவில் பிறந்து விடும். இதுவே மாதவிடாய் சுழற்சியின் காலம் இருபத்து எட்டு நாளுக்கு அதிகமாக இருந்தால் குழந்தை சற்று தாமதமாகவே பிறக்கும்.

#3. கர்ப்பமாக இருக்கும் போது செல்ல பிராணிகளிடம்  ( பூனை,நாய்) இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று ஒரு கட்டுக்கதை உள்ளது. ஆனால் உண்மையில் வளர்ப்பு பிராணிகளுடன் கர்ப்பிணி பெண்கள் கொஞ்சி விளையாடும் போது அவர்களின் மன அழுத்தம் நன்கு குறைந்து சுறுசுறுப்பாக காணப்படுவார்கள்.

#4. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சுடு தண்ணீரில் குளிக்க கூடாது என்று நிறைய பேர் சொல்வார்கள்.இதுவும் கட்டுக்கதையே. கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் மிதமான சூட்டில் கொஞ்ச நேரத்திற்கு ( நீண்ட நேரத்திற்கு சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்க்கவும் ) சுடு தண்ணீரில் குளிக்கலாம்.

#5. தேங்காய் தண்ணீர்அதிகம் குடித்தால், குழந்தையின் தலை முடி நன்றாக வளரும் மற்றும் தாய்க்கு அமிலப் பிரச்சனை ஏற்படும் என்றும் சிலர் கூறுகின்றனர்.இது முற்றிலும் கட்டுக்கதை ஆகும் . குழந்தையின் வளர்ச்சியால் தாய்க்கு வயிற்றில் சிறிது வலியோ, ஒருவித உணர்வோ ஏற்படலாம் தேங்காய்  தண்ணீர் தான் தாயின் வயிறு வலிக்கு காரணம் என்பது முட்டாள்தனம்.

#6. தாயின் தோல் மாறுபாட்டைக் கொண்டு குழந்தையின் பாலினத்தை (ஆணா அல்லது பெண்ணா என்று கண்டுபிடிக்கலாம்)அறியலாம் என்று பெரும்பாலான மக்களால் நம்பப்படுகின்றது. இதுவும் கட்டுக்கதையே. பெண்ணிற்கு தோலில் ஏற்படும் பிரச்சனைகள் வைட்டமின் சத்துக் குறைபாட்டால், சுற்றுச் சூழல் மாசுபாட்டால் ஏற்படுவன. இது எவ்வகையிலும் குழந்தையின் பாலினத்திற்கு காரணமாகாது.

#7. கர்ப்பிணி பெண்கள்  நெய் மற்றும் எண்ணெய் உண்பது, குழந்தையினை பிரசவ சமயம் இலகுவாக வெளிவரச் செய்யும் என்று சிலர் கூறுவார்கள். சுத்தப் பொய் மற்றும் கட்டுக்கதை ஆகும். இப்படி உண்பதால், தாயின் உடல் எடை அதிகரிக்குமே தவிர வேறு எந்த நன்மையையும் உண்டாகாது.

#8. கர்ப்பிணி பெண்கள் உணவில் உப்பு சுவை அதிகம் இருக்க வேண்டும் என்று விரும்பினால்( உப்பு சுவை மிகுந்த உணவு பண்டங்களை அதிகம் உண்பது )வயிற்றில் இருக்கும்  சிசு ஆண் என்றும், இதற்கு மாறாக உணவில் இனிப்பு சுவை அதிகம் இருக்க வேண்டும் என்று விரும்பினால் ( இனிப்பு பலகாரங்களை அதிகம் உண்பது ) வயிற்றில் இருக்கும் கரு பெண் என்றும், நம்பப்படுகிறது. இது கட்டுக்கதை ஆகும். சுவையை விரும்புவதும் மற்றும் தேர்ந்தெடுப்பதும் ஒவ்வொரு கர்ப்பிணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும்.

#9. கர்ப்பிணி பெண்களுக்கு நெஞ்செரிச்சல் வந்தால், கருவில் இருக்கும் சிசுவிற்கு முடி அதிகம் கொட்டுகிறது என்ற முட்டாள் தனமான பொய் சில மக்களால் நம்பப்படுகின்றது. இது ஒரு கட்டுக்கதையே, உண்மை அல்ல. கர்ப்பிணி பெண்களுக்கு நெஞ்செரிச்சல் காரமான உணவுகளை உண்பதாலோ, அல்லது கருப்பை பெரிதாவதால் இரப்பையின் வடிவம் மாறி அஜீரண குறைபாட்டாலோ வரலாம்.

#10. கர்ப்பிணி பெண்களின் வயிற்றின் வடிவத்தை வைத்து பாலினத்தை கண்டுபிடிக்கலாம் என சிலர் நம்புகிறார்கள். அதாவது வயிற்றின் வடிவம் பெரிதாக இருந்தால் பிறக்க இருக்கும் குழந்தை பெண் என்றும், வயிற்றின் வடிவம் சிறியதாக இருந்தால் பிறக்க இருக்கும் குழந்தை ஆண் என்றும் ஒரு கட்டுக்கதை உள்ளது. கர்ப்பிணி பெண்களின் வயிற்றின் வடிவத்தை தீர்மானிப்பது கருப்பை வளர்ச்சியும் அவர்களின் உடல் வடிவமைப்பும் ஆகும்.

#11. கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் கை வைத்து பார்க்கும் போது குழந்தையின் இதய துடிப்பு அதிகமாக உணரப்பட்டால், பெண் குழந்தை பிறக்கும் என்றும் இதுவே குழந்தையின் இதய துடிப்பு கை வைத்து பார்க்கும் போது குறைவாக உணரப்பட்டால் பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என்று நம்பப்படுகிறது. இது உண்மை அல்ல கட்டுக்கதை ஆகும். கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பு அதன் உடல் நலத்தை பொருத்து அமைகின்றது.

#12. கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்தல் கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்று ஒரு கட்டுக்கதை பரவி வருகிறது. மருத்துவர்களே கர்ப்பிணி பெண்களின் சுயபிரசவத்திற்காக மிதமான உடற்பயிற்சிகளையும், நடை பயிற்சிகளையும் பரிந்துரை செய்கிறார்கள்.

#13. கனமான பொருட்களை கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் தூக்க கூடாது என்று கூறுவது பாதி உண்மை,  பாதி பொய். மிகவும் கனமான பொருட்களை தூக்குவதனால் முதுகு வலியால் அவதிப்படுவார்கள் என்பது உண்மை அதற்காக குக்கர், தோசைக்கல் போன்ற கொஞ்சம் கனமான பொருட்களை தூக்குவதை தவிர்த்தால் உடல் உழைப்பு இல்லாமல் ஆகி பேறு காலத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு அவதிப்படுவார்கள்.

#14. விமானத்தில் கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்ய கூடாது என்று கூறுவதும் பாதி உண்மை, பாதி பொய். அது உண்மை எனில் விமான நிலையத்தில் ஏன் கர்ப்பிணி பெண்களை அனுமதிக்க போகிறார்கள்? நீண்டதூர  பயணம் எந்த வாகனத்திலும் கர்ப்பிணிகள் செல்ல கூடாது.

#15. கர்ப்பிணி பெண்கள் தலைமுடிக்கு வண்ண சாயங்கள் தடவ கூடாது என்று சொல்வது உண்மையே ஆகும். இப்போது கடைகளில் விற்பனையாகும் சாயங்கள் இரசாயன பொருட்கள் கலந்தவை. அதை தலைமுடியில் தடவுவதால் மண்டை ஓட்டில் இறங்கி இரத்தத்தில் பரவ வாய்ப்பு உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு பார்வை பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.இதற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கையான முறையில் தலைமுடி சாயம் தயாரித்து பயன்படுத்தலாம்.

 

பெண்கள் பேரானந்தம் கொள்வதே தங்களின் பேறு காலத்தில் தான் இது போன்ற இனிமையான தருணங்களில் தேவை இல்லாத கட்டுக்கதைகளை அவர்களிடம் சொல்வதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.இன்னும் சிலரோ ஒரு படி மேலே போய் இந்த மாற்றங்கள் உங்கள் உடலில் இருந்தால் குழந்தை அறுவைச் சிகிச்சையில் தான் பிறக்கும் என்று கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள். கர்ப்பிணி பெண்கள் நல்ல முறையில் குழந்தை பெற்று எடுக்க நல்ல வார்த்தைகள் சொல்லி நலமுடன் பெற்றெடுக்க அவர்களுக்கு  உறுதுணையாக நிற்போம்.

 

  • 4
விளக்கக்குறிப்புகள்()
Kindly Login or Register to post a comment.

| Jul 30, 2019

Karuvil irukum kolanthai boy or girl epdi kandu pidipathu

  • அறிக்கை

| Jan 23, 2019

நான் 14 வாரம் கர்ப்பமாக உள்ளேன்

  • அறிக்கை

| Jan 05, 2019

I am in 7 month pregnancy . I have blood pressure ( BP) . How to cure my problem.

  • அறிக்கை

| Dec 18, 2018

Now i am pregnant for 2months runing 2nd baby. 1st baby ku 7months la high bp vanthathu. Now same problem earlier what can i do

  • அறிக்கை
+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்

Always looking for healthy meal ideas for your child?

Get meal plans
Loading
{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}

{{trans('web/app_labels.text_Heading')}}

{{trans('web/app_labels.text_some_custom_error')}}